http://podbazaar.com/view/144115188075857225
பின் எனது 80களின் நினைவுகள்
படத்தில் எனக்கு பிடித்தது, பிடிக்காதது பற்றி ஒரு அலசல்.
http://podbazaar.com/view/144115188075857225
பின் எனது 80களின் நினைவுகள்
படத்தில் எனக்கு பிடித்தது, பிடிக்காதது பற்றி ஒரு அலசல்.
யார் கையில் நம் உயிர்?
நாளை கடை வீதிக்கு செல்ல தயக்கம். அக்கம் பக்கம் பத்து முறை பார்ப்பேன். யார் என்ன பேசுகிறார்கள் என்று கேட்பேன். இரு முறை அதற்கு அர்த்தம் புகட்டுவேன். பலி கொடுக்கப்படும் கால் நடைகளை போல் மிரண்டு நிற்கிறேன். கலக்கம். அரசியல்வாதிகளை திட்டித்தீர்த்தாகீவிட்டது. செய்திகளை தலைகீழாக படித்து ஆராய்ந்தாகிவிட்டது. ஒன்று அல்ல இரண்டல்ல டஜன் கணக்கில் வைக்கிறார்கள் (பன்மை, மரியாதையல்ல). யார் இவர்கள்? என்ன வேண்டுமாம்?
அடிபட்டால் மட்டுமே செயல்படக்கூடிய பாதுகாப்பு அமைப்பு. ஒரு கொலை வழக்கைக் கூட சரியாக துப்புத்துலக்கத் தெரியாத போலீஸ். மீடியா மோகத்தில் வாய்க்கு வந்ததை பேசி நிரபராதியை 49 நாட்கள் போட்டு படுத்தியெடுத்தனர். இப்படிப்பட்ட நிலையில் அரசியல்வாதிகளின் வார்த்தையினை மட்டுமே நம்பும் சூழ்நிலை. எரியும் கொள்ளியில் எது நல்ல கொள்ளி?
சதுரங்க காய்களைக் கூட இவ்வளவு யுக்கித்தியுடன் நகர்த்தி செயல் பட முடியுமா என்று யொசிக்க வைத்துவிட்டனர். இனி பொது பேருந்துகளில் செல்லும் போது இரு முறை அந்த முடிவை பரிசீலிப்பேன்! அஞ்சி நிற்க வைத்தவர்களை கண்டுபிடிப்பார்களா? நம்பிக்கையில்லை, சுத்தமாக இல்லை. 1993 நடந்த மும்பை குண்டு வெடிப்பிற்கே அரைகுறை நியாமே அமைந்தது. பின் கொயம்பத்தூரில் நடந்த அட்டகாசத்திற்கு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அட்சதை போட்டு வழி அனுப்பிவைத்தோம். விரக்தியின் எல்லையில் மனம் தள்ளபடுகிறது.
மனித உயிரின் விலை?
இந்தியாவில் உயிரின் விலை ஒரு லட்சம் மாநில அரசிடமிருந்து, மத்திய அரசிடம் மற்றோரு லட்சம். அடப்பாவிகளா…இதுவும் டிமாண்டு-சப்ளைப் போல் பாவிக்கிறார்களே. கணக்கிலிருந்து ஒன்றிரண்டு குறைந்தால் என்ன? இது தான் இந்தியாவின் மனிதாபிமானமா? இருதைய அறுவை சிக்கிச்சைக் கூட அந்த இரண்டு லட்சத்தில் செய்ய இயலாது! ஒரு பிரஜையை (இறந்த பின்பும்) நடத்தும் விதம் தானே அந்த நாட்டின் மதிப்பீடாக முடியும். இந்தியன் என்பதில் பெருமிதம் கொள்கிறார்களா? கலக்கத்தின் விளிம்பில் மனம்.
இந்தியர்களே நாளை விடியலை காண்பீர்களா?
தோஸ்த்து படா தோஸ்த்து -யுவன் இசைக்கும் நட்புக்கான பாடல்கள் காத்திருந்து கேட்கலாம். பாடலின் முதல் இரு வரிகள் புரியவில்லை. அது என்ன “சவுத்…”?
கோடான கோடி - மத்திய ஆசிய மற்றும் ஆரபு நாட்டின் இசை கலவை. தீ பிடிக்க தீ பிடிக்க பாடலை நினைவூட்டுகிறது. ஆட்டம் போடக்கூடிய பாடல். ரைனாவின் குரல் வசீகரம்.
நிமிர்ந்து நில் – ஓய் ஓய் ஓய் நிமிர்ந்து நில், இந்த பாடல் வகையை யுவன் வல்லவன் மற்றும் தாஸ் படங்களில் செய்துள்ளார். ஆனால் சங்கர் மஹாதேவன் குரல் பாட்டிற்கு ஒரு அழகிய திமிரை தருகிறது. லாகானில் ச்லெ ச்லோ போல பாடலின் வரிகள் தட்டி எழுப்ப வருகிறது.
மாப்பிள்ளைக்கு – கல்யாண வீட்டு பாட்டு. ப்ரேம்ஜி அமரன் ராப் பாடல் பாடிப் பாடி வார்த்தை நழிவுது தழுவுதுனு பாடுராரு. கண்டிப்பா எங்கேயோ கேட்ட பாடல், முக்கியமா காதலர் தினம் ஞாபகம் வருது (டாண்டியா ஆட்டம்). எஸ்.பி.பீ.சரண் குரல் தனியாக தெரிகிறது.
சீக்கி சீக்கி – “அந்த ஆதியும் அந்தமும் பெண்ணிடம்” என்று ஸ்ரீகளின் தாளம். யுவன் மற்றும் யுவதிகள் ஆட்டம் போடலாம். கண்டிப்பா எங்கேயோ கேட்ட பாடல். இப்போதைக்கு கள்வனின் காதலியின் இவன் கட்டில் நாட்டு மன்னன் தான் என்பது உதிக்கிறது.
மை லைஃப் – ஒரு தனி ஆங்கில பாடல் உள்ளது. தான்வி மற்றும் குழுவினர் பாடியுள்ளனர்.
http://www.guruji.com/music?q=Saroja&cat=d0,albumtitle
நல்ல கலவை. முதலில் கொஞ்சிக் கொஞ்சி யாரும் பாடாதது ஆறுதல். அடுத்து புதிய முயற்சிகளை காண முடிகிறது. அது மட்டுமில்லாம் எந்த தயக்கமுமில்லாமல் ஒரு தனிக் குழுவின் பாடலை தன் ஆல்பத்தில் சேர்த்த யுவனுக்கு ஒரு ‘ஓ’. பல நாட்கள் கழித்து யுவன் ஆல்பம், ஒரு நல்ல ஆரம்பம்.
கடவுளே கடவுளே என்னை ஒரு பாரபட்சமற்றவனா ஹெரிஸ் ஜெயராஜின் சத்தியம் பாடல்களை கேட்கவிடு.
கடவுள்: ”நானே ஹெரிஸ திருத்த முடியாமா முழிக்கறேன்”.
நான்: “மன்னிக்கனும் சாமி”.
ஆசைக்குமளவிருக்கு!
சத்தியம் இசை வெளியீடு வழியா பத்து வருடங்களா ஒரே தாளம், ஒரே விதமானா பாடல் வகை (genere), ஒரே விதமான பாடல் வரிகள், ஒரே விதமான பாடகர்கள் என்று நம்மை மலரும் நினைவுகளுக்குள் அழைத்துச் செல்கிறார் ஹெரிஸ். சத்தியத்தின் பட்ஜெட் 27 கோடி என்று சிஃபியில் படித்தேன். பணத்திற்கும் கிரியேட்டிவிட்டிக்கும் சம்மந்தமில்லை என்பது சிவாஜி ஏற்கனவே பாடம் புகட்டியதால் நான் வாயை பொளக்கவில்லை.
குற்றபத்திரிக்கை படித்தாலும் ஹெரிஸ் ஜெயராஜின் இசையைப் போல எல்லாம் கேட்டதுதானே என்று சொல்லபோறீங்க. ஆனா இத தப்பித்தவரி ஹெரிஸ் ஜெயராஜ் படிக்க நேர்ந்தால் அவருக்கு கேட்கட்டுமேனு எழுதறேன்.
