Religulous: பகுத்தறிவு

மதம் பிடித்த யானையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மதத்தைப் பற்றிய டாக்குமெண்டரி (விளக்கப் படம்), Religulous.

உலகில் மிக முக்கியமாகக் கருதப்படும் ஜூயிஸம் , கிருஸ்த்தவம் மற்றும் முஸ்லிம் மத நூல்களில் உள்ள கற்பிதங்கள் மற்றும் பழக்க வழக்கங்களில் உள்ள பகுத்தறிவினை ஆறாய்வதே இந்த படத்தின் வெளிப்புற நோக்கம் என்றாலும் உள்ளூற ஓடும் செய்தி என்னவோ நேற்றைய மதம் என்பது இன்றைய நடப்பில் முட்டாள்த்தனம் என்பதே.

பில் மெஹர் டாக்குமெண்டரியை வழி நடத்துகிறார். உலகம் ஒரு நாள் அழியும் பின்பு ஏசு வருவார் என்பதை பல மத போதகர்களிடம் சென்று விளக்கம் கேட்கிறார். நல்லது நடக்க வேண்டுமென்றால் ஏன் ஒரு தூதுவரை கடவுள் நாடுகிறார். அவரே நேரே வந்து உலகில் உள்ள எல்லா தீயவைகளையும் அழித்து நல்லவற்றை நிலைநாட்டலாமே என்ற மிக எளிய கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

டச் (நேதர்லாண்ட்) நாட்டிலுள்ள மக்கள் முஸ்லிம் மதத்தை வெளிப்படையாக எதிர்கின்றனர். நாடளமன்ற உறுப்பினர் முஸ்லிம் மதம் ஒரு வன்முறை மதம் என்று வெளிப்படையாக டாக்குமெண்டரியில் தெரிவிக்கிறார். முஸ்லிம் மத போதகர்களிடமிருந்து வரும் ஒரே பதில் இல்லை…இல்லை…இல்லை…இதெல்லாம் அரசியல். ஆனால் ஏனோ பல இடங்களில் அப்பாவிகள் கொல்லப்படுவது இஸ்லாமிய மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் பயங்கிரவாதிகள் தான் என்பது மறுக்க முடியாத நிதர்சனமாக உள்ளது.

பின்பு ஆச்சாரமான ஜூஸ் செய்யும் ‘கண்டுபிடிப்புகளை’ கிண்டலும் செய்கிறார். ஆச்சாரமான ஜூக்களுக்கு சாபத் அனுஷ்டிக்கும் நாளில் நெருப்பு பயன்படுத்தக்கூடாதாம் – இதனை கோஷர் (Kosher) என்கிறனர்.

ஜீசஸ் வழி என்னுடைய வெளியுறவு கொள்கைகளில் ஒன்று என்று புஷ் அறிவிக்கையில் இராக் மீது குண்டு மழை படத்தில் வருகிறது.

BRONZE AGE-ல் கண்டுபிடுக்கப்பட்ட ஒரு மத்தை அறிவியல்றீதியாக நிலைநாட்ட நினைப்பது முட்டாள்த்தனம் என்பது பகுத்தறிய விரும்புவர்களுக்கு விளங்கும்.

வீட்டுனுள் பதிங்கியிருக்கும் மதத்தை எதிர்ப்பவர்கள் இந்த கடவுளை எதிர்க்க வெளிவர வேண்டும் என்ற குரலுடன் படம் முடிகிறது.

பாருங்கள் , பகுத்தறிய விரும்பினால்.

திரை விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன

அறுவெறுப்பு : மும்பை , ஆஸ்ட்ரியா

மும்பை

தன் பெண்ணை வன்கொடுமை செய்த பொருக்கியைக் கண்டு. அவளது தாயைக் கண்டு. டுபாக்கூர் சாமியாரைக் கண்டு.

