நேற்று தசாவதாரன் பார்த்தேன் ரசித்தேன். அந்த நெட்டையன் கேரக்டர் தேவையே இல்லைனு பலர் சொல்லுராங்க. எனக்கு என்னவோ பலர் சொல்ல மறந்த கதைய இந்த கதாபாத்திரம் சொல்லுவதாக தொணுது.
9/11 க்கு பிறகு முஸ்லிம்கள் மீது ஒரு பயம் சந்தேகம், எல்லா அரசாங்க புலணாய்வு நிருவனங்களிடமும் இருக்கு.
கோவிந்த் (விஞ்ஞானி) கலிஃபுல்லா வீட்டிலிருந்து தப்பித்து செல்கிறான். முன் கதவிற்கு வரும் பலராம் நாயூடுவை (ரா அதிகாரி) தடுக்க கலிஃப்புல்லா கான் வருகிறான். அந்த வீட்டின் முன்னால் முக்காதார் டேய்லர்ஸ் என்ற பலகை. கான் அணிந்திருப்பது பெரிய ஜிப்பா – ஆப்கானியர்கள் போல்.
உடனே பலராம் கேட்கும் முதல் கேள்வி
“நீ என்ன ஐ.எஸ்.ஐ யா? அல்கொய்தாவா?” என்று
அதற்கு கான் பதில் “எல்லா முஸ்லிம்களும் தீவிரவாதிகளல்ல சார். நாங்க இப்ப வேணும்னா ஏழையா இருக்கலாம் ஆனா அந்த மசூதிக்கு நிலம் கொடுத்து எங்க அப்பா ஜான்” என்று சொல்லு பொழுது என் தொண்டை அடைத்தது.
புலணாய்வு துறைகள் இதனை சிந்திக்க வேண்டும். படம் பார்த்தவர்களிடம் ஒரு கேள்வி:
இந்த கதாபாத்திரம் எங்களை ஒரே மாதிரி பார்க்காதீர்கள் என்று சொல்லுகிறதே கேட்க்கவில்லையா?


யாரும் கவனிக்காத ஒரு ஆழமான கருத்தை நீங்கள் கவனித்திருக்கின்றீர்கள்….
உண்மையே!
மயூரேசன் – நன்றி. சொல்லனும்னு எண்ணம் சொல்லிவிட்டேன்.