குற்றச்சாட்டு 1
பாம்பே ஜெயஸ்ரீ – ஹெரிஸ், தாங்கல ஹெரிஸ். எஸ். பி. பாலசுப்பரமணியம் இளையராஜாவுக்கு பல பாடல்களைப் பாடினார். இதில் எத்துனைப் பாடல்கள் ஒரே மாதிரி இருக்கு? ஆனா பாம்பே ஜெயஸ்ரீ பாடராங்கனாலே அது என்வோ கொஞ்சிக் கொஞ்சி எதோ பண்ணுறாங்க. பாடல் காதுல விழுந்துடாத மாதிரி பாத்துக்குறீங்க. இப்போ சமீபத்துல ஜீ.வி. பரகாஷ் ஒரு படி மேலே போய் பாம்பே ஜெயஸ்ரீய இரண்டு கட்டைல பாட வெச்சார் (மின்னல்கள் கூத்தாடும்). எல்லாம் உங்க தாக்கம் தான் ஹெரிஸ். பாம்பே ஜெயஸ்ரீ – நீங்க நல்லா பாடினாலும் அலுக்கும் நிலைக்கு தள்ள படுமளவுக்கு பாடியச்சு. வேண்டாம் வலிக்குது…அழுதுடுவேன் (வடிவேலு பாணியில்).
குற்றச்சாட்டு 2
ஒரு குத்து, ஒரு இண்ட்ரோ, இரண்டு கொஞ்சும் பாடல், ஒரு வேற்று மொழி பாட்டு (உளறல்) அப்படினு ஒரு சூத்திரத்தைக் கொண்டு செயல் படுவது – ஹெரிஸ் நீங்க ஏ.அர்.அர் கிட்ட சிறிது காலம் வேலைபார்த்தாக கேள்வி. அவர் எத்துனை வகைகளில் பாடல் இசை அமைக்கிறார். அப்படியிருக்க உங்கள் ஆல்பங்களில் பாடல் வகைகள் நான்கை மட்டுமே பெரும்பாலும் காண முடிகிறது. மின்னலேவில் என்ன செய்தீர்களோ அதே தான் இன்று வரை செய்து வருகிறீர்கள். மாற்றம் வேண்டாமா?
குற்றச்சாட்டு 3
உளறல்கள். உங்கள் பாடல்களிடையில் பல உளறல்களைக் கேட்க முடிகிறது – இதற்கு கெசட்டிலோ சி.டி.யிலோ விளக்கமிருப்பதில்லை. முதலில் என் நண்பன் ‘Strange in the Black’ கேட்டவுடன் சாமியாருங்க எதோ யாகம் பண்ணுறாங்கனு சொல்ல நானும் ஹெரிஸ்க்கு பக்தி முத்தி போச்சுனு நினைத்தேன். இப்ப செல்லமே செல்லமே பாடலில் ஜப்பானிய மொழி, உன்னாலே உன்னாலேவில் வரும் ஜூன் போனால் பாட்டில் ஸ்பானிஸ் மொழியையும் உபயொகப் படுத்தி ஆங்கில கலப்பெல்லாம் ஒன்னுமில்லைனு நம்மளக் கலங்கடிக்கறீங்க. மக்களுக்கு புரிந்தால் சரி.
கடவுளே கடவுளே ஹெரிஸ் கிட்டேந்து அந்த கம்ப்யூட்டர் திருட்டுப் போனா என்னவாகும்? ஆதித்தியன் சார் நீங்க அமரன் மூலமா அறிமுகமாகி அசத்தலான ஒரு ஆல்பம் கொடுத்தீங்க. ஆனா அதுக்கப்புரம் தான் தெரியவந்தது சவுண்டு இன்ஞினியர் வெற இசையமைப்பாளர் வெற என்று. இப்ப நீங்க ஜாலியா முண்டாசு கட்டிக்கிட்டு ஜெயா டீவில சமைக்கறீங்க. சார் அப்படியே நம்ம ஹெரிஸையும் கூப்பிட்டு சமையாலாவது சொந்தமா சுவையா செய்ய சொல்லிக் கொடுத்தா நல்லாயிருக்கும்.
ஹெரிஸ் கொஞ்சம் அந்த ஸ்டூடியோவ விட்டு வெளிய வந்து மக்கள் எத கேட்க விரும்பராங்கனு பாருங்க. உங்களுக்கே உங்க பாடல்கள் போரடிக்கலையா? இதுக்கு மேலே நான் ஒவ்வொரு பாட்டை வேறு விமர்சனம் செய்யனுமா? சத்தியமா வேண்டாம்.
அக்கம் பக்கம் என்ற ஒலிப்பதிவினை பாட்பஸாரில் தொடங்கியுள்ளேன். எனது இரண்டாவது ஒலிப்பதிவில் தமிழ் பற்று என்ற தலைப்பில் பேசியுள்ளேன்.
ஒலிப்பதிவின் சாராம்சம்:
- இன்று தமிழ் மொழியின் வளர்ச்சி எப்படி பார்க்கப்படுகிறது.
