உண்மையிலேயே சம்பாதிக்க முடியுமா ? இணையத்தில் நன்றாக எழுதுவதை வைத்து உண்மையிலேயே எதாவது காசு பார்க்க முடியுமா ? காசு பார்ப்தென்றால் ஒரு வணிக முறையில் எழுத்தாளர் தங்கள் லௌகீக வாழ்க்கைக்குத் தேவையானவற்றை பெற்றுக் கொள்ள முடியுமா ?
எனது ஒற்றை வரி பதில் – இப்போது கண்டிப்பாக முடியாது.
என்ன சார் இப்படி , அதான் கூகிள் ஆட் சென்ஸ் இருக்கே என்பவர்களைப் பார்த்து சிரிப்பதா அல்ல அழுவதா என தெரியவில்லை. அப்பாவிகள் என எண்ணிக்கொள்ளலாம் , அவ்வளவே.
ஒரு மாதத்திற்கு 700,000 பார்வையாளர்கள் கொண்ட தளமே ததிங்கினத்தோம் போடுவதைப் பாருங்கள் …
ஆனந்த விகடன் , குமுதம் ஏன் நக்கீரன் வரை இணையத்தில் சந்தா கட்டியே படிக்க வேண்டுமென்ற முடிவிற்கு சென்றதை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. இதில் தற்போது விதிவிலக்காக இருப்பது உயிர்மை மற்றும் காலச்சுவடு. இவர்களும் நல்ல வாசகர் எண்ணிக்கைக் கூடியதும் சந்தா முறைக்கு செல்வார்கள் என்றே தோன்றுகிறது.
வேறு வழியில்லை எல்லாம் இலவசமென்று வந்து விட்டால் எழுத்தாளன் வீட்டில் அடுப்பெரிவதெப்படி ?
பத்திரிக்கைகளுக்கே இந்த நிலையெனில் தனிப்பதிவர்கள்…
Tags: ஆனந்த விகடன், இணையம், உயிர்மை, காலச்சுவடு, குமுதம், கூகிள் ஆட் சென்ஸ், சந்தா, நக்கீரன், google ad sense
