சூப்பர்மேன், ஸ்பைடர்மேன் என்ற வரிசையில் ஐயன்மேன் காமிக் புத்தகங்களிலிருந்து படமாக வெளிவந்துள்ளது. ஆயுதம் தயாரிப்பது உலக அமைதிக்காக என்று நம்புவர் டோனி ஸ்டராக். ஆயுத விற்பனையால் செல்வந்தர். அற்புதமான இன்ஞினியர். அவரின் வேலை துனையாக பெப்பர் பாட்ஸ் (மிளகு!). வில்லனாக ஒபாடியா ஸ்டான்.
கதை என்பது தீயவர்களிடமிருந்து நல்லவர்களை காப்பாற்றுவது. அடித்து துவைத்த கதைக் களம். இந்த கதைக் களத்தை எவ்வாறு செயல் படுத்தியிருக்கிறார்கள் என்பதே படத்தின் சுவாரசியம். இரும்பு மனிதன் எப்படி உருவாகிறான் என்பது நம்பும்படியுள்ளது. இரும்பு மனிதனின் வளர்ச்சி மூன்று பாகங்களாக காண பெறுகிறோம்.
படத்தில் வரும் கிராஃபிக்ஸ் அற்புதம். ஆனால் ‘mechanical automation’ தான் நம்மை இரும்பு மனிதனின் அருகில் கொண்டு செல்கிறது. சரி படத்தில் எல்லாம் அற்புதமா என்று கேட்டால், ஆம் என்றே சொல்ல தோணுகிறது. நம்பினால் நம்புங்கள் எனக்கு கார்டுண், காமிக் நாவல்கள் என்றாலே அலர்ஜி. கதை களம், நாயகன் நாயகி இருவரின் உறவு நிலை குழப்பம் – இந்த இரண்டும் பலப்படுத்தியிருக்கலாம்.
காமிக் புத்தக கதை என்பதால் இரும்பு மனிதனை நாம் இன்னும் இரு பாகங்களில் காணலாம்.
இன்று பார்த்த படம் சந்தோஷ் சுப்ரமணியம். நேற்று பார்த்தது நீயா நானா. இரண்டிலும் பேசபட்ட விஷயம் கிட்டதெட்ட ஒரே விஷயம் – பெற்ரோர்கள் பிள்ளைகளிடையே இருக்கும் பனித்தினரயை பற்றி!
ச.சு ‘பொம்மரைலு’ என்ற தெலுங்கு படத்தின் நகல். ரீமேக் ராஜாவின் நான்காவது படம்( ஜெயம், குமரன் …, சம்திங்க் சம்திங்க்…). நான்கு படங்களுமே தெலுங்கில் மிக பிரபலமான படங்கள். தம்பி ரவியின் ஆபத்பாண்டவன். மற்ற ரீமேக் டைரக்டர்கள் போல மூல கதையில் கை வைக்க மாட்டார். எனவே படங்கள் தமிழில் ஹிட். ஆனா எனக்கு எரிச்சலா இருக்கே ஏன்?
சில கேள்விகள்:
சொந்த சரக்கு தலையில கிடையாதா?
என்ன தான் வியாபாரத்தில வெற்றி பெற்றாலும், மனசோரமா ஒரு சொகம் இருக்கா?
‘ஜெயம்’ ரவியின் நான்காவது வெற்றி படம். தணுஷ்க்கு வெற்றிமாறன் அமஞ்ச மாதிரி சீக்கிரம் யாராவது ஜெயம் ரவிக்கு கிடைக்க வேண்டும். இல்லையென்றால் ‘ஜெயம் ரவி’ என்று ஒரு படம் வரும், அதில் அண்ணன் ரீமேக் ராஜா, அப்பா எடிட்டர் மோகன் தலைகள் தான் உருளும். நடனம் என்னவோ உடற்பயிற்சி வாகில் தான் இருக்கு.
என்னதான் கலைமேக்ஸ் ரவிக்கு சொந்தம்னாலும் இறக்கம் எனக்கு வரலை. “இத்தன நாளா ஏண்டா சொல்லலை” என்று அப்பா கேட்கும் பொழுது அத விளக்க சொல்லும் காரணம் நொண்டி சாக்காகவே தோணுது.
ஜெனிலியா – நீர்க்குமிழி, பட்டாம்பூச்சி, பரவா மின்சாரம், வெள்ளேந்தி இதை எல்லாம் சேர்த்தால் வரும் ஒரு கதாபாத்திரம். இந்த படத்தின் அஸ்திவாரம். எங்க அம்மா இந்த படம் பாத்திருந்தா ‘ஏண்டா அந்த பொன்னு கிருக்கு மாதிரி சிரிச்சிக்கிட்டே இருக்கா?’ என்ற கேள்வி வரும். இவ்வகை பெண்கள் படத்தில் பார்க்க ஜாலி, அதோடு சரி…இல்லனா அவர்கள் கணவர்களுக்கு சாரி
இசை ஓ.கே. – தேவி ஸ்ரீ ப்ரசாத் மெலடிகள் வித்தியாச படுத்த வேண்டும். படத்தின் முக்கிய பின்னனி இசை ஒரு ஹிந்தி பாடலை ஞாபக படுத்துகிறது.