அக்குழந்தைகள் இனி தவறியும் பெற்றோர் என்ற போர்வையில் சுத்தும் இந்த காம மிருகங்களிடம் சிக்கக் கூடாது.

***
ஆஸ்ட்ரியா

தன் பெண் குழந்தையை 24 வருடங்களுக்கு மேலாக வீட்டில் அடக்கி வைத்து , அவளுக்கு 7 குழந்தைகளைக் கொடுத்த மெண்டல் கேஸ் இன்று மனநல மருத்துவமனையில்.

***

அம்மாக்களே கொஞ்சம் காப்பாத்துங்க !

பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன

ரஜினி படங்கள் வர காரணம் யார் ?

திடீரென்று ரஜினிகாந்திடமிருந்து உங்களுக்கு ஒரு ஃபோன் வருகிறது. நான் உங்களுக்கு கால்ஷீட் தருகிறேன், நீங்கள் படம் எடுங்கள் என்று அவர் சொல்கிறார். அதற்கப்புறம் நீங்கள் படம் எடுக்காமல் எப்படி இருக்க முடியும்? எடுக்கவில்லையானால் தமிழ்நாட்டுக்கு எந்த நஷ்டமுமில்லை, ஆனால் நீங்கள்தான் வலிய வந்த சீதேவியை வாய்க்காலில் பிடித்துத் தள்ளிவிட்டு வேகுவேகென்று வெய்யிலில் நடந்து போகிறீர்கள் என்று அர்த்தம். ஆக, ரஜினிகாந்த்தின் படங்கள் எடுக்கப்படுவதற்கான காரணம், ரஜினி தருகிற கால்ஷீட்தான். குழப்பமாக இருக்கிறதா?

 

நம் தமிழ் படங்கள் ஏன் இப்படி…என்று உயிர்மையில் வினவுகிறார் , சுதேசமித்திரன்.

திரை விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன

பா.சி உண்மை சொல்கிறாரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது

வெளியுறவு அமைச்சர் பா.சிதம்பரம் சி.பி.ஜ தலைவர் குணசேகரன் மீது வழக்குத் தொடுத்துள்ளார்.

சிவகங்கை மாவட்டத்தில் 500 ஏக்கர் அரசு நிலத்தை கொடுத்து தனியார் தொழில் தொடங்க அனுமதிக்கப்பட்டதாக குணசேகரன் பா.சிதம்பரம் மீது புகார் கூறினார்.

இந்த புகார் பொய் என்று குணசேகரம் மீது மானநஷ்ட்ட வழக்குத் தொடுத்துள்ளார் பா.சிதம்பரம்.

***

பொய் புகார் கூறுவோருக்கு இது ஒரு பாடமாக இருந்தாலும் அடுத்த முறை பா.சி உண்மை சொல்கிறாரா என்று நாம் தெரிந்து கொள்ள அவர் யார் யார் மீது வழக்குத் தொடுக்கிறார் என்பதை கவனிக்க வேண்டும் :)

அரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன

சீமானுக்கு வழக்கறிஞர்கள் தந்த பரிசு

வழக்கறிஞர் போராட்டம் காரணமாக உடனடி நிவாரண வழக்குகள், ஜாமீன் வழக்குகள் போன்ற வழக்குகளில் கட்சிக்காரர்களே நேரில் ஆஜராகி வாதாடும் போக்கு அதிகரித்து வருகிறது.

இயக்குனர் சீமானின் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர், நேற்று உயர்நீதிமன்றத்தில் சீமானின் ஜாமீன் மனு குறித்து நேரில் தோன்றி வாதாடினார்.

[தினதந்தி] [செய்தி கிடைத்த இடம் ஒரு குழுமத்தில்]

***

கருத்துரிமையை நிலைநாட்ட நீதிமன்றம் சென்றாலும் அங்கு வாதாட வழக்கறிஞர்கள் கிடைக்க மாட்டார்கள் போல் உள்ளது.

அரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன

சங்கரன்கோயிலில் கோனாரியம் ?

கோனாரியம் என்றால் கோனார் நோட்ஸ் படிக்கிறதுனு நினைக்காதிங்க. சாமி கும்பிடருதுல தகராராம் – 2 தலித்துகள் வெட்டிக் கொலை !

http://ibnlive.in.com/news/two-dalits-hacked-to-death-in-tamil-nadu/87073-3.html

சட்ட கல்லூரியில் நடந்த தேவரியம் மற்றும் தலித்தியம் மறந்திருக்க மாட்டீங்கனு நினைக்கிறேன்.

பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன

டுவிட்டர்: புது திருக்குறள் ?

ரத்தின சுருக்கமா இரண்டு வரியில சொல்லுப்பா என்று கேள்விப்பட்டுருப்பீர்கள்.அது தான் டுவிட்டர்.

நேரடியா விஷயத்துக்கு வாங்க.அலங்காரத் தோரணங்கள் வேண்டாம். சொல் அலங்காரங்கள் வேண்டாம்.140 எழுத்துக்கள் மட்டும் போதும்.

Twitter

அப்படி எழுதினா என்ன எதிர்பார்க்கலாம் ?

நாம் சொல்லுர விஷயத்த யாரும் கேக்கலையே இல்ல கேக்குறாங்களா ? இல்ல கேட்டு சும்மா இருக்காங்களா ? இல்ல கேட்டு பதில் சொல்லுவாங்களா ?

நம்மள யாராவது பின் தொடர்கிறார்களா ? நாம் யாரையும் பின் தொடரனுமா ? ஒருத்தர பின் தொடர ஒருத்தருடைய அனுமதி வேணுமா ? அனுமதியில்லாமா பின் தொடர்ந்தா வீட்டுக்கு ஆட்டோ வருமா ?

பயன்?!

நேர விரையமா ? செய்தி சேகரிப்பா ?

மும்பை தாக்குதல் முதலில் டிவிட்டரில் பார்த்தேன்.பெங்களூர் குண்டு வெடிப்பு கேள்விப்பட்டு உறவினரை அழைத்தேன் ! இல்ல சும்மா கும்மி அடிக்கிற இடமா ? சில நேரத்துல பங்கு டிப்ஸ் எல்லாம் கிடைக்குதே…

தமிழ் வலையுலகத் தொல்லைக் கிடையாது.சாதி சண்டைக் கிடையாது.பெரியாரிய கும்பல் கிடையாது.கம்யூனிஸ்ட் மிரட்டல்கள் கிடையாது.  நினைச்சத எழுதலாம்.நாம் எழுதுவதை பிறர் பார்ப்பதைக் கட்டுப்படுத்தலாம்.

ஒரு எட்டு வாங்களேன் 6 மில்லியன் மக்கள் அப்படி என்ன தான் செய்யறாங்கனுப் பாருங்களேன்.மறப்பதற்கு முன் டுவிட்டர் சேவை இலவசம்.குறளைப் போல சுறுக்கம் – ஞானம் பெற வாழ்த்துகள்.

www.twitter.com

How to Twitter: http://online.wsj.com/article/SB123638550095558381.html

பகுக்கப்படாதது இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன

நாய்க்குணம்

Cynics என்றால் நாய்க்குணம்.அப்படித்தான் சிக்காகோ அகராதி சொல்லுது !

வாழ்க்கையில் மகிழ்ச்சி என்பது இவர்கள் வாழும் வரை பார்க்க மாட்டார்கள்.அந்த பையன் என்னமா இசைக்கிறான் என்றால் அந்த பிறந்த ஜாதியைப் பற்றி வகுப்பெடுப்பார்கள்.இல்லை அவன் யாருடையக் “கைக்கூலி” என்று முனைவர் ஆராய்ச்சி நடக்கும். நிலவுக்குப் போராங்களாமே என்றால் யாருக்குப் பயன் என்பார்கள்.ஆஸ்கர் வாங்கினாரே என்றால் பாஸ்கர் பற்றி ஏன் பேசவில்லை என்று கேட்பார்கள்.கேட்டால் குவாண்டம் பிசிக்ஸ் படிச்சுட்டு வாங்க அப்புறம் விவாதிக்கலாம் என்பார்கள்.இதற்கெல்லாம் ஆதரவா “excellent”, “keep writing” என்று பாராட்டு!

