சீமான்: தமிழனத்தின் அக்னி புயலா ?

அது என்னங்க, இசைப் புயல் கேள்வி பட்டுருக்கோம், ஆனா தமிழனப் புயல்னு ஒரு பட்டம் கொடுத்திருக்காங்க குமுதம்.காம் இணைய தளத்தில் ?

இந்த நேர்காணலில் சீமான் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள்:

1. இந்திய அரசு இன்றும் இலங்கை அரசுக்கு உதவி செய்கிறது. இதனால் என் சகோதர சகோதரிகள், உடன் பிறப்புக்கள் இலங்கையில் கொல்லப்படுகின்றனர்.

2. இந்திய அரசு மட்டுமல்ல பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளும் இலங்கை சிங்கள அரசுக்கு ஒரு இனத்தையே [தமிழனம் என்று படிக்கவும்] அழிக்கும் அளவிற்கு நவீன ஆயுதங்களை வழங்கிவருகிறது.

3. சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் இலங்கை அரசுக்கு ஆயுதம் கடத்தினார்.

4. மதங்கள் சாக வேண்டும், சாதிகள் சாக வேண்டும் என்று கர்ஜிக்கும் பெரியார் பாசறை, [தமிழ்] இனப் பற்றைப் அடையாள அட்டையாகத் தமிழர்கள் அணியவில்லை என்றால் தமிழனம் தழைக்காது என்கிறார்.

5. கர்நாடகத்திலிருந்து நம்மால் நியாயமானத் தண்ணீர் வாங்க முடியாது ஏன் என்றால் கர்நாடக மக்கள் கன்னடன் என்ற அடையாளத்தை முன் நிறுத்துகிறான். கேரளத்தில் பொது உடைமை பேசும் மார்க்சிஸ்ட் கட்சியும் அதே அடிப்படையில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். அதனால் இம்மாநிலங்கள் மீது பொருளாதாரத் தடைக் கொண்டுவர வேண்டும்.

***

Dangers of tamil chauvinism (The Hindu)

திருத்தம்: இந்த விமர்சனத்தை வைத்த ஹிந்து நாளிதழ்களை சிலர் எரித்தும் அவர்கள் அலுவலகங்களைத் தாக்கவும் முற்பட்டுள்ளனர்.

These chauvinistic tendencies are inimical to the interests of India

தமிழகத்தின் இலங்கை அரசியல் – என் பார்வையில்:

தமிழ் மக்களையும் வி.பு வையும் பிரித்து பார்க்க வேண்டியுள்ளது. கட்டுரை எழுதியவர் இந்தியா இலங்கை விவகாரங்களில் கலக்கக் கூடாது என்று சொல்லுவதில் எனக்கு உடன்பாடு உண்டு.

தமிழகக் கட்சிகள் அடையாளமாகவே கோஷம் எழுப்புகின்றனர். இலங்கை ராணுவம் வி.பு. வின் தலைமையகத்தின் 2 கி.மி அருகில் இருக்கும் பொழுது இப்படி போராட்டத்தில் இறங்கியிருப்பது அவர்களின் வி.பு ஆதரவையே காட்டுகிறது.

தமிழ் மக்களுக்காக எத்துனை முறை அரசியல் சமரசத்தை வி.பு அடித்து நொருக்கியது என்பதையும் எண்ணிபாருங்கள்.

இந்தியாவிற்கு காஷ்மீரில் ஒரு நியாயம், இலங்கைக்கு ஈழத்தில் ஒரு நியாயமா ?

1970களிலிருந்து நடைபெற்று வரும் ஈழப்போராட்டம் இப்பொழுது சமரசம் என்கிற நிலைகளைக் கடந்து ”ஒரு உறையில் இரு வாள் இருக்க முடியாது” என்று வந்துவிட்டது.

போர் நிற்க வேண்டுமெனில் ஒன்று இலங்கை அரசு கவிழ்ந்து ஈழத்தைத் விடுதலை செய்ய வேண்டும் இல்லை என்றால் வி.பு கவிழ வேண்டும்.

வி.பு இலங்கைத் தமிழனக்குக்காக போராடும் குழு என்றாலும் அரசியல் ரீதியாக சமரசம் காண முயன்ற பலத் தமிழ் அரசியல் தலைவர்களைக் காவு வாங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் சமரசம் காண முன் வராத எந்த குழுவையும் எந்த அரசாங்கமும் அங்கீகரிக்காது. எனவே தான் இலங்கைத் தமிழருக்கு ஆதரவு என்ற போற்வையில் வி.பு விற்கு தமிழக அரசியல்வாதிகள் ஆதரவுத் திரட்டிகின்றனர்.

புலிகள் வீழ்ந்தால் அது இலங்கைத் தமிழருக்குத் தாற்காலிகத் தோல்வியென்று தான் தோன்றுகிறது. எனினும் தமிழர்கள் அங்கு சிங்களர்களால் இனி சிறுமை படுத்தப்படமாட்டார் என்று நம்பலாம். இன்னும் 30 ஆண்டுகளுக்கு போர் செய்ய எந்த அரசுக்கும் இனி சக்தி கிடையாது, போராளிக்கும் நன்மைகள் கிடையாது.

8 thoughts on “சீமான்: தமிழனத்தின் அக்னி புயலா ?

  1. தமிழரை கொல்ல ஆயுதங்களும் பயிற்சியும் சிங்கள இராணுவத்துக்கு வழங்குவது என்பது இந்தியாவின் வெளிநாட்டு விவகாரம். அதை தட்டி கேட்டா இறையான்மையில் தலையிட நமக்கு அதிகாரம் கிடையாது. என்ன கொடுமை சார் இது?

  2. குருவி -

    சீமான் பேசுவது அரசியல், ஆனால் அரசியல் இல்லாதது போல் பேசுகிறார். Youtube வீடியோவில் சென்று பாருங்கள்.உலக தமிழனக்குத் தனி நாடு வேண்டும் என்பதை தன் கனவாகவே பேசுகிறார்.

    பதிவில் கூறியது போல் தமிழ் மக்களையும் வி.பு வையும் பிரித்து பார்க்க வேண்டியுள்ளது. ஈழத்திற்கு மட்டும் பேசினால் யாரும் எதுவும் பேசப் போவதில்லை, உலக தமிழனத்திற்கே பேசும் பொழுது உருத்தலாகவே இருக்கு.

  3. bmurali80
    இது தான் 2008 நல்ல நகைசுவை. புலிகள் வீழ்ந்தால் அது இலங்கைத் தமிழருக்குத் தாற்காலிகத் தோல்வியென்று தான் தோன்றுகிறது. எனினும் தமிழர்கள் அங்கு சிங்களர்களால் இனி சிறுமை படுத்தப்படமாட்டார் என்று நம்பலாம்.
    தமிழ் மக்களும் விடுதலை புலிகளையும் பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் என்ன ஒங்களுக்கு ஈழத்துல ஒவொரு குடும்பத்திலையும் ஒவ்வரு சகோதரனோ சகோதரியோ நாடுகாக போராடுகிறார்கள் தமிழ் மக்கள் வேற விடுதலை புலிகள் வேற இல்லை சீமான் சொன்னதில 100% சரி தமிழனுக்கு எண்டு ஒரு நாடு அவசியம்.

  4. நான் சொல்வது நகைச்சுவையா இல்லை சரியான வாதமா என்று ஓட்டுக்கள் தீர்மானிக்கட்டும்.

    //தமிழ் மக்களும் விடுதலை புலிகளையும் பிரித்து பார்க்க வேண்டிய அவசியம் என்ன//

    பல காரணங்கள் உண்டு. அதில் ஒன்று அரசியல் சமரசத்திற்குத் தயாராக இல்லாதது. அது மட்டுமின்றி மற்ற ஈழ குழு போராளிகளை வன்கொலை செய்தது. ஒவ்வொரு ஈழ தமிழ் மக்களும் போராடுகிறார்கள் என்றால் ஏன் அப்பாவி தமிழர்களுக்காக தமிழக அரசியல் தலைவர்கள் குரல் கொடுக்க வேண்டும் ? போராளிகளுக்கு உயிர் ஒரு பொருட்டா ?

    இலங்கை அரசுக்கு இந்திய அரசு ஆயுதங்களைத் தரவில்லை என்றால் இஸ்ரேல், பாகிஸ்தான் அல்ல சீனா தர போகிறது. 30 ஆண்டுகளாக போராடும் புலிகளுக்கு ஏன் தமிழர்கள் தவிர உலகில் வேறு எந்த அரசாங்கமும் அங்கீகாரம் தருவதில்லை ?

    தமிழனுக்கு என்று ஒரு நாட்டை இந்தியாவால் ஆதிரிக்க முடியாது. காஷ்மீரில் ஒரு நியாயம் பேசி இலங்கையில் ஒரு நியாயம் பேச முடியாது.

    சீமான் சொல்வது சரி என்றால் நாளை ஆசாமியர்களுக்கு ஒரு நாடு, கன்னடர்களுக்கு ஒரு நாடு, பஞ்சாப் மக்களுக்கு ஒரு நாடு என்று இந்தியாவே துண்டு துண்டாகும். அதன் பிறகு கிருத்துவர்களுக்கு ஒரு கண்டம், முஸ்லிம் மக்களுக்கு ஒரு கண்டம் என்று பிரிந்து செல்ல வேண்டியது தான்.

    ஈழ போராட்டத்தை நான் குறைத்து மதிப்பிடுவதாக எண்ண வேண்டாம். சீமான் செய்வது இன அரசியல், அதை உணர்ந்தால் போதும்.

    எவ்வளவு வேண்டுமானாலும் வாக்குவாதம் செய்யலாம். ஆனால் நான் பதித்தது நிதர்சன் உண்மைகள்.

  5. நகுலன் -

    சீமான் பற்றி எதுவும் இருந்தால் கூறவும். பேட்டிகள் நானும் பல தர இயலும். இந்த பதிவுக்கு சம்மந்தமில்லாத பேட்டியாக இருப்பதால் அதனை நீக்குகிறேன்.

    நன்றி.

  6. உங்கள் அனுமதி இல்லாமல் உங்களை இந்த தொடர் பதிவுக்கு அழைத்திருக்கிறேன். ஏற்றுக்கொள்ள வேண்டுகிறேன்.

    அன்புடன் ஆர்வி

மறுமொழிகள் இட இயலாது.