bmurali80

Religulous: பகுத்தறிவு

In திரை விமர்சனம் on மார்ச் 29, 2009 at 11:12 மு.பகல்

மதம் பிடித்த யானையை விட அதிக பாதிப்பை ஏற்படுத்திக் கொண்டிருக்கும் மதத்தைப் பற்றிய டாக்குமெண்டரி (விளக்கப் படம்), Religulous.

உலகில் மிக முக்கியமாகக் கருதப்படும் ஜூயிஸம் , கிருஸ்த்தவம் மற்றும் முஸ்லிம் மத நூல்களில் உள்ள கற்பிதங்கள் மற்றும் பழக்க வழக்கங்களில் உள்ள பகுத்தறிவினை ஆறாய்வதே இந்த படத்தின் வெளிப்புற நோக்கம் என்றாலும் உள்ளூற ஓடும் செய்தி என்னவோ நேற்றைய மதம் என்பது இன்றைய நடப்பில் முட்டாள்த்தனம் என்பதே.

பில் மெஹர் டாக்குமெண்டரியை வழி நடத்துகிறார். உலகம் ஒரு நாள் அழியும் பின்பு ஏசு வருவார் என்பதை பல மத போதகர்களிடம் சென்று விளக்கம் கேட்கிறார். நல்லது நடக்க வேண்டுமென்றால் ஏன் ஒரு தூதுவரை கடவுள் நாடுகிறார். அவரே நேரே வந்து உலகில் உள்ள எல்லா தீயவைகளையும் அழித்து நல்லவற்றை நிலைநாட்டலாமே என்ற மிக எளிய கேள்விக்கு யாராலும் பதில் சொல்ல முடியவில்லை.

டச் (நேதர்லாண்ட்) நாட்டிலுள்ள மக்கள் முஸ்லிம் மதத்தை வெளிப்படையாக எதிர்கின்றனர். நாடளமன்ற உறுப்பினர் முஸ்லிம் மதம் ஒரு வன்முறை மதம் என்று வெளிப்படையாக டாக்குமெண்டரியில் தெரிவிக்கிறார். முஸ்லிம் மத போதகர்களிடமிருந்து வரும் ஒரே பதில் இல்லை…இல்லை…இல்லை…இதெல்லாம் அரசியல். ஆனால் ஏனோ பல இடங்களில் அப்பாவிகள் கொல்லப்படுவது இஸ்லாமிய மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றும் பயங்கிரவாதிகள் தான் என்பது மறுக்க முடியாத நிதர்சனமாக உள்ளது.

பின்பு ஆச்சாரமான ஜூஸ் செய்யும் ‘கண்டுபிடிப்புகளை’ கிண்டலும் செய்கிறார். ஆச்சாரமான ஜூக்களுக்கு சாபத் அனுஷ்டிக்கும் நாளில் நெருப்பு பயன்படுத்தக்கூடாதாம் – இதனை கோஷர் (Kosher) என்கிறனர்.

ஜீசஸ் வழி என்னுடைய வெளியுறவு கொள்கைகளில் ஒன்று என்று புஷ் அறிவிக்கையில் இராக் மீது குண்டு மழை படத்தில் வருகிறது.

BRONZE AGE-ல் கண்டுபிடுக்கப்பட்ட ஒரு மத்தை அறிவியல்றீதியாக நிலைநாட்ட நினைப்பது முட்டாள்த்தனம் என்பது பகுத்தறிய விரும்புவர்களுக்கு விளங்கும்.

வீட்டுனுள் பதிங்கியிருக்கும் மதத்தை எதிர்ப்பவர்கள் இந்த கடவுளை எதிர்க்க வெளிவர வேண்டும் என்ற குரலுடன் படம் முடிகிறது.

பாருங்கள் , பகுத்தறிய விரும்பினால்.