உளறல், வி.கோ, வே.மதிமாறன்
In அரசியல் on ஆகஸ்ட் 12, 2009 at 8:31 பிற்பகல்
மடத்தனத்தை மொத்தமாகக் குத்தகைக்கு எடுத்து ‘மடம்’ நடத்திக்கொண்டிருப்பவர்கள் , ராக்கி கயிறின் பின்னணி ஜாதி தான் என்ற அறிய கண்டுபிடிப்பை வெளியிட்டுள்ளனர்.

தோழர் எழுத தோழர் வெளியிட ஒரே அறிவொளியில கண் கூசுகிறது.
எவ்வளவு கொணஷ்டையாக ஒரு மனிதனால் யோசிக்க முடியும்? நினைத்தால் சற்றே அயர்ச்சியாக இருக்கிறது.
அந்த கட்டுரையை எழுதியவரின் சொந்தமோ அல்ல நன்கு அறிமுகமான நண்பியோ அவருக்கு ராக்கி கட்ட வந்தால் என்ன செய்வார்?
முகம் மலர சிரித்த படியே கை நீட்டி ராக்கிக் கட்டிக் கொண்டு அதே கையுடன் ராக்கி ஜாதியின் அடையாளம் , ராக்கி ஆண்களிடமிருந்து பெண்களைக் காத்துக் கொள்ளவே அன்பினாலல்ல , தாலியும் ராக்கியும் பெண் அடிமைத் தனம் என்று கிறுக்குவார் என நினைக்கிறேன். ஆம் உபதேசம் , பகுத்தறிவதெல்லாம் ஊருக்கு மட்டுமே.
‘சிந்தனையாளர்கள்” அழிந்துவிட்டார்கள் என யார் சொன்னது ?
1. சந்தி சிரிக்கிர மாதிரி ஆகிடிச்சே வி.கோ!
2. ஒரு மடயனும், ‘தம்பி’ சீமானும்!
3. குட் பெர்பாமன்ஸ் தரக்கூடிய ஒரே பதிவர்
இந்திய தேர்தல் ஆணையம், தினமணி, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம், dinamani, electronic voting machine, evm, indian election commission
In சமூகம் on ஆகஸ்ட் 5, 2009 at 8:44 மு.பகல்
பகுத்தறிவதில் முக்கிய பங்கு தர்க்கத்துடன் கேள்வி கேட்பதும் சந்தேகிப்பதும்.
இந்தியா கணினி மயமானால் பசி பஞ்சம் காணாமல் போகும் என நம்பும் கூட்டம் ஒரு பக்கம் , கணினியில் அறிவியல் எழுதினால் கூட படிக்க ஆளில்லை என ஒத்துக் கொள்ளும் ஒரு கூட்டம் மறுபக்கம்.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வேலைப்பாட்டை யாராலும் மாற்ற முடியாது என அறிதியிட்டுக் கூறுகிறது இந்திய தேர்தல் ஆணையம். ஆனால் தினமணி இதனை சந்தேகிப்பதுடன் சில சாட்சிகளையும் முன் வைக்கிறது.
தேர்தல் ஆணையம் குறிப்பிடுவதைப் போல, இந்த மென்பொருள்கள் மாற்றவியலாத தன்மையுடன் தயாரிப்பிலேயே உள்ளுக்குள் பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான். அடிப்படையான மென்பொருள் மாற்றம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுவோர் எண்ணிக்கை மாறுகிறது. அவர்களுக்கான சின்னங்கள் தனித்தனியாக உள்ளன. சின்னங்களுக்கான தகவல் இணைப்பை மென்பொருளுடன் சேர்க்கும் பணி மாவட்ட அளவிலான அதிகாரிகளின் பொறுப்பில்தான் நடைபெறுகிறது.
பதிவு செய்யும் பொத்தானுக்கு அருகில் ஒரு கட்சியின் சின்னம் வெளிப்பார்வைக்கு பதிவு இயந்திரத்தில் தெரிந்தாலும், அதை அழுத்தினால் வேறு சின்னத்துக்கு வாக்குப் போய்ச் சேரும்படியாக இணைப்பை மாற்றித் தருவதற்கோ, அல்லது இரண்டாவது அணியின் சின்னத்தில் விழும் வாக்குகள் மூன்றாவது அணிக்கும், மூன்றாவது அணி சின்னத்தின் வாக்குகள் இரண்டாவது அணிக்கும் விழும்படியாக மாற்றி அமைக்கவோ அதிகாரிகள் நினைத்தால் முடியாதா என்பதே சில அரசியல் கட்சிகள் கேட்கும் அடிப்படையான கேள்வி.
ஆனந்த விகடன், இணையம், உயிர்மை, காலச்சுவடு, குமுதம், கூகிள் ஆட் சென்ஸ், சந்தா, நக்கீரன், google ad sense
In சமூகம் on ஆகஸ்ட் 4, 2009 at 10:01 மு.பகல்
உண்மையிலேயே சம்பாதிக்க முடியுமா ? இணையத்தில் நன்றாக எழுதுவதை வைத்து உண்மையிலேயே எதாவது காசு பார்க்க முடியுமா ? காசு பார்ப்தென்றால் ஒரு வணிக முறையில் எழுத்தாளர் தங்கள் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொள்ள முடியுமா ?
எனது ஒற்றை வரி பதில் – இப்போது கண்டிப்பாக முடியாது.
என்ன சார் இப்படி , அதான் கூகிள் ஆட் சென்ஸ் இருக்கே என்பவர்களைப் பார்த்து சிரிப்பதா அல்ல அழுவதா என தெரியவில்லை. அப்பாவிகள் என எண்ணிக்கொள்ளலாம் , அவ்வளவே.
ஒரு மாதத்திற்கு 700,000 பார்வையாளர்கள் கொண்ட தளமே ததிங்கினத்தோம் போடுவதைப் பாருங்கள் …
ஆனந்த விகடன் , குமுதம் ஏன் நக்கீரன் வரை இணையத்தில் சந்தா கட்டியே படிக்க வேண்டுமென்ற முடிவிற்கு சென்றதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதில் தற்போது விதிவிலக்காக இருப்பது உயிர்மை மற்றும் காலச்சுவடு. இவர்களும் நல்ல வாசகர் எண்ணிக்கைக் கூடியதும் சந்தா முறைக்கு செல்வார்கள் என்றே தோன்றுகிறது.
வேறு வழியில்லை எல்லாம் இலவசமென்று வந்து விட்டால் எழுத்தாளன் வீட்டில் அடுப்பெரிவதெப்படி ?
பத்திரிக்கைகளுக்கே இந்த நிலையெனில் தனிப்பதிவர்கள்…
ஜே.கே. ரித்தீஷ், தமிழ் படங்கள்
In அரசியல் on ஆகஸ்ட் 3, 2009 at 10:07 மு.பகல்
நாயகன் தான் தமிழில் கடைசியாக வந்த நல்ல தமிழ் படமாக இருக்க வேண்டும். ஜே.கே. ரித்தீஷின் நடிப்பில் வெளிவந்த படம்.
—
பசங்க படம் பார்த்தாகிவிட்டது. நாதாரி…ச்செ…நாடொடி படம் பார்க்க என்னுடன் இருப்பவர்களுக்கு மனமில்லை. சுப்பரமணியபுரத்தின் பாதிப்பு என நினைக்கிறேன்.
விஜய் படம் பார்க்கலாம் என்றேன் வந்த பதில் ஐயோ…
வில்லுக்கு பதில் சொல்ல விஜய் விட்ட உதாரின் பாதிப்பு இது.
சரி அழகன் அஜீத் படம் பாரக்கலாம் என்றேன் வந்த பதில் ஐய்யய்யோ…
ஒரு பிரயாணத்தில் ஏகன் படம் பார்க்கும் முயற்சியில் ஏற்பட்ட தலைவலி நினைவிலிருந்து நீங்காததால் வெளிவந்த ஐய்யய்யோ இது.
13 ஆம் நம்பர் என ஏதோ ஒரு படமிருக்கே என கேட்டேன் , தூங்கும் வேளையில் துர்கனவுகளை சுமக்க மனமில்லை என பதில் கிடைக்க…
அட போங்கடா இனி ஜே.கே. அண்ணண் படமெடுத்தாத்தான் அடுத்து தமிழில் படம் பார்க்கும் நிலை என எண்ணிக்கொள்ளும் தருணத்தில் , அவரே கவலைப்படாதே தம்பி என நிஜ வாழ்க்கையில் படம் காட்டிக்கொண்டிருக்கிறார். இது நாயகனை மிஞ்சுமென நம்புவோம்.