நாயகன் தான் தமிழில் கடைசியாக வந்த நல்ல தமிழ் படமாக இருக்க வேண்டும். ஜே.கே. ரித்தீஷின் நடிப்பில் வெளிவந்த படம்.
—
பசங்க படம் பார்த்தாகிவிட்டது. நாதாரி…ச்செ…நாடொடி படம் பார்க்க என்னுடன் இருப்பவர்களுக்கு மனமில்லை. சுப்பரமணியபுரத்தின் பாதிப்பு என நினைக்கிறேன்.
விஜய் படம் பார்க்கலாம் என்றேன் வந்த பதில் ஐயோ…
வில்லுக்கு பதில் சொல்ல விஜய் விட்ட உதாரின் பாதிப்பு இது.
சரி அழகன் அஜீத் படம் பாரக்கலாம் என்றேன் வந்த பதில் ஐய்யய்யோ…
ஒரு பிரயாணத்தில் ஏகன் படம் பார்க்கும் முயற்சியில் ஏற்பட்ட தலைவலி நினைவிலிருந்து நீங்காததால் வெளிவந்த ஐய்யய்யோ இது.
13 ஆம் நம்பர் என ஏதோ ஒரு படமிருக்கே என கேட்டேன் , தூங்கும் வேளையில் துர்கனவுகளை சுமக்க மனமில்லை என பதில் கிடைக்க…
அட போங்கடா இனி ஜே.கே. அண்ணண் படமெடுத்தாத்தான் அடுத்து தமிழில் படம் பார்க்கும் நிலை என எண்ணிக்கொள்ளும் தருணத்தில் , அவரே கவலைப்படாதே தம்பி என நிஜ வாழ்க்கையில் படம் காட்டிக்கொண்டிருக்கிறார். இது நாயகனை மிஞ்சுமென நம்புவோம்.
Tags: ஜே.கே. ரித்தீஷ், தமிழ் படங்கள்
