மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் : நம்பலாமா ?

ஆகஸ்ட் 5, 2009

பகுத்தறிவதில் முக்கிய பங்கு தர்க்கத்துடன் கேள்வி கேட்பதும் சந்தேகிப்பதும்.

இந்தியா கணினி மயமானால் பசி பஞ்சம் காணாமல் போகும் என நம்பும் கூட்டம் ஒரு பக்கம் , கணினியில் அறிவியல் எழுதினால் கூட படிக்க ஆளில்லை என ஒத்துக் கொள்ளும் ஒரு கூட்டம் மறுபக்கம்.

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தின் வேலைப்பாட்டை யாராலும் மாற்ற முடியாது என அறிதியிட்டுக் கூறுகிறது இந்திய தேர்தல் ஆணையம். ஆனால் தினமணி இதனை சந்தேகிப்பதுடன் சில சாட்சிகளையும் முன் வைக்கிறது.

தேர்தல் ஆணையம் குறிப்பிடுவதைப் போல, இந்த மென்பொருள்கள் மாற்றவியலாத தன்மையுடன் தயாரிப்பிலேயே உள்ளுக்குள் பொருத்தப்பட்டிருப்பது உண்மைதான். அடிப்படையான மென்பொருள் மாற்றம் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், ஒவ்வொரு தொகுதியிலும் போட்டியிடுவோர் எண்ணிக்கை மாறுகிறது. அவர்களுக்கான சின்னங்கள் தனித்தனியாக உள்ளன. சின்னங்களுக்கான தகவல் இணைப்பை மென்பொருளுடன் சேர்க்கும் பணி மாவட்ட அளவிலான அதிகாரிகளின் பொறுப்பில்தான் நடைபெறுகிறது.

பதிவு செய்யும் பொத்தானுக்கு அருகில் ஒரு கட்சியின் சின்னம் வெளிப்பார்வைக்கு பதிவு இயந்திரத்தில் தெரிந்தாலும், அதை அழுத்தினால் வேறு சின்னத்துக்கு வாக்குப் போய்ச் சேரும்படியாக இணைப்பை மாற்றித் தருவதற்கோ, அல்லது இரண்டாவது அணியின் சின்னத்தில் விழும் வாக்குகள் மூன்றாவது அணிக்கும், மூன்றாவது அணி சின்னத்தின் வாக்குகள் இரண்டாவது அணிக்கும் விழும்படியாக மாற்றி அமைக்கவோ அதிகாரிகள் நினைத்தால் முடியாதா என்பதே சில அரசியல் கட்சிகள் கேட்கும் அடிப்படையான கேள்வி.

Tags: , , , , , ,