bmurali80

செப்டம்பர், 2009 க்கான தொகுப்பு

‘உன்னைப் போல் ஒருவன்’

In அரசியல், திரை விமர்சனம் on செப்டம்பர் 21, 2009 at 2:53 பிற்பகல்

புழுத்துப் போன அரிசியை ரேஷன் கடையில் கடைசியாக வாங்க நிற்பவர். தன் சொத்தினைப் பறி கொடுத்து விட்டு போலீசிடம் குற்றிவாளி போல் விசாரிக்கப்படுபவர். தினமும் காலை மாலையில் பேருந்து மற்றும் தொடர் வண்டிகளில் காணக்கிடைப்பவர்.

- ‘உன்னைப் போல் ஒருவன்’

அதாங்க , திருவாளர். பொதுசனம். முகம் காட்ட விரும்பாத கோழை ஆனால் உணர்ச்சி வேகத்தால் [தார்மீகக் கோபமாம்] சமுதாயத்தைத் திருத்துகிறேன் என்று ஷங்கர் மற்றும் சுசி கணேசன் அவதாரங்களாய் வந்து திரையில் அபத்தமாக எதையாவது செய்வார்.

வழக்கமாக தானுண்டு , தன் குடும்பமுண்டு , தன் நாலு ஜான் நிலமுண்டு , தன் பிள்ளையைப் பிழைப்பிற்காக ‘கல்விச் சாலை’களுக்கு அனுப்பவதுண்டு , தங்கம் விலை உயர்வை நினைத்து தினம் தன் விதியை நொந்து கொண்டிருக்கும் திருவாளர். பொதுசனத்திற்கு தொலைக்காட்சி , தினசரிகளை விட்டால் வேறு வழியில் செய்திகளை அறிந்து கொள்ள நேரமின்மை –  ’அதுக்கெல்லாம் எங்க சார் நேரம் ?’ இல்ல ‘ரயில எரிச்சான்ல’னு ஒரு வரி விளக்கத்துடன் விலகி செல்பவரை தார்மீகக் கோபமெல்லாம் வருபவராகக் காட்டி இருக்கிறார்கள் ‘உன்னைப் போல் ஒருவனில்’.

திருவாளர். பொதுசனம் , வழக்கமாக சமூக அவலங்களுக்குப்பாஷாக மெழுகுவத்தி ஊர்வலமோ அல்லது மனிதச் சங்கலி அமைத்தோ தன் ‘எதிர்ப்பினை’ தெரிவிக்க விரும்பும் இவரை குஜராத்தில் நடந்த கலவரத்திற்காக இவ்வளவு ரிஸ்க் எடுப்பவராகக் காட்டியிருப்பது திருவாளர். பொதுசனத்திற்கே அடுக்காது என நினைக்கிறேன்.

அப்புறம் திருவாளர். பொதுசனம் யாருனே தெரியாத மாதிரி பாத்துக்குகறாங்களாம். ‘இன்ஷா அல்லாவா…?’ என்று மனைவி அலைப்பேசியில் கேட்க ‘…ம்’ என்கிறார் தாடி வைத்த திருவாளர். வேற எதாவது மதத்துல ‘இன்ஷா அல்லாவா…?’னு கேட்கும் பழக்கம் உண்டா ? ஒரு வேளை பௌத்தர்கள் இவ்வாறு பேசிக் கொள்வார்களா ? சாண்விச் சாப்பிட்டா என்ன மதம் என தெரியாதா ? அட புத்திசாலிங்களா , ஏனையா இவ்வளவு பொலிடிக்கல் கரக்ட்னெஸ் ?

குஜராத்தில் ஒரு அப்பாவி கர்பிணிக் கருவருத்துக் கொல்லப் பட்டதற்கு கோயம்பத்தூரில் குண்டு வெச்சவனப் போட்டுத்தள்ளினால் அது தார்மீகக் கோபமாம்…ஒரே கொழப்பமய்யா! குஜராத் சம்பவத்தைத் தமிழ்நாட்டில் எப்படிங்க பொருத்த முடியும் ? லாஜிக் ரொம்பவே முட்டுது சாமி. பேசாம கோயம்பத்தூரப் பத்தி பேச வேண்டியது தானே ?

ஒரு மேடை நாடகத்திற்கு உரிய அல்ல விவரண படத்திற்குறிய கருவினை தமிழ் திரை மேக்கப் போட்டால் அது ‘மைல்கல்’ படமாக மாறிவிடுகிறது !!

திருவாளர். பொதுசனம் – அவர தனியா விட்டுருங்க சார் , தன் வேலையுண்டு அவருண்டுனு இருக்கிறார் , பிளீஸ் ! அடுத்த முறை ‘வளர்ச்சி’ பணிகளுக்காக மீண்டும் தேர்ந்தெடுப்பார் மோடியை !

துணிந்து பேசு !

In சமூகம் on செப்டம்பர் 9, 2009 at 4:20 பிற்பகல்

இந்த வாரம் யூதர்கள் தங்கள் பெயர்களை இழந்து நம்பர்களாக மாற்றப்பட்டதை நினைவு கூறும் இடத்தில் கண்ட வாசகம்.

First they came for the Communists, and I didn’t speak up,

because I wasn’t a Communist.

Then they came for the Jews, and I didn’t speak up,

because I wasn’t a Jew.

Then they came for the Catholics, and I didn’t speak up,

because I was a Protestant.

Then they came for me, and by that time there was no one left to speak up for me.

- Martin Niemöller

சுசி கணேசன் தான் டாப்பு

In அரசியல் on செப்டம்பர் 1, 2009 at 6:06 மு.பகல்

கந்தசுவாமி பற்றி விமர்சனம் எழுதினால் தயாரிப்பாளரிடமிருந்து சாபம் கிடைப்பதுடன் , ‘லாஜிக்’கலா கேள்விக் கேட்டு ஒரு மடக்கு மடக்குறார் இயக்குனர் சுசி கணேசன். விழி பிதிங்கி ஓடுகிறார்கள் கேள்வி கேட்பவர்கள். இங்கே ஒரு சாம்பிள்

குமுதம்

ஏற்கெனவே பார்த்த சில படங்களின் சாயல் இருப்பதுபோல தெரிகிறதே?

சுசி

சமீபத்தில் ஹிட்டான எல்லா கதைகளும் ரவுடியின் காதல், கிராமத்தனமான காதல் என்றே வந்திருக்கின்றன. அப்போது யாரும் ஏற்கெனவே வந்த படத்தின் சாயல் தெரிகிறதே என்று கேட்டதில்லை. என்னுடைய படத்தில் தமிழ் சினிமாவில் இதுவரை வராத 30 காட்சிகள் உள்ளன. அதுவே எனக்குப் பெரிய வெற்றிதான்.

சுசியின் ‘அவன மாறச் சொல்லு’ பாலகுமாரன் ஸ்டைல் பதிலுக்கு கௌத்தம் மேனன் எல்லாம் பிச்சை வாங்கனும். இதெல்லாம் ஓ.கே. சுசி உங்க குரு படம் பார்த்து வரம் கொடுத்தாரா ?

திருப்போரூர் கந்தசுவாமிக்கு துண்டுசீட்டு!

நல்லதே செய்யும் கந்தசுவாமியே!!

படம் பார்த்து துன்பப்பட்டவர்களுக்கு தயாரிப்பாளர் எப்போது பணத்தைத் திரும்ப தருவார் , என்ன அவதாரத்தில் வந்து கொடுப்பார் என தெரிந்தால் மக்கள் பயமில்லாமல் பணத்தைப் பெற்று வாழ்த்துவார்கள்.