முத்துகுமரன் செய்தது தவறா சரியா என்று பேச வரவில்லை. தன் அவா நிறைவேறவில்லை , என்ன செய்தாலும் தன் அவா நிறைவேற முடியாதது போல முட்டுக்கட்டைப் போடுபவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தன் உயிரும் உடலும் பொருட்டல்ல என்று காட்டியுள்ளார் குளத்தூரை சேர்ந்த இளைஞர்.
செய்தியைக் கேட்டு உதட்டில் இருந்த வழக்கமான புன்னகை மறைந்தது. ஏற்கனவே பல அப்பாவி ஈழத் தமிழர்களின் மரண ஓலங்கள் கேட்டு கரைந்த மனம் தமிழகத்தில் ஒருவரின் உயிர்விட்டார் என்று அறிந்ததும் மீதி இருந்த மனமும் அறுந்து விழுந்தது.
போர நிறுத்தித் தொலைங்கடா என்று கத்தத் தோன்றியது. தன்னை எரித்துக் கொண்டவரின் தீயே எதையும் வெந்து சமைக்காத பொழுது என் கத்தல் என்ன செய்யும் என்று மனதுக்குள்ளேயே புதைத்துக் கொண்டேன்.

நேற்று என்னுடன் வேலைப் பார்க்கும் அமேரிக்கர் கேட்டார். ஸ்ரீலங்காவில் புலிகளால் பெரும் பிரச்சனையாமே என்று. அவர் வரை இவ்விஷயம் பரவியது மகிழ்ச்சி என்றாலும் என்னால் அவரிடம் எந்த நிலை எடுத்து பேசுவது என்று தெரியாமல் ஆம் என்று ஒற்றை வார்த்தையில் என் விளக்கத்தை முடித்துக் கொண்டேன்.
ஆயுதம் என்ற புலி வாலைப் பிடித்து இதுவே என் போர் வாள் என்று அறிவித்த பின்னர் , வானிலிருந்து 1000 டன் குண்டுகள் வீசிகிறான் , 5 குழாய் பிரங்கியால் சுடுகிறான் என்றால் நம்மால் என்ன செய்ய முடியும். ஆயுதத்தை என் தேசம் தராமல் இருந்தால் நன்றாகவே இருக்கும். ஆனால் இந்த ஆயுதங்கள் வேறு எவரேனும் தந்து உதவுவார்கள். இருப்பினும் இந்தியா உதவாத நிலையில் மற்ற நாடுகள் உதவ குறைந்தது இரு முறையாவது சிந்திப்பார்கள்.
தமிழர்களின் மரண ஓலங்கள் நிறைந்த வீடியோ மற்றும் ஆடியோக்களை டி.வி. மற்றும் வானொலியில் பரப்பபுவது அவசியமென்றே நினைக்கிறேன். அப்படியாவது தாற்காலிகமாக நிறுத்தலாம் இந்த போரை. அங்கு நடப்பது போரல்ல என்று தெரியட்டும் இந்தியர்களுக்கு.
தமிழர்களுக்குப் பிச்சை வேண்டாம் என்கிறார்கள் சிலர். இப்பொழுது இருக்கும் நிலையில் அங்கு போராட்டத்தில் பங்கு எடுக்காதவர்களை , நடை பிணமாக வாழ்பவர்களை தமிழகம் தத்தெடுக்கலாமே – தாற்காலிகமாக.

// தமிழர்களுக்குப் பிச்சை வேண்டாம் என்கிறார்கள் சிலர். இப்பொழுது இருக்கும் நிலையில் அங்கு போராட்டத்தில் பங்கு எடுக்காதவர்களை , நடை பிணமாக வாழ்பவர்களை தமிழகம் தத்தெடுக்கலாமே – தாற்காலிகமாக. //
இதையே தான் நானும் கூறினேன் என் நண்பனிடம்.
ஈழத்து மக்கள் தனது இருப்பிடத்தை விட்டு வெளியேற மாட்டர்கள். தனது சொந்த மண்ணை விட்டு எப்படி வருவார்கள் ஈழத் தமிழர்கள் என்று விவாதிக்கிறான்.
உண்மைதானே உங்கள் நண்பர் நினைப்பது. தத்தெடுக்க வேண்டும் என்பது ஒரு மிகையான அவா தான்