இந்த வாரம் சில ”தமிழைக் காபாத்துங்க” பதிவுகளைக் கண்டேன்.
ஆங்கிலக் கல்வி கற்பித்து ‘சமச்சீர் கல்வியை’ பரப்ப விரும்பும் விஜயகாந்த் கண்டிப்பு
ஹிண்டுவில் வெளிவந்த தமிழ் கல்விக்கு ‘எதிரான’ கட்டுரைக்கு கண்டணம்
இந்த பதிவுகளில் என்னுடைய மறுமொழிகளையும் விட்டுள்ளேன். ஆனால் எனக்கு வர வர வாக்குவாதம் பண்ண நேரமில்லை அது மட்டுமல்ல படித்தவர்கள், ‘பகுத்தறிவாதிகள்’ இவர்களின் எண்ணங்கள் எப்பொழுதுமே நாணயத்தின் மறுபக்கத்திற்கு ஆதரவு தானாகவே செல்கிறது. இதுவும் ஒரு முக்கிய காரணம் நான் வாக்கு வாதத்திலிரங்காமலிருப்பதற்கு.
முதலில் ‘சமச்சீர் கல்வியை’ பற்றி பார்ப்போம். கண்டிப்பாக ஆங்கிலத்தால் தான் சமச்சீர் கல்வி தர முடியும் என்பது எதிர்க்க வேண்டிய எண்ணம் தான். இதற்கு தீர்வென்ன? விஜயகாந்தை வாரினால் போதுமா? உலக தமிழ்ர்கள் மக்கள் தொகையே 10 கோடியைத் தாண்டாத பொழுது இவர்கள் எப்படி தமிழ் வழிக் கல்வியை நடைமுறைப் படுத்துவார்கள்? நடைமுறைக்கு ஒவ்வாத உவமைகள். ஐடியலிஸ்ட்டிக் எண்ணங்கள் எல்லாம் போற்றத்தக்கது தான் ஆனால் எப்படி செயல் படுத்துவீர்கள் என்று கேட்டால் , அது அரசாங்கம் தான் எதாவது செய்யனும் என்று நழுவ வேண்டியது. உங்கள் பிள்ளைகளுக்கு தமிழ் முறையில் மட்டும் கல்வி புகட்ட எண்ணுவீர்களா என்றால் அதற்கு பதில் குழந்தை பிறந்தவுடன் பார்க்கலாம் என்கிறார்!
இரண்டாவதாக பத்ரியின் தமிழ் வழியில் கற்பது கடினமா என்ற பதிவிவைக் காண்போம். கட்டுரைத் தொடக்கத்தில் ஆசிரியர் இருவர் தமிழ் வழிக் கல்வியில் அறிவியல் மற்றும் கணித பாடங்கள் அல்லது சூத்திரங்களை மொழி பெயர்க்கும் பொழுது அதனை புரிந்துக் கொள்வது கடினம் என்கின்றனர். எடுத்துக்காட்டாக கிராவிட்டி என்ற சொல்லை ஒரு ஆசிரியர் சொல்கிறார். வெகுஜன ஊடகங்களில் புவி ஈர்ப்பு சக்தி என்று எழுதி கேட்டு படித்திருப்பதால் எனக்கும் உங்களுக்கும் இது தவரான எடுத்துக்காட்டு என்று உடனே தென்படும். ஆனால் இதுவே மொட்டர் பைக் என்ற சொல்லை எடுத்துக்காட்டாக காட்டியிருந்தால் என்ன செய்வார்கள். உடனே அதற்குத்தான் துள்ளுந்து இருக்கிறதே என்பீர்கள். துள்ளுந்து அங்காடியில் சென்று ”ஐயா , இந்த துள்ளுந்தின் விலை என்ன” என்று கேட்க இவர்கள் தயாரா? இதே நடைமுறை சிக்கலைத் தான் ஹிண்டுவில் அந்த ஆசிரியர் எடுத்துகாட்ட முயல்கிறார். தமிழை தமிழில் கற்பதே கடினம் என்று சொல்லுகின்றார் ஒரு ஆசிரியர். இதில் எனக்கும் உடன்பாடில்லை. அதனால் பத்ரி சொல்லுவது போல் காலத்திற்கு ஏற்றார் போல் பாட புத்ததங்களும் மாறவேண்டும்.
மூன்றாவதாக ‘இரவி’ எழுதியா கிரந்தம் என்ற பதிவினைக் காண்போம். மொழி எழுத்துக்கள் மாறுவது அழகு என்று ஏற்றுக்கொள்கிறார். ஆனால் ‘புது’(?!) எழுத்துக்கள் (ஷ், ஸ், ஸ்ரீ…) ஒரு மொழியில் வருவது இயல்பன்று என்று வாதிடுகிறார். ஞாயமே , ஆனால் தமிழின் தொண்மை , இயல்புகளை மீறியதால் தான் இவ்வளவு நூற்றாண்டுகள் கடந்து வந்துள்ளது. பெயர்ச் சொல்லிற்கு தமிழக அரசே அட்ச்சதைப்போட்டு வரிவிலக்குக் கொடுத்தப் படம் ‘சிவாஜி’. அப்படியிருக்க கணித மேதையின் பெயரை இராமானுசன் என்றுதான் விக்கிப்பீடியாவில் பதிவேன் ஏனேன்றால் இது தமிழர் மரபு என்பதும் பல்லாயிரக்கணக்கிலுள்ள மற்ற கிரந்த எழுத்தகளடங்கி விக்கிப்பதிவுகள் (எம்.ஜி.ஆர், ஜே. ஜெயலலிதா) இருக்க ஏன் ராமானுஜன் மட்டும் இராமானுசன் ஆக வேண்டும் என்ற வாதமும் எழுகிறது. கிரந்த எழுத்துக்களுக்கு எழுத்து வடிவமுண்டு , வெகுஜன ஊடங்கள் பரவலாகப் பயன்படுத்துகின்றனர் என்ற இரு பலத்த நடைமுறை ஆதாரங்கள் இருந்தாலும் இது ஆராயாமல் எடுத்த முடிவு என்று கூறுவது தமிழ் என்ற மொழியை எந்த வல்லுநரிடம் கேட்டு படைத்தனர் என்ற் கேள்விக்கு சமம்.
தமிழ் “பற்று” என்ற ஒலிப்பதிவை நான் இரு வாரங்கள் முன் செய்துள்ளேன். கேட்க விரும்புவர்களுக்கான சுட்டியிங்கே.
நடைமுறைக்கு சாத்தியமற்ற விவாதங்கள் , முடிவுகள் என்று தான் செல்கிறது இந்த மூன்று பதிவுகளும். நீங்கள் பேசும் அனைத்தும் அறைத்த மாவு. ஆகவே செயலில் காட்ட விரும்பாதவோர் இதனைப் பற்றி பேசினால் இதனை ஏற்க நான் மட்டுமல்ல நிதற்சன வாழ்கையின் தினசரி தடங்கல்களைத் தாண்டி தன் குடும்பத்தை முன்னேற்ற பாடுபடும் எந்த தமிழரும் ஒத்துக்கொள்ள மாட்டார்! சோத்துக்கு பின் தான் கொள்கை மண்ணாங்கட்டி எல்லாம்!

இதை
http://payanangal.blogspot.com/2008/07/blog-post_31.html
இதையும் பாருங்கள்
http://payanangal.blogspot.com/2008/04/learning-medicine-in-tamil-medium.html
இரண்டாவது சுட்டியையும் அவசியம் வாசிக்கவும்
முதல் பதிவில் கண்டணம் ,இரண்டாவதில் யதார்த்தம். ஹிண்டுவின் கட்டுரையை நான் முழுவதுமாக ஏற்கவில்லை.
பத்ரியின் பதிவில் நான் போட்ட பதில்://
புருனோ – {{மாணவன் தற்கொலை செய்வதற்கு பாடங்கள் புரியாததே (தமிழ் வழி கல்வியில் பள்ளியில் கற்றதான்)}} இதே வார்த்தைகளைத் தான் அவன் தந்தை தாயார் ஊர் பெரியவர் என்று அனைவரும் மீண்டும் மீண்டும் கூறினர் (விஜய் டி.வி.யில்).//
கடைசியா சோத்துக் கட்சிதான் சார்.
http://prakliptam.wordpress.com/2008/04/24/ultr-thaniththamiz/
என்ற பதிவையும் வாசிக்கவும்
கிரந்தம் எனபதையும் தாண்டி, உச்சரிப்பு –> பலுக்கல், அகராதி –> அகரமுதலி போன்ற நிறைய தமிழ் அகழ்வாராய்ச்சி அபத்தங்களையும் காண்லாம்
எழுத்துமொழியே கிட்டத்தட்ட இன்னொரு மொழிப்போலத்தான்.
இந்த மாபெரும் வித்தியாசத்தை உணர்ந்தே எண்பதுகளில் தெலுங்கு பேச்சுமொழிக்கு நெருங்கியதாக, தன்னுடைய எழுத்துமொழியினை மாற்றிக்கொண்டது.
கிரந்தத்தையே ஏற்றுக்கொள்ளாதவர்கள் இத்தகைய புரட்சிகரமான முடிவை ஏற்றுக்கொள்வார்களா ?
வினோத் – உணர்கிறேன், உங்கள் கருத்துக்களை. பின்நோக்கித்தான் போவேன் என்ற மனோபாவம் இவர்களிடமுண்டு (தமிழைக் காப்பாத்துங்க கும்பலிடம்). ஒரு மென்பொருள் தயாரிக்கும் பொழுதே அதனை மேம்படுத்த மற்றும் தவறுகளைக் களைய பல முன்னெச்சரிக்கை எடுக்கிறோம். ஆனால் இவர்கள் மேற்கொள்ளும் “மொழியைக் காப்பாற்றும்” மெத்தெட்ஸ் இஸ் நாட் சஸ்டெய்னபுள். தமிழ் சமுதாயம் தன் நாட்டிலேயே ஒரு பெரும்பான்மையற்ற நிலையில் – இத சேர்க்காதீங்க அத பேசாதீங்க, தமிழா நீ பேசுவது தமிழா, பிற மொழிச்சொற்களைக் கண்டுபிடி என்பதெல்லாம் அரோகியமான மொழி வளர்ச்சிக்கு இடையூறு. சிலரின் தமிழ் மேதாவித்தனத்தைக் காட்டவே அது பயன்படுகிறது. மொழி என்று இயல்புநிலைக்கு வருகிறதோ அன்று தான் தமிழா நீ பேசுவதும் தமிழே என்ற வாதம் நிலைக்கும்.
ப்யூரிஸ்ட்டுகளுக்கு இணையமிடமல்ல. பார்ப்போம்!
வினோத், உங்கள் தமிழ் சார் கருத்துகளுக்கு நல்ல தோழர் கிடைத்து இருக்கிறார்
//இந்த மாபெரும் வித்தியாசத்தை உணர்ந்தே எண்பதுகளில் தெலுங்கு பேச்சுமொழிக்கு நெருங்கியதாக, தன்னுடைய எழுத்துமொழியினை மாற்றிக்கொண்டது.//
தற்போதைய தெலுங்கு மொழியில் எத்தனை வீதம் வட மொழி, ஆங்கிலம், தமிழ்? அப்புறம் மிச்சம் இருப்பது என்ன மொழி? வருங்காலத்தில் பேச்சு மொழியில் ஆங்கிலம் கூடும் போது அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? தெலுங்கு என்று ஒரு மொழி தன்னை எப்படி வரையறுக்கவும் அடையாளப்படுத்திக் கொள்ளவும் முற்படுகிறது?
நன்றி ரவி -
//அப்புறம் மிச்சம் இருப்பது என்ன மொழி? வருங்காலத்தில் பேச்சு மொழியில் ஆங்கிலம் கூடும் போது அதன் தாக்கம் என்னவாக இருக்கும்? தெலுங்கு என்று ஒரு மொழி தன்னை எப்படி வரையறுக்கவும் அடையாளப்படுத்திக் கொள்ளவும் முற்படுகிறது?//
மிச்சமிருப்பது தெலுங்கு, ஆங்கிலம் மற்ற மொழிச் சொற்கள் கலந்த பின்னும் தெலுங்கு, பிற மொழிகளை அறவனைத்து சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்பர். அடையாள அட்டையல்ல மொழி, அது ஒரு கருவியே!
//மிச்சமிருப்பது தெலுங்கு, ஆங்கிலம் மற்ற மொழிச் சொற்கள் கலந்த பின்னும் தெலுங்கு, பிற மொழிகளை அறவனைத்து சுந்தரத் தெலுங்கினில் பாட்டிசைப்பர்.//
வாழ்க ! வளர்க !
ரவி – விதண்டாவாதமா கேள்வி கேட்டா விதண்டாவாதமாத் தான் பதில் வரும்.
முரளி, எனக்கு விடுப்பட்ட கேள்விகளுக்கும் நீங்களே பதில் கூறிவிட்டீகர்கள் போல
நன்றி
எனது இணைய நண்பர் ஒருவர் இந்த உரையாடல்களையெல்லாம் பார்த்து (விக்கிப்பீடியா மற்றும் பிரகிலுப்தம் ஆகியவற்றையும் சேர்த்து தான்) சொன்னவை:
தமிழை அதன் மக்களிடம் இருந்து அன்னியப்படுத்துவதைத்தான் இது செய்யும். இதில்ம் இருந்து ஒரு மொழியை வளர்க்க முடியாது. யதார்த்த வாழ்வில் கலப்படைந்த மொழியில் இருந்து அன்னியப்பட்டுத்துவதாகவே போய் முடியும். ஆக எல்லாரும் சேர்ந்து தமிழை அழிப்பதை அழகாகச் செய்கின்றார்கள். இவர்களிடம் இருந்து வேறெதையும் எதிர்பார்க்கவும் முடியாது. அவர்களை அப்ப்டியே விட்டுவிட்டு நாம் வேறெதையாவது செய்ய வேண்டியது தான். சண்டை பிடிச்சு எனர்ஜி வீணாகுவது தான் மிச்சம்..
இதை மறந்துட்டன்.
நான்: விக்கிப்பீடியாவில இயங்குறது பெரும்பாலும் தனித்(த)தமிழ்வாதிகள்
அவர்: ம்ம்.. அவங்களால தான் அங்க இயங்க முடியும்
1:45 PM தமிழ் அடிப்படைவாதம் என்ற ஒரு மனநிலைதான் அவர்களை இயக்குகிறது
உங்களிக் நிறைய கருத்துகளுடன் நான் ஒத்துப்போகிறேன்.
//அடையாள அட்டையல்ல மொழி, அது ஒரு கருவியே!//
//நடைமுறைக்கு சாத்தியமற்ற விவாதங்கள் , முடிவுகள் என்று தான் செல்கிறது இந்த மூன்று பதிவுகளும். நீங்கள் பேசும் அனைத்தும் அறைத்த மாவு. ஆகவே செயலில் காட்ட விரும்பாதவோர் இதனைப் பற்றி பேசினால் இதனை ஏற்க நான் மட்டுமல்ல நிதற்சன வாழ்கையின் தினசரி தடங்கல்களைத் தாண்டி தன் குடும்பத்தை முன்னேற்ற பாடுபடும் எந்த தமிழரும் ஒத்துக்கொள்ள மாட்டார்! சோத்துக்கு பின் தான் கொள்கை மண்ணாங்கட்டி எல்லாம்!//
உண்மையே. ஆனால் இதை ”வெளிப்படையாக” ஒத்துக்கொள்பவர்கள் குறைவு.
உங்கள் தைரியத்திற்கு பாராட்டுக்கள்.
முரளி,
யார் பொருளற்று உரையாடுகிறார்கள், யார் வெட்டி நியாயம் பேசுகிறார்கள் என்று காலம் பதில் சொல்லும்.
தமிழைப் பிழை இல்லாமல் எழுதக் கூடத் தெரியாதவர்கள் எல்லாம் தமிழை எப்படி வளர்க்கலாம் என்று இங்கு கருத்து சொல்வது சிரிப்பாக இருக்கிறது
வினோத்,
//ஆக எல்லாரும் சேர்ந்து தமிழை அழிப்பதை அழகாகச் செய்கின்றார்கள். இவர்களிடம் இருந்து வேறெதையும் எதிர்பார்க்கவும் முடியாது. அவர்களை அப்ப்டியே விட்டுவிட்டு நாம் வேறெதையாவது செய்ய வேண்டியது தான். சண்டை பிடிச்சு எனர்ஜி வீணாகுவது தான் மிச்சம்..//
என்று நீங்கள் சொன்னதையே கலப்புமொழிக்காரர்களுக்கான மறுமொழியாக நானும் சொல்லிக் கொள்கிறேன்.
தமிழ் விக்கிப்பீடியாவில் இயங்குவோர் தனித்தமிழ்க் காரர்களோ, மொழி அடிப்படைக்காரர்களோ ஏதோ ஒன்றாய் இருந்து விட்டுப் போகட்டும். மொழி அழிவு என்று நீங்கள் கருதினாலும், எங்களுக்குத் தெரிந்த மொழி வளர்ச்சி இது தான்.
ஆனால், தங்களை pragmatistஆக அறிவித்துக் கொள்பவர்கள் காலம் காலமாகவும் இணையத்திலும் தமிழ் வளர்ச்சிக்கு என்னென்ன பணிகளில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? pragmatistகள் என்றுமே சோத்துக் கட்சி தான். சமூகம், மொழி வளர்ச்சி அவர்கள் என்றுமே ஈடுபாடு காட்டுவது இல்லை. (வினோத் போன்றவர்கள் அரிய விதிவிலக்கு!)
கண்டிப்பா ரவி, வீ வில் சீ வாட் டைம் ஹெஸ் டு சே…