ஆர்.வி அவர்களின் அழைப்பை ஏற்று இத்தொடர் பதிவினை எழுதுகிறேன்.
1. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்? நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?
படம் பார்க்க அரம்பித்தது ஆறு வயதில்.
நினைவு தெரிந்து கண்ட முதல் படம் ரஜினி நடித்த ராஜாதி ராஜா.
அதே நாள் சிந்து பைரவி பார்க்க போன என் அத்தை மகளைக் கண்டு ஏன் இப்படி என்று நினைத்தேன். அவர்களுக்கும் அப்பொழுது வயது 10க்கு மேல் இருந்திருக்காது. இன்றும் பைரவியாகவே இருக்கிறாள்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
சரோஜா – 54 மைல் கல் சென்று பார்த்தேன்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
ரிதம். இணைய தளத்தில் (www.rajshri.com).
மீண்டும் பார்க்க வேண்டும் என்று பல நாட்களாக தேடி பார்த்த படம் ரிதம். புரட்சி என்ற பெயரில் பெரிதும் மொக்கைப் போடாமல் விதியில் இணையக் கூடிய இதயங்களுக்கு இவ்வுலகில் இடமுண்டு என்று மிகவும் எதார்த்தமாகக் காட்டிய படம்.
4. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?
ரோஜா
இந்தியன்
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
இப்போவா அப்போவா என்று தொடர்ந்து மக்களை பேச வைக்கும் ரஜினியின் அரசியல். விஜயகாந்தும் துணிச்சலாக களத்தில் குதித்ததும் முக்கியம் என்று கருதுகிறேன்.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?
மை டியர்வேதாள உலகம் – 3டி படம். சிறு வயதில் பார்க்க சென்று நடுவில் ஓடி வந்துவிட்டேன்.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
இல்லை. அன்றாட தமிழ் சினமா செய்திகளை அவ்வப்பொழுது இணையத்தைத் துழாவும் பொழுது கண்ணில் பட்டால் படிப்பேன்.
7. தமிழ்ச்சினிமா இசை?
நிற்காமல் கேட்டுக் கொண்டும், விமர்சித்துக் கொண்டும் இருக்கிறேன்.
ஏ.ஆர். ரஹமான் என்றால் பைத்தியமாக இருந்த காலம் உண்டு. பின்னர் இளையராஜாவின் பாடல்களை ரகுமான் இசையினைடையில் கேட்டால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் புரிந்தது. இருப்பினும் ஒரே வேளையில் பத்து பாடல்கள் மேல் இளையராஜாவின் இசையில் கேட்டால் அலுப்பு தட்டுவது உண்மையே.
யுவனிடம் சரணடையும் பொழுது ரெட் புல் குடித்தார் போல் இருக்கும். ஹெரிஸ் வேண்டாம், இவர் இசையே இவரைப் பற்றி பேசட்டும். ரகுமான் கற்றுக் கொண்ட குருவிடம் அதே நாளில் இசைப் பயிற்சிக்கு சென்ற வித்தியாசாகரின் மெலடிகள் அற்புதம் என்றே சொல்லத் தோன்றும். ஆனால் ஷெல் லைப் கொஞ்சம் குறைவு என்றும் தோன்றும்!
பழைய பாடல்களில் ஜெமினி ஸ்ரீநிவாஸ் கூட்டணி பிடிக்கும். அதே போல் சிவாஜி-டி.எம்.எஸ்
8. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?
நிறைய ஹாலிவுட் படங்கள் பார்த்து கெட்டு போய் உள்ளேன். இருப்பினும் ஜப்பானிய/இரானிய படமெல்லாம் பார்க்கும் விருப்பம் கிடையாது. கல்லூரி நாட்களில் சில பல தெலுங்கு படங்களும் பார்த்துள்ளேன். ஹிந்தி படங்களும் பார்ப்பேன்.
தாக்கம் ஏற்படுத்தியது
1. ச்க் தே இந்தியா
2. லகான்
3. நு வொஸ்தானண்டே நேனு ஒத்தண்டானா (சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்)
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
இல்லை.
