காதலாகி கலாச்சாரமாகி…

14 02 2009

ராம சேனா மந்திகள்

ஹிந்துத்துவா ஹனுமான்கள்

வீச்சறுவா தமிழ் கலாச்சாரக்காவலர்கள்

பிங்க் ஜட்டி அனுப்புபவர்கள்

பிங்க் ஆணுறை அனுப்புபவர்கள்

இவர்களிடையே காதலர் தினம் கொண்டாடுவோருக்கு என் வாழ்த்துக்கள். கூடவே இரு பாடல்கள் சமர்பணம்.

1. வாலியின் அருமையான வரிகளில்

காதலெனும் தேர்வெழுதி

இந்த வல கையில்

வளையல்கள் நானல்லவா ?

இன்று வல கையை

வளைக்கும் நாளல்லவா ?

2. வைரமுத்துவின் வைரவரிகளில்

காதலிக்கும் பெண்ணின் கைகள்

காதலின் சங்கீதமே

பூமியின் பூபாளமே!

.

.

.

காதல் கெட்ட வார்த்தையா

சொல்ல வேண்டும் இன்று

காதல் முள்ளின் வேலியா

செல்ல வேண்டும் இன்று





க்யூபா: 50 வருடமாக தொடரும் ’புரட்சி’

9 02 2009

புரட்சி என்று சொல்லை சொன்னாலே பலரும் க்யூபாவுல என்ன நடக்குது தெரியுமா என்று தொடங்கிவிடுவார்கள். அங்க என்ன நடந்தாலும் பரவாயில்லை சாமி , நமக்கு சற்றே தெரியாத சில விஷயங்கல சொல்ல முயற்சிப்பதே இந்த பதிவின் நோக்கம்.

1959ல் பிடெலின் கம்யூனிச சோசியலிச கட்சி , பட்டிஸ்டா என்கிற சர்வாதிகாரியை , ஆயுத புரட்சி மூலம் தூக்கி எரிந்தது. இந்த புரட்சியின் 50வது வருடம் 2009.  உலக அளவில் போராட்டம் , புரட்சி , ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுத்தல் என்று பலவற்றிக்கும் ஒரு உதாரண பிம்பமாகத் திகழ்வது பிடெல் காஸ்ட்ரோ மற்று சே குவேரா (இவர் அர்ஜண்டீனா நாட்டில் பிறந்தவர்).

 

சே என்பவர் புரட்சியாளர்களின் ராக் ஸ்டார் என்று சொல்லலாம். அழகான மெல்லிய தோற்றம். சீற்றம் நிறைந்த கண்கள். உலகில் எங்கு புரட்சி நடந்தாலும் அங்கு சென்று குரல் மட்டும் கொடுக்காமல் ‘கை’ கொடுத்து போராடினார். க்யூபா , காங்கோ மற்றும் பொலிவியாவில் போராடினார். 1964ல் ஐக்கிய நாடுகள் சபையில் க்யூபா சார்பாக பேசினார். கத்தி எடுத்தவனுக்கு கத்தியில் தான் சாவு என்பது போல் பொலிவியாவின் அரசு படைகளால் போராட்டத்தில் கொல்லப்பட்டார்.

 

 

பிடெலின் அமேரிக்க எதிர்ப்பு உலகறிந்ததே. அமேரிக்க சி.ஐ.ஏ (அடாவடி) நிறுவனம் பல முறை காஸ்ட்ரோவை காலி செய்ய போட்ட சதி திட்டங்கள் , உலக வரலாற்றில் இடம் பெறக்கூடியவை. இருப்பினும் அந்த சவால்களை சமாளித்து 2008 ஆண்டுவரை புரட்சி சிம்மாசனத்தில் ஆட்சி செய்து வந்தார் காஸ்ட்ரோ. பின் உடல் நலம் சரியில்லாததால் தம்பியிடம் இப்பொழுது பொறுப்பைக் கொடுத்துள்ளார். இது தான் புரட்சியானு கேட்காதீங்க. விடை உங்களுக்கே தெரியும்.

 

 

 

 

***

1970களில் அங்கோலாவில் 3 பிரிவுகளாக உள் நாட்டு பூசல் நிலவியதில் க்யூபா தன் ராணுவத்தை அனுப்பி மார்க்சிய போராளிகளுக்கு உதவி புரிந்தது. ரஷ்யாவின் கைப்பாவையாக க்யூபாவை எண்ணியிருந்தவர்கள் இந்த வகை புரட்சி போரட்ட ஆதரவைப் பார்த்து சற்று கதி கலங்கினர். அங்கோலா போராட்டத்தில் 20,000 க்யூபா படைகள் உயிரிழந்தனர். ஒரு காலத்தில் ஸ்பெயின் ஆண்ட க்யூபாவில் , அடிமைகளாக கொண்டுவரப் பட்ட அங்கோலா மக்கள் தங்கள் தொப்புள் கொடி உறவுகளுக்காக உயிர் விட்டதில் வியப்பேதுமில்லை.