ப்ரகாஷ்ராஜ் – வழக்கம் போல கலக்கல். கொஞ்சம் ரவிக்கு உதவியிருக்கலாம்!
விஜய் டிவியில் வந்த போக்கிரியின் நையாண்டி ‘பேக்கரி’. ஒவ்வொரு முறை பார்க்கும் பொழுதும் வயிறு வலிக்க சிரிப்பேன். சொல்ல முடியாத சொகம் என்னனு கேட்டா ‘விஜய்’ டிவியில விஜய கிண்டல் பண்ணது. அதுக்கு அப்புறம் சட்டமொரு இருட்டரை இயக்குநர் சந்திரசேக்கர் அவர்கள் லொள்ளு சபா மக்கள கூப்பிட்டு மன்னிப்பு கேட்க்க வைத்தார். உண்மை கொஞ்சம் சுட்டது போலும்.
போன வாரம் பார்த்த படம் குருவி. பல நண்பர்கள் தடுத்தும் பார்த்த படம். காரணம் அந்த போஸ். அழுக்கா விஜய் தொலைவில் மக்கள் – தட்டிக்கேட்பவன் போல. படம் பார்த்த பிறகு அதுவும் பிடிக்கலை.
திரைப்பட விமர்சகர் மதன் சொல்லுவார் இந்திய திரைப்படங்கள நாம இந்திய கண்ணோட்டத்தில் விமர்சிப்பதே அந்த படங்களுக்கு நல்லது. ஒரு பார்வையாளனா நானும் தமிழ் படங்களை அவ்வாறே பார்க்க விரும்புவேன், விரும்புகிறேன்.
குருவி பட விமர்சனங்களை இரண்டு இடங்களில் படித்தேன் – ஹிண்டு மற்றும் சிஃபி. இரண்டிலும் கில்லி எடுத்த குழுவா குருவியை தந்தார்கள் என்ற கேள்வி. மேலும் சில இடங்களில் படித்தேன் ஆனால் முழுமையா யாரும் தெளிவா சொல்லவில்லை.
கில்லி என்ற படம் ‘ஒக்கடு’ என்ற தெலுங்கு படத்தின் ரீமேக். அதே போல குருவி ‘சத்திரபதி’ என்ற தெலுங்கு படத்தின் தழுவல். இது குருவி பட குழு வாயை திரந்து சொல்லாத ரகசியம்.
படத்தின் இரண்டாம் பகுதியில் வரும் சண்டை காட்சிகள் அனைத்தும் கை சதை இருகும் காட்சி முதற் கொண்டு காப்பி அடிக்கப் பட்டிருக்கிறது. இது குருவி பட சண்டை இயக்கிகுனர் (ராக்கி ராஜேஷ்) அவமான பட வேண்டிய விஷயம். பொயும் பொயும் சண்டை காட்சியவா காப்பி அடிக்கனும். ஆனால் இது ‘Peter Hein’-ன் திறமைக்கு கிடைத்த மறைமுக அங்கீகாறம்.
பாடல் காட்சியமைப்புகள் எல்லாவற்றிலும் ‘சிவாஜி’ பட நேடி! கண்ணை கசக்க வைக்கும் நிறங்கள். தேவையில்லா பிரம்மாண்டம். இடுப்பை கண்ணா பிண்ணா என்று ஆட்டும் நடனம் (?). ‘Yogi – B’ உன் மேலிருந்த நம்பிக்கை பொய்விட்டது.
விஜயின் தோற்றம் – கலைந்த குருவி கூட்டு முடி, நடனமாட ஏதுவான மெல்லிய உடல் காட்டுத்தனமா சண்டை போட்டா – நம்ப முடியலை.
விஜயின் நடிப்பு (?) – கொயம்பத்தூர் குசும்பு – ஊசிப்போன கொழம்பு. சவால் விட்டா யாருமே பயப்படர மாதிரி தெரியலையே (புதிய கீதை மாதிரி). “நான் எல்லா படத்திலும் முழு உழைப்பை கொடுக்கறேன்” – விஜய் அடிக்கடி சொல்லும் விஷயம். இது உண்மையா இருந்தா குருவியின் இரண்டாவது பகுதியில் உடல்வாகும் வார்த்தை வலுவும் ஒன்றா வரலை, விஜய். ஏன் விக்ரம், சூரியா நேற்று வந்த ஆரியாவெல்லாம் மெனக்கெடறாங்கனு புரியுதா? உருவத்தோற்றம் மிக மிக முக்கியம் எல்லா படத்திற்கும் – இதுவே சாஸ்வதம்.
மற்ற விமர்சனங்களைப் போல என்னால் தரணி மீது குறையிருப்பதா சொல்ல முடியவில்லை. அப்படி குறை சொல்பவர்கள் சத்திரபதியை பார்க்கவும். மாஸ் ஹீரோ படம். விஜய் உடம்புல மாஸ் போட்டு வில்லனை எதுத்து பேசினா கண்டிப்பா படம் ஓடியிருக்கும். காத கிழிக்கிற வசனங்களும் தேவையிருந்திருக்காது!
Sing for the moment