கம்யூனிஸம் – சில நாட்கள் முன்பு நான் வினவின் பக்கத்திற்குச் சென்றேன். ஒலிம்பிக் தங்கம்…பித்தளை சுதந்திரமும் என்ற கட்டுரையைப் படித்தேன். பல முடிச்சுக்கள் சரியாக போடலை என்பதை சுட்டிக் காட்டினேன். உடனே என்ன புடிச்சிக்கிட்டாங்க. வெளிய வரத்துக்குள்ள நாக்கு தள்ளி போச்சு.
தனி மனிதன் ஒருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம் – மிகவும் நம்புகிறார்கள். சமுதாயத்தின் அழுக்குகளைக் களைவதற்கு ஒரே அயுதம் கம்யூனிஸம் என்று. ரஷ்யா, சீனா, க்யூபா, வட கொரியா , பெங்கால் இவை எதுவுமே கம்யூனிஸ நாடில்லை என்று விளக்கம் தரப்பட்டது. அது மட்டுமல்ல போலி கம்யூனிஸ்டுகள் என்று வேறு எதோ இருக்காமே. உங்களுக்கு தெரியலைனா உடனே அந்த மறுமொழிகளைப் படிக்கலாம்.
இந்திய நாட்டை ‘அடிமை’த் தனத்திலிருந்து விடுவிக்க , பசி கொடுமையைப் போக்க , அறியாமையை ஒழிக்க , தீண்டாமையை விலக்க , விவசாயிகள் வாழ , அனைவருக்கும் சமமான சம்பளம் கிடைக்க [டீக்கடை முதலாளி முதல் டீ கிளாஸ் கழுபவர் வரை], ஒலிம்பிக்கில் பதக்கங்கள் வெல்ல , ஊழலை களைய , மத நல்லிணக்கம் வளர என்று ஹோட்டலில் ரூம் போட்ட ‘மருந்துவர்’ போல அனைத்திற்கும் ஒரே மருந்து என்று பேசுகிறார்கள்.
கேட்க ரோம்ப நல்லாயிருக்கு…நீங்கள் யாரும் மேலும் வினவ நினைத்தால் Be Careful ["பாடிஷோடா"வடிவேலு பாணியில்].
கிரிட்டிசிஸம் செய்ய நம்ம மக்களுக்கு சொல்லித் தரத் தேவையில்லை. பிரவி குணம் அது. அகாஸ்மாத்தா நக்கலா இரண்டு வரி சொல்லி நம்பளை அசத்தியவர்கள் எத்துனைப் பேர்? இதில் திரைப்பட விமர்சனம் செய்வதென்றால் அல்வா சாப்பிடுவது போல் எனலாம் (நாக்கு இப்பவே ஊறுதே!). மதன்ஸ் திரைப்பார்வை கடந்த மூன்று வருடங்களா பார்த்து வருபவர்கள் இப்போ திடீர்னு ஹாசினியின் விமர்சனங்கள் டாப் என்கிறார்கள். அப்படியா என்று பார்க்க நேற்று சத்தியம் “விமர்சனம்” பார்த்தேன். ஞாயத்தராசு நிலையா நிக்குதுன்னு சொல்லிட்டாங்கோ.
திரை விமர்சனங்களை வலைப்பதிவுகளில் படிப்பதை விட சுவாரசியம் “நண்டு செண்டு” நிகழ்ச்சி (விஜய் டி.வி.யில்) ஆனால் அதற்கு கடிவாளம் போட்டு விட்டார்கள். இதைப் பார்க்கும் பொழுது தமிழ் சினமாகாரர்கள் சொல்லுவது என்னவென்றால் “எங்களுக்குத் தெரியாதா படம் குப்பைனு நீங்க வேற அத அசிங்கப்படுத்தனுமா?”…ம் ஞாயம் தான்!
மீடியாயிஸம் – இது யாம் கண்டு பிடிச்சது. சி.என்.என் – ஐ.பி.எனில் சென்னை , பம்பாய் , டெல்லி ஆகிய மாநகரங்களின் ரோடுகள் சரியில்லையாம். அரசாங்க அதிகாரிகள் ஊழல் செய்கிறார்களாம். இதனை எவ்வளவு நாள் தான் பொருத்து செல்வது என்று மக்களிடம் எழுற்சியூட்டும் விதமாக கேள்வி கேட்டுள்ளனர். ஏன் மின்சார வெட்டுகளைப் பற்றி பேசவில்லை? சரி ஒவ்வொன்றாக செய்வார்கள் என்று எடுத்துக் கொண்டாலும் அது என்ன மாநகரங்கள்? அதுவும் மூன்று மட்டும்? கல்கத்தா , பங்களுரூ , ஹைதிராபாத் இங்கெல்லாம் என்னவாயிற்று என்று கேட்டால் உங்களுக்கு இச்செய்தியின் சூட்சமம் விளங்கும். சரி கிராமங்களில் சாலைகளே இல்லையே என்று கேட்பவர்களுக்கு நான் அதைத்தான் அந்த செய்தி தளத்தின் மறுமொழியிட்டேன் ஆனால் அது இந்த நிமிடம் வரை வெளியிடவில்லை. மத்திய தர மக்கள் உணர்ச்சிகளுடன் விளையாடும் சி.என்.என் – ஐ.பி.என் வாழ்க!


Sing for the moment