இந்த போராட்டத்தின் மூலமே தென் ஆப்பிரிக்காவின் ”அப்பார்த்தெய்ட்” [இன பிரிக்கை] எனப்படும் கொடுமையை விடுவிக்க பாடுபட்டது க்யூபா.  எனக்குத் தெரிந்து உலகில் எந்த நாடும் செய்யாது ஒரு புரட்சி. மனிதனில் ஏற்றத் தாழ்வுகளை களைய இது போல் இந்தியா ஸ்ரீலங்காவில் இறங்கியிருந்தால் என்றோ விடிவு கிடைத்திருக்கும் தமிழ் மக்களுக்கு.

***

ஒரு சர்வாதிகாரியை தூக்கி எரிந்துவிட்டு மீண்டு ம் ஒரு சர்வாதிகாரியாகவே க்யூபாவை ஆண்டு வந்தார் காஸ்ட்ரோ. ஸ்டாலினின் கூலாக் போலவே பல அரசியல் எதிரிகளை அடிமைச் சிறையில் தள்ளியவர் பிடேல் என்பதை மறுக்க முடியாது. இதில் 20,000க்கும் மேற்பட்டவர்கள் தப்ப முயற்சிக்கும் பொழுது கொல்லப்பட்டனர். க்யூபாவின் மருத்துவர்கள் , பொரியாளர்களை தன் அரசியல் கருவிகளாக காஸ்ட்ரோ பயன்படுத்துகிறார். அனைவருக்கும் இலவச மருத்துவம் என்ற அற்புதத்தை நிகழ்த்தினாலும் , ஒரு நோயாளி அறுவை சிகிச்சை என்றால் தானே படுக்கை முதல் தைக்கும் நூல் வரை கொண்டு செல்ல வேண்டும் என்று கேள்விப் பட்டேன்.

***

பி.பி.சி உலக சேவையின் கேட்க வேண்டிய ஒலிப்பதிவுகள் (ஆங்கிலத்தில்):

http://www.bbc.co.uk/worldservice/documentaries/2008/12/081229_brand_cuba_one.shtml

http://www.bbc.co.uk/worldservice/documentaries/2008/12/090102_brand_cuba_two.shtml

***

க்யூபாவின் முழு சரித்திரம்:

http://www.bbc.co.uk/worldservice/indepth/cuba.shtml





சந்தி சிரிக்கிர மாதிரி ஆகிடிச்சே வி.கோ!

4 02 2009
காமடி டைம் மறைத்த புகைப்படம்

பதிவர் காமெடி டைம் வி.கோ. மறைத்த புகைப்படம்

நம்ம காமெடி டைம் பதிவர் மேலிருக்கும் புகைப்படத்தைப் போட்டு அதற்கு முத்தாய்ப்பாக இப்படி தலைப்பு வைத்தவர் : பின்னே எதுக்குடா போட்டோ எடுக்குறீங்க…

பதிவினைப் போட்டு குதூகலமாக இருந்த நம்ம வி.கோவைத் திடீர் என்று ஒருவர் வந்து நாக்கப் புடுங்கற மாதிரி நாலு வார்த்த கேட்ட உடனே அந்த பதிவை கடவுச்சொல் கொண்டு முடக்கினார் நம்ம ஹைதிராபாத் (அ)சிங்கம்.

***

அதுக்கு அப்புறம் மிரட்டல் விட்டாரே பாக்கனும்

உன்னத் தெரியும் , உங்கப்பன தெரியும் , மேலும் உன் வீட்டில் நேற்று ஆடு குட்டிப் போட்டது தெரியும். அடேங்கப்பா என்ன அப்ரோச் , என்ன கருத்து சுதந்திரம்.