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
நேற்று என்பது உன் கையில் இல்லை
நாளை என்பது உன் பையில் இல்லை
இன்று மட்டுமே…தொழில் நுட்பத்தை மட்டுமே நம்பி படங்கள் வரத் தொடங்கிவிட்டது. உதாரணமாக சரோஜா மற்றும் சிவாஜி, கொஞ்சம் சுப்பிரமணியபுரமும். கதை, திரைக் கதைகளில் புது அணுகுமுறைக்காக காத்துள்ளேன். கொஞ்சம் அந்த ஆங்கில டி.வி.டிகளை கதைக்கு உபயோகப்படுத்தாதீங்க! அதே சமயத்தில் ராமாயணம் மஹாபாரதம் என்று கழுத்தை அறுக்க வேண்டாம். புதிய அகராதிகளுக்காக காத்திருக்கிறோம்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
பிற மொழி படங்கள், தொலைக்காட்சித் தொடர்கள் என்று பல பொழுதுபோக்குகள் இருக்கின்றன. சினிமா செய்திகள் வரவில்லை என்றால் ஊடகங்களுக்கே இழப்பு. இருப்பினும் தமிழ் தொலைக்காட்சிகள் இந்த சினிமா உலகத்திலிருந்து விடுபட்டு நல்ல நிகழ்ச்சிகள் தருவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இந்நிலையில் தமிழர்கள் நிறைய பேர் மானாட மையிலாடா என்ற கலாச்சார நிகழ்ச்சியை கண்டு அதிர்வார்கள்!

அக்டோபர் 20, 2008 இல் 1:34 பிற்பகல்
சுவாரசியமான பதிவு, நன்றி!
உங்கள் அத்தை மகள் இந்த பதிவை எல்லாம் படிப்பதில்லையா? தைரியமாக எழுதி இருக்கிறீர்களே!
சரி முக்கியமான விஷயத்துக்கு வருவோம். இந்த மானாட மயிலாட நிகழ்ச்சி எந்த சானலில் வருகிறது?
அக்டோபர் 20, 2008 இல் 2:21 பிற்பகல்
படிப்பதில்லை என்றே நினைக்கிறேன்.
மானட மயிலாடா என்பது கலைஞர் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியாக இடம் பெறுகிறது. அதிர்வுகளுக்கு கீழுள்ள சுட்டியை படிக்கவும்
http://starmakerstudio.blogspot.com/2008/09/blog-post_13.html
அக்டோபர் 21, 2008 இல் 7:00 பிற்பகல்
நலல பதில்கள்.
தொடர் பதிவு எனக்கு இன்னும் சரியாக புரியவில்லை. என்ன செய்ய வேண்டும், எங்கே பதியவேண்டும்? ஏதோ டெஸ்ட் எழுதுவது போல் எழுதிவிட்டேன்.
அக்டோபர் 21, 2008 இல் 7:15 பிற்பகல்
எனக்கும் இது முதல் தொடர் பதிவு.
கேட்கப்படும் கேள்விகளுக்கு பதில் எழுதி உங்கள் பதிவில் வெளியிடுங்கள். உங்களைப் போல சிலரை அழைத்து அவர்கள் பதிவில் விடைகள் எழுத சொல்லலாம். இல்லை என்னைப் போல் அப்படியே விட்டுவிடலாம்
அக்டோபர் 22, 2008 இல் 4:26 மு.பகல்
நல்ல பதில்கள் நண்பரே!
மிகவும் பிடித்த பதில்கள்
3,7 மற்றும் 10
ஃஃமை டியர் வேதாளம் – 3டி படம். சிறு வயதில் பார்க்க சென்று நடுவில் ஓடி வந்துவிட்டேன். ஃஃஃ
அது டை டியர் குட்டிச்சாத்தனென இங்கு வெளியானது.
அதிக நேரம் அப்பாவின் நெஞ்சுக்குள் முகத்தை புதைத்துக்கொண்டேன்.
3D கண்ணாடி போட்டு பார்த்த அனுபவம் ஞாபகமில்லை. ஆனால் பிடித்திருந்தது
அக்டோபர் 22, 2008 இல் 10:16 மு.பகல்
சுபாஷ் -
நீங்கள் சொல்வது சரியே. அந்த படத்தின் பெயர் வேதாள உலகம், மை டியர் வேதாளம் இல்லை.
கருத்துக்களைப் பகிர்ந்தது கொண்டதற்கு நன்றி…