- கொள்கைகளை சுமக்கும் மனிதர்களின் கூடாரமாக தமிழ் மாறிவிட்டதா?
- வேற்று மொழிச் சொற்களை ஏன் அறவணைக்க வேண்டும்.
- தமிழ் மொழியிக்கு விஞ்ஞானத் தாக்கம் அதிகம் தேவைப்படுகிறது.
கேட்டுவிட்டு உங்கள் கருத்தகளைச் சொல்லலாம்.
ஜொக்கர் சூப்பர். சண்டைக்காட்சிகள் அற்புதம். இந்த மாதிரி படத்துக்கு தான் ஹை டெஃபினிஷன் கண்டுபுடிச்சாங்களோ?
சென்ற மூன்று மாதங்களில், சக்கரகட்டி, ஏ.அர். ரஹமானின் மூன்றாவது பாடல் ஆல்பம். வழக்கமா எ.அர்.அர் வருஷத்துக்கு நாலு இந்திய படங்களுக்கு இசையமைத்தால் பெரிய விஷயம். இப்ப எ.அர்.அர் பொட்டு தாக்குரார். இசைய விமர்சனம் செய்ய சற்று தயங்கினேன். இதற்கு முக்கிய காரணம் ஏ.அர்.அர் இசையமைத்தாலே அதற்கு ஈடு இணையில்லை என்று எண்ணும் ‘ரசிகர் கூட்டம்’. அப்படி பயந்தா வேலைக்கு ஆகுமா என்ன? சரி நேரா விமர்சனத்தில குதிப்போம்.
சாந்தனுவின் முதல் படம் சக்கரகட்டி. சாந்தனு நடிகர் பாக்கியராஜின் மகன்.
1. டாக்ஸி டாக்ஸி – சாந்தனுவின் அறிமுகப் உச்சக்கட்ட பாடல் என்று நினைக்கிறேன். ஆனா ஏன் டாக்ஸி டாக்ஸினு பாடுறாங்கனு புரியலை. பளாசீ, பென்னி தயால் மற்றும் ஜாவத் அலி பாடியுள்ளனர். நல்ல தாளம் இருக்கு. கண்டிப்பா ஆடலுக்காக இசைக்க பட்ட பாடல். பாடல் வரிகள நேரா குப்பைல பொடலாம். என்ன பாடுராங்கனு அவங்களுக்கு புரியல நமக்கு தமிழ்ல பாடலாமேனு தொனுது! நா. முத்துகுமார தூக்கத்துல எழுப்பி பாட்டெழுத சொன்னதால வாய்க்கு வந்தத ஒளறி வெச்சுருக்கார். “ஆசம் டாக்ஸி”னு அப்பப்ப ஒரு பெண் குரல். எதுக்கு இந்த எக்ஸ்டரா வேலைனு தெரியலை. பளாஸியின் ராப் எல்லாம் புளிச்சி போச்சு.
2. மருதாணி விழியில் ஏன்? – அட என்ன அர்த்தம். கண்ல மருதாணி அப்படியே மூக்குல சக்கரகட்டியிருந்தா? இந்த பாடல் சிவாஜியில் வரும் வாஜி வாஜி வாசமிருக்கு. மதுஸ்ரீ தன் வழக்கம் போல தமிழ முழுங்கறாங்க. (எ. கா.) பாலையும் ‘கல்’லாய் பார்க்கிறாய்.
3. ஐ மிஸ் யூ டா – பாட்டு ஒரு சலனம் நிறைந்த குரல் பாட தொடங்குகிறது (சின்மையீ). சுத்தமா எந்த வகையிலும் (genre) இந்த பாடல சேர்க்க முடியாது. உடனே இது தான் ஏ.அர்.அர் பலம்னு சப்ப கட்டுகட்டாதீங்க. நிசமாவே பொரடிக்கும் பாடல் தான், தூக்கம் வருது.
4. எலே – பாட்டின் மெட்டு நல்லாயிருக்கு. ஸ்காட்லேண்டு/ஐயர்லாண்டு நாட்டுகளின் பாரம்பரிய இசையின் வயலின்களை கேட்கலாம். மௌத்தார்கன் பாட்டினை மெருகேற்றுகிறது. வழக்கம் போல நா. முத்துகுமார் சொதப்பல் வரிகள். நரேஷ் ஐயர் மற்றும் கிருஷ் இந்த பாடலை பாடியுள்ளனர் ஆனால் எனக்கு கார்த்திக்கின் குரலே கேட்கிறது.
5. சின்னம்மா சிலக்கமா – இந்த பாடல் மீனாக்ஷி (meenaxi) என்ற ஹிந்தி படத்திலிருந்த அப்படியே எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ரஹ்மான் இசையமைத்த படம் தான். நடனமாடக் கூடிய பாடல்.
6. நான் எப்போது பெண்ணானேன்? – இந்த பாடல் மீனாக்ஷி என்ற ஹிந்தி படத்திலிருந்த அப்படியே எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் என் மனத்திற்கு மிக நெருங்கிய பாடல் இது (ஹிந்தியில்). ஒரு நலிணம் காண முடியும். ரீனா பரத்வாஜ் குரல் இந்த பாடலின் அழகை கூட்டுகிறது. ஹிந்தியிலும் இவரே பாடியுள்ளார்.
ஏ.ஆர்.அர் வெளியிட்ட மற்ற இரு சமீபத்து ஆல்பங்களை விட இதில் பாடல்கள் மிகவும் சுமார். ‘எலே’ தவிர எந்த பாடலிலும் புதுமையில்லை. பாடல் வரிகளுக்கு பாடலாசிரியருக்கே அர்த்தம் தெரியுமானு தெரியலை. உதயா, வரலாறு போல் மறக்க வேண்டிய வெளியீடு. கடைக்கு போய் “தாம் தூம்” மற்றும் “சக்கரகட்டி” இருந்தா நான் தாம் தூம் வாங்குவேன்.
ஓ படம் அவ்வளவு தானா, முடிந்திவிட்டதா என்று எழுந்து வந்தேன். வீட்டிற்கு வரும் வழியில் நண்பர்கள் யாரும் வாயைத் திரக்கவில்லை. இங்கு மௌனம் சம்மதத்தாலல்ல. இவ்வளவு மொசமாக படம் எடுக்க முடியுமா என்று தான்.
ஹென்காக் (வில் ஸ்மித்) சூப்பர் ஹீரோ படம். ஆனால் டி.சி. காமிக்ஸ் போன்ற புத்தங்களிலிருந்து வெளிவந்த கதாபாத்திரமல்ல. எனவே படம் தொடங்கியவுடன், தவறுகளை கட்டுப்படுத்தும் பொழுது ஹென்காக்கால் ஏற்படும் சேதங்களை காட்டுகிறார்கள். மக்களை தீயவர்களிடமிருந்து காப்பாற்றினாலும் அவன் செய்யும் சேதங்களால் லாஸ் ஏஞ்சல்ஸ் நகர மக்களவனை வெருக்கின்றனர்.
ஹென்காக் சட்டத்திற்கு மேல் அல்ல என்று சி.என்.என் அவனை உள்ளே தள்ள வேண்டும் என்றும் போராடுகிறது. இந்நேரத்தில் ஹென்காக்கிற்கு மக்கள் தொடர்பில் (பி.ஆர்.ஓ) தேர்ந்த ஒருவருடன் நட்பு ஏற்படுகிறது. அந்த பி.ஆர்.ஓவிற்கு மனைவி மற்றும் மகன். பி.ஆர்.ஓவின் அறிவுரைப் படி “நீ சிறைக்குச் செல் பின் அவர்களே உன்னை ஊரைக் கட்டுப்படுத்த அழைப்பார்கள்” என்கிறான். ஹென்காக் சிறையிலிருக்கும் பொழுது பி.ஆர்.ஓ ஒரு சூப்பர் ஹீரோவிற்கு அடையாளம் வேண்டும் என்று ஒரு யூநிஃபார்மை தருகிறான். ஹென்காக் அதனை அரை மனத்துடன் ஏற்றுக் கொள்கிறான். பி.ஆர்.ஓ சொன்னது போல் போலீஸ் ஹென்காக்கை அழைக்கிறார்கள். ஹென்காக் மக்கள் ஆதரவை பெருகிறான்.
படம் இத்துடன் முடியவில்லை. தான் குண்டுகள் பட்டாலும் கல் போல் இருப்பதும், என்றும் இளமையாக இருப்பதும் ஏன் என்ற கேள்விகளுக்கு விடையைத் தேடுகிறான் ஹென்காக். இங்கு தான் படம் டப்பா டென்ஸ் ஆடுகிறது. முதல் பகுதியில் தான் ஒரு காமிக் புத்தக ஹீரோவல்ல என்பதை நிலை நாட்ட மிகவும் போராடிய வில் ஸ்மித் இந்த பகுதியில் காமிக் புத்தக நாயகனுக்கான அத்துனை வேலைகளையும் செய்கிறான். பி.ஆர்.ஓ வின் மனைவியாக சார்லீஸ் தெரான். இவர் மிகவும் வயதானவராக சில இடங்களில் தெரிகிறார். இவரது ‘ஏவான் பளக்ஸ்‘ [சூப்பர் ஹீரோயினாக வந்து படம்] கவிழ்ந்தது ஞாபகமிருக்கலாம்.
சில இடங்களில் நன்றாகவே சிரிக்க முடிகிறது. ஹென்காக்கின் நிலைக்கு என்ன காரணம் என்ற கதை மிகவும் சொதப்பல். படத்தின் மற்ற உழைப்பை எல்லாம் இந்த இடம் அழித்துவிடுகிறது. படம் எதிர்பார்க்காத நேரத்தில் பட் என்று முடிகிறது. நாமலும் சரி ஜூட் என்று ஜகா வாங்குகினோம்!
நட்சத்திரங்கள்: **
ஆத்தீகம் நாத்தீகம். என்னடா புலிச்ச விஷயமா இருக்கே இத பத்தி எழுதனுமானு யொசிச்சேன். ஆனா இத பத்தி சிந்திக்க சிந்திக்க பல பரிமாணங்கள காண முடிகிறது.
இந்த பதிவு எந்த மதத்தையோ அல்ல சாதியையோ போற்றி பேசலை. டிஸ்களைமரில்லாம இவ்வளவு பதிவுகள போட்டேன். ஆனால் சில லூசுங்க வேர்ட்பெரஸ் பக்கம் சுத்திக்கிட்டுருப்பதால் முதலிலேயே சொல்ல வேண்டியுள்ளது.
கமலஹாசன்
இவரின் தசாவதாரம் பலரைக் குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. இவருக்கு கடவுள் நம்பிக்கை இல்லை என்று நம்பிக்கையுள்ளவர்களும்; கடவுள் நம்பிக்கை இல்லை என்று நம்பிக்கையில்லாதவர்களும் கூறுகின்றனர். நடிகர் கமல் பத்திரிக்கையாளர் சுதாங்கனிடம் சொன்ன ஒரு விஷயம்: கிருபாநந்தவாரியார் அவர்கள் தான் கட்டும் முருகன் கோயிலுக்கு காணிக்கை கேட்கிறார். கமலும் அதனை மறுக்காமல் கொடுக்கிறார். [நாத்தீக] நண்பர்கள் கண்டிக்கின்றனர். ஆனால் தன் தமிழாசானாகக் கருதுகின்ற வாரியாரிடம் எப்படி முடியாது என்பது? என்ற கேள்வியை எழுப்புகிறார் கமல்.
செல்வராகவன்
இயக்குனர் செல்வராகவன் பற்றி அவர் தம்பி தனுஷ் கூறியது. கடந்த சில வருடங்கள் முன் ஈரத்துண்டோடு சாமி அறைக்குள் சென்று சாமி கும்பிடுவான் செல்வா. பிறகு ‘சிலரின்’ புத்தகங்களைப் படித்தான் இப்பொழுது கடவுள் நம்பிக்கை இல்லை என்கிறான்.
பொது வாழ்வில் உள்ள இருவரின் உதாரணங்களை காட்டியுள்ளேன். ஏன் இந்த முறண்பாடுகள்?
ஒரு சராசரி இளைஞனின் வாழ்வில் கடவுள் என்ற சொல் எப்படி வடிவம் பெறுகிறது? சற்று அலசுவோம்.
பிறக்கும் பொழுது ஒரு குழந்தைக்கு தன் பெற்றோர்களைத் தேர்ந்தெடுக்க வாய்ப்புக் கிடைப்பதில்லை. அதே போல் தன் பெற்றோர்கள் பின்பற்றி வரும் மதத்தை அறியாமல் பின்பற்ற தொடங்குகிறது அந்த குழந்தை.
பள்ளிக்கு செல்கிறான் அங்கு வேறுவிதமாக சாமி கும்பிடுராங்க. குழம்பரான். ஒரு நாள் பள்ளியில் வேறு மதத்தின் பொதனைகள் அடங்கிய புத்தகத்தை கொடுக்கிறார்கள். அது என்னவென்று தெரியாமல் வீட்டிற்கு எடுத்து செல்கிறான். வீட்டில் நாம் இதனை படிப்பதில்லை என்று சொல்லி அந்த புத்தகத்தை குழந்தை கண் முன் பீரோவில் வைக்கின்றார் அப்பா. ஏம்பா நாம அத படிக்கறதில்லை என்று சிறுவன் கேட்க அம்மா சொல்கிறாள் படிக்கலாமே எல்லா மதங்களும் அன்பைத்தானே சொல்கிறது என்கிறாள். மீண்டும் குழப்பம்.
கடவுள் நம்பிக்கை எத்துனை பேருக்கு இருக்கிறது என்று அறிவியல் ஆசிரியர் ஏழாம் வகுப்பு மாணவர்களிடம் கேட்க அனைவரும் கைத்தூக்கினர். ஆனால் முன் வரிசையில் ஒரு பெண் மட்டும் தூக்கவில்லை. ஆசிரியர் அந்த பெண்ணிடம் ஆச்சரியத்துடன் நம்பிக்கையில்லையா என்று வினவுகிறார். வகுப்பில் சலசலப்பு. அதே சிறுவனின் மனத்தில் குழப்பம். கடவுள் இல்லை என்ற ஒரு வாதமே புதியதாக இருக்கிறதே என்று எண்ணுகிறான்.
செய்திகளில் மக்கள் கடவுளுக்காக தங்கள் உடலை வருத்திக் கொள்ளும் காட்சிகளைக் காண்கிறான் அந்த பையன். உடல் சிலிர்கிறான். இதுக்கெல்லாம் ஆத்ம தைரியம் வேண்டும் என்கிறாள் அம்மா. அப்பா பேசாமல் அமைதியாக இருக்கிறார். தன் உடலை வருத்தி கடவுளைக் கும்பிடுவது காட்டமான பக்தியா இல்லை காட்டுமிறாண்டித்தனமா? கடவுள் இதை எதிர்ப்பார்கிறாரோ என்று அஞ்சுகிறான்.
நல்ல கல்லூரி கிடைக்க வேண்டும். தான் எழுதிய பரிட்சையில் சில பதில்களாலும் கண்ணுக்குத் தெரியாத ஒருவர் திருத்தும் மூடாலும் மதிப்பெண் குறையக் கூடாது என்று வேண்டுகிறான். இதைத் தருகிறேன் அதைத் தருகிறேன் என்று லஞ்சம் குடுக்க விழைகிறான். கடவுளை மீண்டும் நண்பனாக்கும் முயற்சி.
நல்ல படிப்பு நல்ல வேலை அமைந்தவுடன் பெற்றோர் கடவுளிடம் ஆசி பெற வேண்டும். நம்மூருக்கு போய் வருவோம் என்று அந்த இளைஞனை அழைக்கின்றனர். அரை மனத்துடன் செல்கிறான். ஏனேனில் அந்த ஊர் வெரும் காடு. பேருக்கு டீக்கடை ஒன்று மட்டும் தான் உண்டு. வேண்டிக் கொண்ட கடமைக்கு கடவுளை கும்பிடுகிறான்.
தான் வேலைப் பார்க்குமிடத்தில் ஒரு பெண்ணிற்கு தீவிரத் தீக்காயங்கள் அவருக்கு பண உதவி வேண்டும் என்று வேண்டுகொள் வருகிறது. 100 ரூபாய் கொடுக்க விழையும் பொழுது 10,000 ரூபாய் என்று ஒரு வரியை (டொனேஷன் புத்தகத்தில்) பார்த்து வியக்கிறான். கொடுத்தவர் சம்பளமே அவ்வளவு தான் என்றால் அது மலைக்கச் செய்தது. மனிதர்கள் தான் கடவுள் என்ற எண்ணம் பிறக்கிறது.
…
இப்படி ஒவ்வொரு பருவத்திலும் கடவுள் என்ற சொல் மாற்றமடைகிறது. அடுத்த முறை யாரும் ஆத்தீகம் நாத்தீகம் என்று பேசினால் அது என் சொந்த விஷயம் என்று சொல்ல நினைக்கிறேன். கமல் கேட்குதா? இந்த பதிவை எழுத்தாளர் சாருவின் வரிகளுடன் முடிக்கிறேன்
இப்போதெல்லாம் ஆத்திகவாதிகள்தான் ஆதங்கவாதிகளாக மாறி , மற்ற மதத்தினரை வெட்டிப் போடுவதும் அவர்கள் மீது குண்டு வீசுவதுமாக இருக்கிறார்கள். நாத்திகவாதிகள் பாவம் , இந்தக் குண்டு வீச்சு கலவரங்களுக்கிடையே தங்கள் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டி மஞ்சள் துண்டை அணிந்து கொண்டு பாபாவிடம் ஆசீர்வாதம் வாங்கிக் கொண்டிருக்கிறார்கள்.
பி. கு. Although many self-described atheists tend toward secular philosophies such as humanism and naturalism, there is no one ideology or set of behaviors to which all atheists adhere; and some religions, such as Jainism and Theravada Buddhism, do not require belief in a personal god. (விக்கிப்பீடியா)
ஆப்கானில் இந்திய தூதரகம் தகர்த்து எரியப்படுள்ளது. 40 பேர் இறந்துள்ளனர். நூற்றுக்கணக்காணோர் காயங்களுடன். இந்த சம்பவத்திற்குக் காரணம் பாகிஸ்தான் உளவு நிறுவனமான ஐ.எஸ்.ஐ என்று ஆப்கன் நாளிதழ் கதருகிறது.
“The enemy is ISI of Pakistan, who fights on different fronts against Afghans and tries to fish in muddy waters through planning subversive attacks in Afghanistan,” the Kabul Times said in an editorial.
http://in.reuters.com/article/southAsiaNews/idINIndia-34428420080708?sp=true
பாகிஸ்தானில் நடந்து முடிந்த தேர்தலில் பாகிஸ்தான் மக்கள் கட்சி வெற்றி பெற்றவுடன் அந்த கட்சியின் தலைவர் கரன் தாப்பர்க்கு தந்த பேட்டியில்
Karan Thapar: Let us turn to the sort of relationship your government would have with India. For the last four years under Pervez Musharraf and Manmohan Singh the two countries believe they have had the best relationship ever. How can you ensure that momentum continues?
Asif Ali Zardari: I think you may probably find the best understanding ever. The kind of relationship I look at, Pakistan People’s Party wants, hasn’t really happened.
Karan Thapar: You mean you are determined to take it to a yet higher stage.
Asif Ali Zardari: I want to take it to a stage of such confidence building that the fear factor diminishes from both angles.
Karan Thapar: How will you do this?
Asif Ali Zardari: People to people contact should be improved and then trade—inter-dependence of trade. If Indian energy, Indian industry depends on Pakistan energy and I depend on Indian market for my product to be sold, then we are both inter-dependent financially, integrated industry-wise. That is people to people contact
http://www.ibnlive.com/news/devils-advocate-asif-ali-zardari/60296-2.html
மேற்கூறியப் பேட்டி பாகிஸ்தானில் பிரதமர் யார் என்று தெரியாத நிலையில் எடுக்கப்பட்டது.
பின் தேர்ந்தெடுக்கப் பட்ட பாகிஸ்தான் பிரதமர் கரன் தாப்பரிடம் தரும் பேட்டி
Karan Thapar: So you’re firm on terrorism?
Yousuf Raza Gillani: I’m very firm on terrorism. And we will not negotiate with militants.
http://www.ibnlive.com/news/improve-ties-but-dont-forget-kashmir-pak-pm/65069-3.html
இவர்களின் நிலைதான் என்ன? சீனர்கள் இன்று உலகுடன் போட்டிப் பொட்டுக் கொண்டுள்ளனர். நாம் அவ்வாறு போட்டியில் ஈடுபட தடையாக உள்ள ஒரு முக்கியமான விஷயம் தீவிரவாதம். இதனை ஒரு ‘strategic weapon’ –ஆக பாகிஸ்தான் இந்தியா மீது பயன் படுத்தி வருவது இரும்புக் கரங்களால் ஒடுக்கப் பட வேண்டிய விஷயம்.
ஆப்கனில் சில நாட்கள் முன் தாலிபான்கள் சிறையினை உடைத்து பாகிஸ்தானிற்குள் தஞ்சம் புகுந்துள்ளனர். இதனால் பாகிஸ்தான் ஆப்கனின் நம்பிக்கையையும் இழந்துள்ளது.
‘அமைதிக்காக’ பேசுவதும் ஆனால் கிடைக்கும் நேரங்களில் குண்டுகளை வீசி தாக்கும் ஒரு நண்பனை நம்பி இந்தியா சுமூக உறவு மேற்கொள்ள முடியுமா?