***

பார்ப்பனியத்தை அழித்து சாதிகளில் ”சமத்துவம்” ஏற்படுத்தும் அம்பேத்கர் டீ-ஷர்ட் பிரிண்டிங்க் பிஸ்ணஸில் வி.கோ.வும் ஒரு பார்ட்னர் என்று பின்னர் தெரியவந்தது. மக்கள் முன்னேற்றத்திற்காக போராடிய அம்பேத்கர் இந்த கபட நாயகர்கள் கையில் படும் பாடு…

சாதிகள் இல்லையடி பாப்பா என்று பாடிய தமிழன் வேண்டாம் , தமிழனெல்லாம் காட்டுமிராண்டி என்று பட்டம் கொடுத்த கன்னடக்காரன் வேண்டும் என்ற ”நல்ல” மனநலத்துடன் இருப்பவர்கள் கூடாரத்தை சார்ந்தவர் காமெடி டைம் வி.கோ.

கேட்ட எந்த கேள்விக்கும் பதில் வராது என்று தெரியும் , குறைந்தது கட்டியிருக்கும் வேட்டியவாது இறுக்க கட்டியிருக்கலாம். இப்படி சந்தி சிரிக்கிர மாதிரி ஆகிடிச்சே வி.கோ!

பி.கு: புகைப்படம் வி.கோ.வின் வண்டவாளத்தை தண்டவாளம் ஏற்றுவதற்காக மட்டுமே. மத எண்ணங்களை புண்படுத்த அல்ல.





வெறும் கூடுகள் மட்டும் ஊர்வலம் போகின்றோம்

1 02 2009

முத்துகுமரன் செய்தது தவறா சரியா என்று பேச வரவில்லை. தன் அவா நிறைவேறவில்லை , என்ன செய்தாலும் தன் அவா நிறைவேற முடியாதது போல முட்டுக்கட்டைப் போடுபவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தன் உயிரும் உடலும் பொருட்டல்ல என்று காட்டியுள்ளார் குளத்தூரை சேர்ந்த இளைஞர்.

செய்தியைக் கேட்டு உதட்டில் இருந்த வழக்கமான புன்னகை மறைந்தது. ஏற்கனவே பல அப்பாவி ஈழத் தமிழர்களின் மரண ஓலங்கள் கேட்டு கரைந்த மனம் தமிழகத்தில் ஒருவரின் உயிர்விட்டார் என்று அறிந்ததும் மீதி இருந்த மனமும் அறுந்து விழுந்தது.

போர நிறுத்தித் தொலைங்கடா என்று கத்தத் தோன்றியது. தன்னை எரித்துக் கொண்டவரின் தீயே எதையும் வெந்து சமைக்காத பொழுது என் கத்தல் என்ன செய்யும் என்று மனதுக்குள்ளேயே புதைத்துக் கொண்டேன்.

நேற்று என்னுடன் வேலைப் பார்க்கும் அமேரிக்கர் கேட்டார். ஸ்ரீலங்காவில் புலிகளால் பெரும் பிரச்சனையாமே என்று. அவர் வரை இவ்விஷயம் பரவியது மகிழ்ச்சி என்றாலும் என்னால் அவரிடம் எந்த நிலை எடுத்து பேசுவது என்று தெரியாமல் ஆம் என்று ஒற்றை வார்த்தையில் என் விளக்கத்தை முடித்துக் கொண்டேன்.

ஆயுதம் என்ற புலி வாலைப் பிடித்து இதுவே என் போர் வாள் என்று அறிவித்த பின்னர் , வானிலிருந்து 1000 டன் குண்டுகள் வீசிகிறான் , 5 குழாய் பிரங்கியால் சுடுகிறான் என்றால் நம்மால் என்ன செய்ய முடியும். ஆயுதத்தை என் தேசம் தராமல் இருந்தால் நன்றாகவே இருக்கும். ஆனால் இந்த ஆயுதங்கள் வேறு எவரேனும் தந்து உதவுவார்கள். இருப்பினும் இந்தியா உதவாத நிலையில் மற்ற நாடுகள் உதவ குறைந்தது இரு முறையாவது சிந்திப்பார்கள்.

தமிழர்களின் மரண ஓலங்கள் நிறைந்த வீடியோ மற்றும் ஆடியோக்களை டி.வி. மற்றும் வானொலியில் பரப்பபுவது அவசியமென்றே நினைக்கிறேன். அப்படியாவது தாற்காலிகமாக நிறுத்தலாம் இந்த போரை. அங்கு நடப்பது போரல்ல என்று தெரியட்டும் இந்தியர்களுக்கு.

தமிழர்களுக்குப் பிச்சை வேண்டாம் என்கிறார்கள் சிலர். இப்பொழுது இருக்கும் நிலையில் அங்கு போராட்டத்தில் பங்கு எடுக்காதவர்களை , நடை பிணமாக வாழ்பவர்களை தமிழகம் தத்தெடுக்கலாமே – தாற்காலிகமாக.