ரஜினி ஒரு சினிமாகாரர்

5 08 2008

 

குசேல அரசியல் 

பாடம் கற்றுத் தந்த படம், குசேலன். இருக்கறது விட்டு பறக்கறதுக்கு ஆசைப் பட்டால் என்னவாகும் என்பதைத் தான் அனைவருக்கும் உணர்த்தியது ரஜினியின் வருத்தம் தெரிவிக்கும் நிகழ்ச்சி. எதிர்ப்பு அலைகள், எங்கு திரும்பினாலும், ‘மன்னிப்பு’ கோரிவிட்டார் கன்னடர்களிடம் என்று எழுதா இணையத்தளங்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

முதலில் நாம் என்ன உணர வேண்டும் ரஜினி ஒரு சினிமாகாரர். சினிமாகாரர்களின் ஒரே நோக்கம் தன் படத்தால் யாருக்கும் நஷ்ட்டம் ஏற்படக்கூடாதென்பது. பின் கொள்ளை லாபம் சம்பாதிக்க வேண்டும். இதற்கு யாரையும் ஆசுவாசப்படுத்த முன்வருவார்கள் அல்லது யாரையும் எதிர்த்தும் பேசுவார்கள். உணர்ச்சி மூட்டைகள் தான் சினிமாகாரர்கள் (எ. கா. சத்தியராஜின் பேச்சு).

ரஜினி இப்பொழுது இரு பக்கமும் இடிபடும் மத்தளமாகத்தான் இருக்கிறார். கர்ம பூமிக்கும் மாத்ரு பூமிக்குமிடையே அல்லல் படுகிறார். யாரிடம் பற்றைக் காண்பிப்பது? இல்லை நான் இந்தியன் என்று சொல்லி நழிவிக் கொள்வதா? என்று பல கேள்விகள்.

அவனவனுக்கு வயிற்றுவலியும் தலைவலியும் வந்தால் தான் தெரியும் என்பார்கள். அது போல் ரஜினியின் நிலையில் நம்மை ஆட் படுத்திக்கொண்டால் தான் அவர் அனுபவிக்கும் வலி நமக்கு புரிய வரும். நான் ஆதரவா எழுதறேன் என்று எண்ண வேண்டாம். வார்த்தை பிரளுதல் மனிதனால் தவிர்க்க முடியாத ஒன்று. இன்று அமெரிக்க ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடும் பராக் ஒபாமா புரட்டி பேசாத விஷயமே கிடையாது. இலக்கு ஜனாதிபதி பதவி என்று வந்த பின் ஓட்டுக்களுக்காக என்ன வேண்டுமென்றாலும் பேசி வருபவர் ஒபாமா. தாய் மண்ணே வணக்கம் என்று பாடிய பலர் அமேரிக்கன் கவுண்சிலேட் முன் தங்கள் “பற்றை” பரிசோதிக்கின்றனர். சென்ற முறை ஒரு கட்சிக்காக ஓட்டுப் போடும் பொழுது உங்கள் வீட்டில் எவ்வளவு ஆணித்தனமாக பேசினீர்கள், அடுத்த முறை அந்தத் தட்டை அப்படியே மாற்றி பேசாதவர்கள் எத்துனைப் பேர்? எத்துனை முறை ‘அமைதிக்காக’ பேசி பாகிஸ்தான் நம் மீது குண்டுகளை வீசியது?

பணம் பதவி இதற்கெல்லாம் அப்பார்பட்டவரல்ல ரஜினி என்பதைத் தான் இந்த நிகழ்ச்சி காட்டுகிறது. அவர் மிக எளிமை சார் என்று சொல்பவர்கள் இந்த நிகழ்ச்சியை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அரசியல்…மூச்ச். இப்படி ஒரு நிலையை நாம் கண்டும் பாடம் கற்றுக்கொண்டாலும் மீண்டும் நம் ஓட்டு ஒரு சினிமாகாரக்குத் தான் போகப் பொகிறது என்பது நிதற்சன உண்மை!


செயல்கள்

தகவல்

2 பதில்கள்

6 08 2008
pirabuwin

உண்மை!

9 08 2008
சுபாஷ்

சினிமாக்கார ஹீரோக்களை நிஜத்திலும் ஹுரோவாக பார்க்கும் முறை நிற்க வேண்டும். கல்வியறிவு அதிகமானால் நிச்சயம் இதற்கொரு தீர்வு கிடைகிடைக்கும். அடுத்த தலைமுறையில் நிச்சயமாக இந்த பழக்கம் இருக்காது. அவர்கள் வெறும் இரசிகர்களாக மட்டுமே இருப்பார்கள்.