அந்த ‘பட்டதாரிகள்’ நல்லா எழுதுவாங்க , நல்லா பட்டம் கொடுப்பாங்க , கடைசியா பல இடங்களில் அவர்களே அடித்துக் கொண்டு தமிழ் நண்டு கதைய விட மோசமான உதாரணமாக நிற்பார்கள்…

***

The Mystic Master

http://www.tehelka.com/story_main41.asp?filename=Ne240109cover_story.asp

RAHMAN IS the most spiritual person to ever touch my life,” says Mehra. “He has zero ego, there is no ‘I’ or ‘me’ in him.” “It is true. He has a surreal influence on people,” agrees Deepak Gattani of Rapport entertainment agency, who constructs most of Rahman’s extravagantly mounted concerts and has been a friend for 16 years. “He has taught me there is more to life than we normally see. He never has knee-jerk responses to things.” “He is sent by God, kudrat ne unko banaya hai,” says singer Kailash Kher, who has toured with Rahman often.

The other figure key to Rahman’s journey is his mother, Kasturi — or Kareema Begum, after her conversion. “Amma”, as she is universally known — a jovial, quintessentially motherly figure — has remained a powerful leitmotif in Rahman’s life. “Their relationship is like the bhakt for his bhagwan,” says Kher.

Rahmaniat

http://www.outlookindia.com/full.asp?fodname=20090309&fname=Cover+Story&sid=1

We all access the same software, the same craftsmen but this guy gets something else out of them. All because he puts a lot of soul into his music.” Sonu Nigam, Singer

ஜெய் ரஹ்மான்!

http://uyirmmai.com/Uyirosai/Contentdetails.aspx?cid=993

பத்து நிமிடம்தான் பேட்டிக்காக ஒதுக்கப்பட்ட நேரம். எப்படி ஆரம்பிப்பது என்று தெரியவில்லை. ’எனக்கு இசை குறித்த ஞானம் அவ்வளவாக கிடையாது’ என்று ஆரம்பித்தேன். அதற்கு அவர் தந்த பதில்தான் ஆச்சரியம் : ’ எனக்கும்தான். கத்துக்கிட்டே இருக்கேன். சும்மா எது வேணாலும் பேசலாம். டென்ஷனாகாதீங்க’

அவரது சிறு பிராயம், அப்பாவின் மறைவுக்கு பின்னான நெருக்கடி, இசைக் கருவிகளை வாடகைக்கு விட்டு வாழ்க்கையை நகர்த்த வேண்டி வந்த கட்டாயம், ஆன்மிகத் தேடல், தமிழ், இந்தி இசை உலகில் இருந்து உலாகளாவிய அளவில் அவரது இசை நகர்வுக்கு பின்னிருந்தவர்கள் என பேட்டி விரிந்தது. ரஹ்மான் மிகவும் உற்சாக மனநிலையில் இருந்தார். பேட்டிக்கான நேர எல்லை எல்லாம் கடந்து ஒன்றரை மணி நேரத்துக்கும் மேல் நீடித்தது உரையாடல். பேட்டிக்கானதை விட அதைக் கடந்த பலவற்றையும் பேசினோம். மெலிதாய் இழையோடும் நகையுணர்வு பல இடங்களில் வெளிப்பட்டது. கல்லூரி நண்பனுடன் பேசிக்கொண்டிருக்கும் உணர்வை ஏற்படுத்திய சந்திப்பு அது

அரசியல் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன