ரசவாதியின் எலி

அறிவியல் புனை கதைகளுக்குத் தனி கவர்ச்சி உண்டு. நமக்குத் தெரிந்த அறிவியல் செய்திகளை அவியலாக கதை பண்ணலாம். அல்லது அந்த அறிவியல் அறிவை கற்பனைக் குதிரையில் ஏற்றி ஒரு முறை அண்ட சராசரங்களை சுற்றி வரலாம். அல்லது அறிவியலையும் உளவியலையும் கலந்து வாசகர் மனத்தைக் குழப்பிப் பார்க்கலாம். ரசவாதியின் எலி மூன்றாம் வகையை சார்ந்தது எனலாம்.

ரசவாதியின் எலி – எஸ் ராமகிருஷ்ணன் அவர்களின் சிறுகதை.

எஸ் ராமகிருஷ்ணன் அவர்களுக்கு இயற்கைக் குறித்த பிரக்ஞை அவரது பல சிறுகதைகளில் வெளிபட்டுக் கொண்டே இருக்கிறது. இந்த நகரிலும் பறவைகள் இருக்கின்றன , பதினெட்டாம் நூற்றாண்டின் மழை போன்ற சிறுகதைகள் இக்கூற்றுக்கு நல்ல உதாரணம்.

கதை களம் அமேரிக்காவின் மாஸச்சூஸட்ஸ். கம்போடியாவில் பிடிப்படும் எலி எப்படி உடல் இடை இழந்து வானில் பறக்க வைக்கிறார் திருச்சியை சேர்ந்த சாம். அதைவிட முக்கியமான கேள்வி அதனை ஏன் பறக்க விட வேண்டும் ? என்பதை இச்சிறுகதையில் காணலாம்.

அறிவியல் நெறிகனை இழந்து வணிக மயமாக்கலினால் கண்டுபிடிப்புகள் எவ்வாறு அதிகாரத்திடம் சிக்குண்டு இருக்கிறது. மரபு வழி இயற்கை சார்ந்த விஞ்ஞான அறிவை ஏன் இன்றைய விஞ்ஞானம் நிராகரிக்கிறது? என்று சாம் வழியாக எழுத்தாளர் வாசகருடன் சில விவாதங்களை முன் வைக்கிறார்.

இதனிடையை இந்த கேள்விக்கெல்லாம் விடையாக சூன்யக்காரிகள் எப்படி சாம்மின் பரிசோதனைக்கு வழிகாட்டுகிறார்கள். மதம் எனும் அதிகாரத்திலிருந்து விடுதலை அடையவே அவர்கள் நம்ப முடியாத சாகசங்களை செய்து காட்டினார்கள் என்பதை சாம் அறிகிறான். அவ்வாறு சூன்யக்காரிகளின் வழியை பின்பற்றுவதால் சாம்மினால் அறிவியலை அதிகாரத்திடமிருந்து விடுவிக்க முடிகிறதா ?

***

சாம் தான் இதில் அதிகாரம் எனும் ரசவாதியிடம் சிக்கிக் கொண்ட எலி என்பது போல எஸ்.ரா. நிருவ முயல்கிறார் ஆனால் கதை முடிவில்லாமல் நிற்பதாகவே எனக்குத் தோன்றுகிறது. உங்களுக்கு வேறு மாதிரி தோன்றினால் தெரிவியிங்கள் !


புனைவின் தேவை

சிறுகதை விமர்சனம் இல் பதிவிடப்பட்டது . குறிச்சொற்கள்: , , , . மறுமொழிகள் நிறுத்தப்பட்டுள்ளன