கோழைகளுக்கு பாடம் கற்பிப்போமா ?

29 11 2008
நாம் உயிருடன் வாழும் பொழுது சாவு வரப்போவதில்லை

நாம் உயிருடன் வாழும் பொழுது சாவு வரப்போவதில்லை

சராசரியாக ஒரு நாளில்  மூன்று வெடிகுண்டு எச்சரிக்கை இஸ்ரேலில் அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் நடமாடும் சந்தைகள், உணவகங்கள், சமயக் கூடங்கள் என்று எங்கும் தோட்டாக்களோ அல்ல மனித வெடி குண்டுகளோத் தாக்கத் தயாராக இருக்கும் நாடு, இஸ்ரேல். இஸ்ரேல் மீது இவ்வளவு காழ்ப்பும், தீவிரமும் ஏன் என்பது பெரிய வரலாறு, பிறகு வாய்ப்புக் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன். ஆனால் பாலஸ்தீனியர்கள் இந்த இஸ்ரேலுக்கு எதிராக நடுத்தும் தாக்குதலை தன் பிறவியின் மிக முக்கியமான கடமையாக செய்து வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் தன் இராணுவம் கொண்டு ஒரு யூதனை இழந்தால் 10 பேர் அடுத்தவன் வீட்டில் அடிக்கின்ற அளவிற்கு வந்து விட்டனர். பள்ளிகள், குழந்தைகள், பெண்கள் என்று எவராய் இருப்பினும் தாக்குதல் செய்யத் தயங்குவதில்லை இஸ்ரேல்! மனதில் ஈரம் காய்ந்து விட்டது இஸ்ரேல் மக்களுக்கு!

***

மன்மோகன் சிங்  பதிவியேற்ற பின்னர், குறைந்தது 23 மூன்று முறை இந்தியா மீது தாக்குதல் நடந்துள்ளது (காஷ்மீரைத் தவிர்த்து). ஜுலை 26 2006, 200 பேரை பலி வாங்கியது பம்பாயின் ரயில் வண்டி தொடர் குண்டு வெடிப்புகள். இதுவரை எவரும் பிடிபடவில்லை. பிரதமர் வருத்தம் தெரிவித்தார். நாடு அஞ்சலி செலுத்தியது. மும்பை மக்கள் தங்கள் வேலைப் பார்க்க சென்றுவிட்டனர்.

பின்னர் ஜெய்பூரில் 52 பேரை தொடர் குண்டு வெடிப்பில் பலி கொடுத்தனர், அகமதாபாத், சூரத் மற்றும் பெங்களூரில் 80 பேரை பலி கொடுத்தனர் இந்தியர்கள். இறந்தவர்கள் அனைவரும் அப்பாவி இந்தியர்கள். தினம் காலை தேதியைக் கிழிக்கும் போழுது எப்போ எங்கே குண்டு வெடிக்குமோ என்பது அனைவரின் பின் மூளையில் பதியத் தொடங்கியும் எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர்.

என்னடா இது, நாம் என்ன பண்ணாலும் இவங்களுக்கு சொரணையே இல்லையே” என்று தீவிரவாதிகளே எண்ணும் அளவுக்கு வந்தது நிலை. பின்னர், மீண்டும் மும்பையில் புது யுக்தியை கொண்டு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் எதிரிகள்.

பயம், மரண பயம். இதனை விட ஒரு மனிதனை அச்சத்தின் விளிம்பில் தள்ளவே முடியாது. குண்டுகள் வைத்து ஒட்டு மொத்தமாக அழிப்பதால் ஏற்படும் அதிர்ச்சியை விட உலகமே வேடிக்கைப் பார்க்க ஒவ்வொரு அப்பாவியைக் கொல்வதில் இருக்கும் பயங்கரம் இந்தியர்கள் நெஞ்சை பற்றிக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் இந்த வாரம் முப்பையில் நடந்தேரியது. 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அமேரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் உயிரிழந்துள்ளனர். மீண்டும் அஞ்சலி, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை, நஷ்டயீடு என்று நின்று விடுவோமா இல்லை யூதனாக மாறி இந்த கோழைகளுக்கு பாடம் கற்பிப்போமா?





வாரணம் ஆயிரம்: ஒரு டாடியின் கதை

20 11 2008

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம்

வழக்கமா பசங்களுக்கு அப்பா மேல ஒரு சாப்ட் கார்னர் இருக்கும். அதே வழக்கத்துல அந்த சாப்ட் கார்னரை எப்பவுமே வெளிய சொல்ல மாட்டாங்க. இந்த சாப்ட் கார்னரை வெளியே அதுவும் உலகிற்கு சொல்ல முற்பட்டு எடுத்த படம் வாரணம் ஆயிரம்.

கதை

தன் மனைவியை மென்மையாகக் காதலித்தவர், தன் மகனுக்கு என்றும் தன்நம்பிக்கையாக நின்றவர் என்று இருவரித் திருக்குறளாகத் திகழ்கிறார் கிருஷ்ணன். 16 வயதில் விடலை சண்டையை தான் தலையிடாமல் “ஜிம்முக்கு எல்லாம் போர இல்ல” என்று நாசூக்காக பையனிடம் கேட்கிறார். பெண்களுடன் ரோட்டில் நின்று பேச வேண்டாம் வீட்டினுள் அழைத்து பேசு என்கிறார் நாகரீகம் அறிந்தவர். மகனின் கிட்டார் இசைக்கு மயக்குபவர். வசதியில்லை எனினும் பிள்ளையை இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்க்கிறார் (கடன் பட்டு). பிள்ளை வழக்கம் போல் அடி தடி, காலேஜ் கலாட்டா என்று கல்லூரி வாழ்க்கையை முடிக்கிறான்.

கல்லூரி முடித்தக் கையுடன் மேக்னாவிடம் காதல் வயப்படுகிறான். மேக்னா அமேரிக்க பறக்கிறாள். நீ எங்கிருந்தாலும் உன்னை விடமாட்டேன் என்று தீர்க்மாகிறான் சூர்யா. அதற்கு முன் தந்தையின் கடன், சிறு வீடு என்று தன் கடமைகளை முடிக்கிறான். முடித்த கையுடன் அமெரிக்க கவுன்சலேட் வாசலில் நின்று வில்லியம் வேட்ஸ்வொர்த் வரிகளை சொல்கிறான் “There are miles to go…” சான் பிரான்சிஸ்கோ நகரில் மேக்னாவைத் தேடி கண்டு பிடிக்கிறான். 90 நாட்களில் இரண்டு பாடல்கள் பின்பு அவள் காதலுக்கு இசைகிறாள். விதி வலியது என்பதைப் போல் மேக்னா கொல்லப்படுகிறாள்.

வலியில் டாடியுடன் தொலைப்பேசியில் அழுகிறான். அம்மாவின் சமாதானம் எடுபடவில்லை. சென்னைத் திரும்பும் மகன் மேக்னாவின் பிரிவில் என்ன செய்வதரியாது மது, புகை, போதை என்று சரியத் தொடுங்குகிறான். போதை ஏரியதும் “அஞ்சல” பாட்டுக்கு ஊரே ஆட்டம் போடுகிறது. மகனை சமாளிக்க அவனுடன் பேசி திருத்துகிறார். இந்த வெறுமை, கோவம் எல்லாவற்றையும் பாசிடிவ் எனர்ஜியாக்கு என்கிறார். சூரியாவும் நம் ரஜினி போல ஜம்முவிற்கு வனவாசம் செல்கிறான்.

தன்னுக்குத் தெரிந்த ஒருவரின் மகனை கடத்திவிட்டார்கள் என்று அறிந்து அவருக்கு உதவுகிறான் சூரியா. இதன் மூலம் அந்த பாசிடிவ் எனர்ஜியை அறிந்து விட்டதாக உணர்கிறான் சூர்யா. பின்னர் சென்னைத் திரும்பி இராணுவத்தில் சேர முடிவெடுத்திருப்பதாகவும் சொல்கிறார். மாலினி, சூர்யாவின் அம்மா, வேண்டாம் என்கிறாள். அவன் நெஞ்சுல கை வெச்சி சொல்லிட்டான் அவனத் தடுக்காதே என்கிறார் கிருஷ்ணன்.

சூர்யாவும் ஜன்னல்களைத் தாண்டி வலதும் இடதும் துப்பாக்கியை நீட்டி கமாண்டோ ஆகிவிடுகிறார். இந்நிலையில் மெக்னாவின் நினைவுகளின் தீவிரம் குறைந்து, ப்ரியா மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. ப்ரியா சூர்யாவின் தங்கையின் தோழி. இருவரும் மணம் புரிகின்றனர்.

கிருஷ்ணனின் புகைப் பழக்கம் அவரை தொண்டைப் புற்று நோயாளிக்கிவிடுகிறது. ஒரு வருடம் கெடு. இடையில் பத்திரிக்கையாளரைக் காப்பாற்ற காஷ்மீர் செல்ல வேண்டிய சூழ்நிலையில் சூர்யா. பணியின் வழியில் தந்தையின் மரணத்தின் தகவல் அறிகிறான். வேலையை செவ்வனே முடித்த பின் வீடு திரும்பும் டாடியின் கடைசி நிமிடங்கள் அவருடன் கழிக்க முடியவில்லையே என்று தீராத வலி வாட்டுகிறது!

விமர்சனம்

பலரும் வாரணம் ஆயிரத்தை தவமாய் தவமிருந்து படத்துடன் ஒப்பிடுகிறார்கள். இது முழுக்கத் தவறு. தவமாய் தவமிருந்து மண்ணின் கதை, நம் அண்டை வீட்டில் வாழும் மனிதர்களின் தினசரி ஆவணப்படம் (மிகையுடன்).

வாரணம் ஆயிரத்தில் “திஸ் இஸ் சாவு கூத்து” என்று கூத்தாடும் பொழுதும் பீட்டர் விடும் கொழம்பிப் போன பையன். அது மட்டுமல்ல பிள்ளை சூர்யா அப்பாவைப் பார்த்து “நீங்க வாலண்டரி ரிட்டையர்மெண்ட் கொடுத்துடுங்க, வீடு நான் கட்டுறேன், சேட்டுக் கடனை நான் அடைக்கிறேன்” என்கிறான். இதனைக் கேட்கும் கிருஷ்ணனுக்கு எந்த பிரச்சனையுமில்லை. இதே போல் ஒரு காட்சி யாரடி நீ மோகினி படத்தில் வரும் அதில் ரகுவரன் தனுஷை அடிப்பார். செல்வராகவன் சிந்தனையும் கௌத்தம் மேனனன் சிந்தனையும் 180 டிகிரி வித்தியாசம் தெரிகிறது.

ஆங்கிலத்திக்கு இடையே தமிழில் பேசிகிறார்கள். இது யாருக்குமே உருத்தலாகத் தெரியவில்லை. டெல்லி, ஜம்மு எல்லாம் போனால் சூர்யா இந்தியில் தான் பேசுகிறார். கடைசியாக தில்லி போலீசுடன் மட்டும் இரண்டு வாக்கியம் முழுக்க ஆங்கிலம் பேசுவார். ஏன் இந்த மொழிக் குழப்பம் ? சீமான் சொல்வது சரியாகிவிடுமோ என்ற பயமாகவுள்ளது.  தமிழை அடிநாக்கிலும், ஆங்கிலத்தை நுனிநாக்கிலும் பழகும் கூட்டம் மிக அதிகமாகிவருகிறது! இந்த படத்திற்கு தமிழக அரசு வரி சலுகை தமிழுக்கே இழுக்கு.

சூர்யா – என்னும் கலைஞரில்லை என்றால் இந்தப் படத்தைப் பார்க்கவே வேண்டாம்.

சிம்ரன் – இருக்கிறார், அழகாக.

சமீரா ரெட்டி – நடிக்கிறார், உயரம் சூர்யாவைவிட அதிகம். காஸ்ட்டிங் கச்சிதம்.

திவ்யா – சுட்டியில்லை. முதிற்சியுண்டு, பேச்சில்.

கௌத்தம் மேனன் – பெர்ஸ்னல் பீலிங்க்ஸ் அதிக இடம் கொடுத்ததால் படத்தை மூன்றாம் மனித பார்வையின்றி எடுத்துள்ளார். படமே பெர்ஸ்னல் என்றால் அதனை மூன்றாம் மனிதர்களுக்குக் காட்ட வேண்டிய அவசியமுமில்லை!

ஹெரிஸ் ஜெயராஜ் – பாடல்கள் இல்லை என்றால் பலரும் இரண்டாம் பாதியில் மக்கள் காணாமல் பொயிருப்பார்கள்.

ஆண்டனி எடிட்டிங் – இரண்டாம் பகுதியில் கத்திரியைத் துலைத்துவிட்டார்.

மெக்கப் – சூப்பர்





தமிழனே தமிழனுக்கு வாய்க்கரிசி…

13 11 2008

பாரதி கண்ணனின் உயிர் ஊசலாடுகிறது. எம தர்மனாக ஏழெட்டுப் பேர் சுற்றி சுற்றி பாசக்கயிறினை வீசினர். ஆனால் இது பூலோகமாயிற்றே, அதுவும் தமிழகம், பாசக்கயிறினை உருட்டுக் கட்டைகள் என்று படிக்கவும். அதுவும் ஆள் உயரத்திற்கு!

அடினா அடி இது போல கொல வெறி அடிய நான் என் வாழ் நாளில் பார்த்ததில்லை. ஒருவன் பாரதி கண்ணனின் கால்களை மட்டும் குறி வைத்து சாவகாசமாக, கண் இமைக்காமல் அடிக்கிறான். ஒன்னு, இரண்டு, மூன்று என்று சாத்து சாத்து என்று ரவுண்டுக் கட்டி அடித்தனர். இனியும் உயிர் பிழைப்பான என்று எண்ணிக் கொண்டிருந்த பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி வைத்தியமாக பின்னர் அம்மூவரும் ஒன்று சேர்ந்து மீண்டும் “போடு! தாக்கு மவனே” என்ற தோரனையில் அடி பிண்ணி எடுத்து விட்டனர்.

கைக் கால்கள் செயலிழந்த நிலையில் துடிதுடிக்கக் கிடந்தான் பாரதி கண்ணன். இதனை வேடிக்கைப் பார்த்தனர் காவலர்கள்.

பாரதி கண்ணன் செய்த பிழை என்ன? அவன் கத்தியைத் தூக்கினான். ஒருவனைக் கீரிவிட்டானாம். பாரதி கண்ணன் மட்டும் கத்தியைத் தூக்கவில்லை என்றால் சிகப்பு வெள்ளை நிற பணியன் அணிந்திருந்த மாணவன் உயிர் பரலோகம் போயிருக்கும். அந்த பையனை ரோஸ் நிற பணியன் அணிந்திருந்த ஒருவன் காட்டு மிராண்டித்தனமாகப் போட்டு ஆள் உயரக் கட்டையால் அடிக்கிறான். கூடவே 20 பேர். இங்கு காவல் துறை வரவில்லை பாரதி கண்ணன் வந்தான். அவன் நண்பனுக்காக வந்தான். இன்று உயிரையும் இழக்கும் நிலையில் உள்ளான்.

இந்தியாவின் இறையாண்மைக் கேள்விக் கேட்கும் அச்சுப் பிச்சுத் தமிழ் உணர்வாளர்களே தலித் சாதியைச் சேர்ந்தவர்களும் பார்ப்பனீயத்தை அடி ஆட்கள் மற்றும் சாமன்களுடன் நடத்தி வருகின்றனர் என்பதை மறுக்க முடியுமா ? இந்த சம்பவம் கண்டிப்பாக தலித் மக்களுக்கு எதிரான வினையைத் தேடித்தரும் என்பதில் துளியும் ஐயமில்லை. அப்படி நடக்கக் கூடாது என்றாலும், தமிழனே தமிழனுக்கு வாய்க்கரிசி போடுவது புதிதல்லவே!

தலித்துகள் இவ்வளவு சாதியம் பழகும் போது சாதிகள் ஒழிவதா? சாதிகள் புத்துயிர் பெற்று தலைவிரித்தாடும் என்பதைத் தான் இந்த சம்பவம் நிலை நாட்டுகிறது.





பெங்களூர் – மும்பை – சென்னை: வேலை யாருக்கு ?

9 11 2008
யாருக்கு வேலை

யாருக்கு வேலை

வட இந்தியர்களைத் தாக்கி மராத்தியர்களுக்கு வணக்கம் செலுத்தியுள்ளார் ராஜ் தாக்ரே.

இதே நிகழ்ச்சி ஏன் “கன்னட வெறியர்கள்” இருக்கும் பெங்களூரில் நடக்கவில்லை. சென்ற ஆட்சியில் தேவ கௌடா இதே ராஜ் தாக்ரே நிலையைத் தான் எடுத்திருந்தார் – வேலைகளில் முதலில் எங்கள் மாநிலம் பின்னர் வெளி மாநிலத்தினர் என்று. நல்ல வேளை பல நிறுவனங்கள் அந்நிலையைப் பொருட்படுத்தவில்லை. எனினும் மீண்டும் அக்கோஷம் கேட்டால் ஆச்சரியப்படுவதற்கு இல்லை.

சென்னைக்கு இந்த பிரச்சனை வராது என்றே நினைக்கிறேன். பல ஐ-டி நிறுவனத்தில் சென்னைக்கு செல்லுங்கள் என்றால் “ஐயோ, வேண்டவே வேண்டாம்” என்று அலறி ஓடிவிடுகின்றனர் (ஆந்திர மக்களைத் தவிர). இது நம் தமிழின வாதிகள் நமக்குப் பெற்றுத் தந்த வர பிரசாதம்!





ஸ்ரீதரின் இளமைக்கு உதாரணம்: நினைவெல்லாம் நித்யா

1 11 2008

ஆர்.வி அவர்கள் எழுதி வரும் இயக்குனர் ஸ்ரீதரின் அஞ்சலிக்கு எனது பங்களிப்பாக நினைவெல்லாம் நித்யா பற்றி எழுதியுள்ளேன்.

http://awardakodukkaranga.wordpress.com/2008/11/01/ninaivellam-nithya/