இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் (for download)

Thendral Writer Stories Vol 1


Thendral Short Stories Vol 1

பசங்க: பழங்கள்ளு புது மொந்தை

பசங்க படம் பார்த்தேன். சின்ன பசங்க செம்ம லூட்டி அடிக்கிறாங்க. சினிமாத் தனமாவே எடுத்திருப்பதால் எதார்த்தம் எல்லாம் எதிர்பார்க்க வேண்டாம்.

எதார்த்தமாக எடுப்பதாக சில இடங்களில் இயக்குனர் அவரையே ஏமாற்றிக் கொள்கிறார். செல்போன் காமெடி நல்லா இருக்கு. விமல் இயக்குனர் அமீர் தம்பி போல் தெரிகிறார். குட்டி ராதிகாவின் ஒப்பனை சோபிக்கவில்லை.

என்னத்த தான் திருப்பிப் போட்டு எடுத்தாலும் ஏற்கனேவே நீங்க உங்க அக்கம் பக்கத்துல பார்த்துக்கிட்டுருக்கிற விஷயத்ததான் இந்த படமும் சொல்லுது. இது குழந்தைங்க படந்தானே என்பவர்களுக்கு இப்படத்தின் மூலம் குழந்தைகள் அடிதடி பழகிக் கொள்ள வாய்ப்புகள் அதிகம் என்றே தோன்றுகிறது.

பெயருக்குப் பின்னாடி ஐ.ஏ.எஸ் போட்டுக்க இந்த படம் உதவலாம். ஆனால் யாருக்கு இப்போ ஐ.ஏ.எஸ் ஆகனும்னு தல விதி? வேற எதாவது போட்டுக்க சொல்லுங்க உங்க பசங்கள!

திரை விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன

Contract : ராம் கோபால் வர்மா செய்த கொலை


குப்பை என்று ஒதுக்கப்பட வேண்டிய படம் Contract. தீவிரவாத திரைப்படங்களை இயக்குவதில் ராம் கோபால் வர்மா பழம் தின்று கொட்டை போட்டவர். ஆனால் Contract படத்தில் கொட்டை அவர் தொண்டைக்குள் சிக்கிக் கொண்டது என்று நினைக்கிறேன்.

இதற்கு மேல் ஒன்றுமே இல்லை இந்த படத்தைப் பற்றி எழுத. இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன்.

திரை விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன

வெள்ளையனுக்கு இட ஒதிக்கீடு

W E A V E R. Kanchipuram

ஏன் இட ஒதுக்கீடு ஏற்பட்டது என்பதை புரிந்து தான் பிராமணர்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று எஸ்.வி.சேகர் கேட்கிறாரா என்று தெரியவில்லை.
எங்கோ படித்த நினைவு “50-60 வருடம் முன்னவர்கள் செய்த தவறுக்காக இன்று இருப்பவர்களுக்கு ஏன் தண்டனை கொடுக்க வேண்டும்” என்பது போல எஸ்.வி.சேகர் பிராமணர்கள் இட ஒதுக்கீடு பற்றி பேசியிருக்கிறார்.
என்னைப் பொருத்தவரை எஸ்.வி.சேகரின் இந்த கோரிக்கை மைலாப்பூர் மனப்பான்மையே காட்டுகிறது. இவருக்கு பலமாக தமிழக பிராமணர் சங்கமும் செயல்படுகிறது என்று நினைக்கிறேன். எஸ்.வி.சேகரின் இந்த கோரிக்கையை கேட்டவுடன் எனக்குத் தோன்றியது ஏன் வெள்ளையர்கள் இன்னும் இந்தியாவில் இட ஒதிக்கீடு கேட்கவில்லை என்பதே ? வெளி நாட்டிலிருந்து வந்த இவர்கள் மக்கள் தொகையில் 2% சதவிகிதம் உள்ளதாக பால் வடியும் சங்கத்தின் ஆய்வு தெரிவிக்கின்றது. இவர்களில் பலர் ஏழ்மை நிலைக்குத் தள்ளப்பட்டு காசி , காஞ்சி என ஊர் ஊராக பரதேசி என்ற சொல்லுக்கு இலக்கணமாக வாழ்கிறார்கள். இவர்களுக்கு அரசு சலுகைகளும் உதவித் தொகையும் தருவது அவசியம்.
அடுத்து பண்ணையார்கள் , ஜமீந்தார்கள் என ஒதுக்கீடு பட்டியல் வளரலாம் … இதில் சிலருக்கு ஏற்கனவே இடஒதுக்கீடு இருந்தால் அதுவும் ஆச்சரியப்படுவதற்கில்லை !
அரசியல், சமூகம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , , , . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன