தசாவதாரம்: எதிரும் புதிரும்

ஜூன் 17, 2008

அடித்து துவைத்து பிச்சு மேஞ்சி கைதட்டி எல்லாம் செய்தாச்சா? நான் தசாவதாரம் பார்க்க வாய்ப்பு அமையலை. ஆனா… நிறைய “விமர்சனங்கள்கண்ணில் பட்டது.

 

படித்ததில் சில தகவல்கள் சிந்திக்கவும் வைத்தது:

 

  • 10 அவதாரங்கள் தேவையில்லை என்பது பலரது கருத்து. படத்தின் பெயர் தசாவதாரம், அப்படியிருக்க 10 அவதாரங்கள் காட்டியாக வேண்டுமே இது கதைக்களத்தின் நிற்பந்தம். “Cast Away” யில் டாம் ஹங்க்ஸ் தன்னை மட்டும் நாற்பது நிமிடம் படத்தில் காட்டுவார். இது ஒரு படைப்பாளியின் “ego trip”. ஒரு நடிகன், சிறந்த நடிகன், அற்புதமான நடிகன், ஓ.கே. படைப்பாளி என்று பெயர் பெற்ற நடிகர் கமல், தசாவதாரம் தான் அடுத்த அடி என்று நம்பியுள்ளார்.

 

  • வைஷ்ணவ பெருமைகளைப் பொற்றும் படம். 12-ஆம் நூற்றாண்டில் செய்த அறியாத செயலால் 21-ஆம் நூற்றாண்டில் ஏற்படும் மிகப் பெரிய இயற்கைச் சீற்றம் தெய்வம் தந்தது என்று தெய்வ நம்பிக்கையுள்ளவர்கள் சொல்லலாம். ஆனால் விஞ்ஞானத்தை நம்பும் சிலர் இது “Chaos Theory” மற்றும் அது சம்மந்தமான “butterfly effect’ என்று விளக்குகின்றனர். கதையில் சம்மந்தப்பட்டவர்கள் பெரும்பாலும் (முக்கியத் தலைகள்: கமல், சுஜாதா, கிரேசி மோகன்) ஐயங்கார்கள் என்பதால் அவர்களின் சித்தாந்தம் சற்று ஓங்கியிருக்கலாம்.

In essence, Dasa talks about eight characters who are inconsequential as such, but are integrated in a larger picture. Without Bush, the plane would have been called back. Without Shinghen, Govind would be dead. Without the tsunami, the world would have been destroyed. Even Krishnaveni (the old woman) plays a very important role. If she had not put the vial in the idol, maybe Govind would have recovered it then and there and a powerful weapon would have been unleashed. The very fact that it went into the idol meant that it was being accelerated to its destiny. Without Kaifulllah Khan, Govind would have never escaped… the list simply goes on.

 

மேலும் படிக்க…http://sify.com/movies/tamil/fullstory.php?id=14695489&cid=2363

  • சென்னை மட்டுமின்றி மும்பையிலும் தசாவதாரம் கல்லா கட்டுது. படத்தின் முதல் வாரம் தான் பெரும்பாலான படங்களின் தலையேழுத்து நிற்னையமாகும் நேரம், ஆக தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் பெருமூச்சு விடலாம்.

 

சிவாஜி படம் ஏற்படுத்திய பிரம்மாண்டம், எதிர்ப்பார்ப்பு, பெரிய படங்களுக்கு தெற்கிந்தியாவில் சந்தையுண்டு என்று காட்டியது. சிவாஜி படத்திற்கு போட்டியாகவே தசாவதாரம் உருவானது. அதன் படி ஒரு எதிரும் புதிரும்:

 

நாயகன்: ரஜினி 100/100 கமல் 100/100

தயாரிப்பு: ஏ.வி.ம் ஆஸ்கர் ஃபிலிம்ஸ் : நல்ல போட்டி

டைரக்ட்டர்: சங்கர் (ஓ. கே.) ரவிக்குமார் (கமலிடம் சரணாகதி)

இசை: ஏ. ஆர். ரகுமான் (பாட்டு: ஒகே, பிண்ணணி: அதிர்ந்தது) ஹிமேஸ் ராஸ்மையா (பாட்டு: சொபிக்கவில்லை), தேவி ஸ்ரீ பரஸாத் (நல்ல செய்திருப்பதாக கேள்வி)

ஒருஜினாலிட்டி: 80/100 100/100

கதை: 50/100 90/100

மக்கள் ஆதரவு: 100/100 70/100

Tags: