தொகுப்புக்காக அக்டோபர், 2009

Pelican Brief – John Grisham

அக்டோபர் 27, 2009

pelican briefJohn Grisham எழுதி 1993ல் திரைக்கு வந்த Pelican Brief படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. Denzil Washington மற்றும் Julia Roberts நடிப்பு வாழ்க்கையில் முழுமையாக மலராத நாட்களில் வெளிவந்துள்ளது.

இரண்டு அமேரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொல்லப் படுகின்றனர். இந்த கொலைகளுக்கும் அமேரிக்க வெள்ளை மாளிகைக்கும் தொடர்பிருக்கலாம் என சட்ட கல்லூரி மாணவியான ஜூலியா ராபர்ட்ஸ் சந்தேகித்து ஒரு அறிக்கை தயாரிக்கிறாள். அதனை படிப்பவர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர், இதனை தொடர்ந்து பத்திரிக்கையில் வேலை செய்யும் டென்சிலின் உதவி கொண்டு எப்படி உண்மையை வெளி உலகுக்குக் கொண்டு வருகிறாள் என்பதே கதைச் சுருக்கம்.

படம் 2:15 நேரம். மிகவும் நிதானமாக நகர , பாதி படம் பார்ப்பத்தற்குள் சலிப்புத் தட்டுகிறது. எந்த வித அதிர்ச்சி அளிக்கும் திருப்பங்களோ அல்ல திரில்லர்க்கான சுவாரசியமோ இல்லாத நிலையில் படத்தை சீக்கிரமா முடித்திருக்கலாம் என தோன்ற வைத்த படம்.

விளம்பரமில்லாமல் விசிலடிப்பவர்கள்

அக்டோபர் 20, 2009

கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி தினகரனை உச்சநீதி மன்ற பதவிக்குப் பரிசீலிக்கக் கூடாது என கோரிக்கை விடுத்து அதனை நிறைவேற்றியுமுள்ளனர் தமிழகத்தை சேர்ந்த வழக்கறிஞர்கள்.

ஆனால் இவர்கள் யார் என்பது பொதுவில் யாருக்கும் தெரியவில்லை. அவுட்லுக் இணைய தளத்தில் இந்த விளம்பரம் விரும்பாதவர்கள் பற்றி படித்தேன். ஆச்சரியத்தை அடக்க முடியவில்லை.

There were eleven signatories to the original petition printed on the letterhead of the FJA, located on Armenian Street, the road that runs perpendicular to the High Court in Chennai Parrys. R. Vaigai was the convenor of the organisation, which was started about ten years ago and inaugurated by Justice Rajinder Sachar, now well-known for his report on the socio-economic status of Muslims in India. All eleven of them were public interest lawyers, who had for a number of years represented the landless poor, minorities, hapless consumers, women and Dalits.

In fact, R Vaigai and Anna Mathew had appeared for the Dalits of Sivaganga district who were denied participation in the Kandadevi car festival and had secured a landmark judgment in their favour in 2005. Sudha Ramalingam and Nagasaila are PUCL activists. Geeta Ramaseshan has been a child rights activist. She had also led a fact-finding committee into atrocities on Sikhs in Coimbatore in 1984 after Indira Gandhi’s assassination, on the basis of her report the High Court had awarded compensation to the victims. S S Vasudevan was a former regional director of Greenpeace and a legal aid activist fighting corruption. T Mohan and S Devikarani are environmental and consumer activists. Sriram Panchu, is a senior advocate and founder of the Consumer and Civic Action Group in Chennai, which has been a pioneer in the mediation programme initiated by the Madras High Court and has been a frontrunner for mediation programmes in other High Courts.

The members of the FJA were also petitioners and counsels in the famous Justice Kannadasan case, in which the judge’s appointment as president of Tamil Nadu State Consumer Commission was questioned on grounds of corruption and lack of integrity. The Madras HC had quashed the appointment of the judge and the SC, in a historic decision on 6 May 2009, had upheld it. In this case Anna Mathew, S S Vasudevan and Sudha Ramalingam were petitioners and R Vaigai, D Nagasaila, T Mohan and S Devikarani were counsel on record.

மேலும் படிக்க http://outlookindia.com/article.aspx?262388

நிலைமாற்றம்

அக்டோபர் 6, 2009

மொழி சீரான ஓட்டத்திற்காக , கிரந்தம் கலந்தும் எழுதலாம் என்பதே எனது நிலை. ஆனால் அது எந்த அளவுக்கு விபரீதத்தில் மொழியைக் கொண்டு செல்கிறது என்பதைக் காணவே இப்பதிவு. மேலும் தமிழ் விக்கியின் சில நிர்வாகிகள் குறித்து சில எண்ணங்கள்.

திராவிட மொழி அரசியலின்றி , சமஸ்கிரத காழ்ப்பின்றி மொழியின் அழகியலை அனுபவிக்கவும் , பரப்பவும் நம் தமிழ் மொழிக்காக இணையத்தில் சிலர் உள்ளனர். இவர்களில் சிலர் கிரந்தம் தனக்குத் தேவையில்லை என்ற நிலையை எடுத்துள்ளனர்.  கிரந்தம் தேவையென பல்லவர்கள் பிரபலப் படுத்தினாலும் அதன் தேவையின்றி பல ஆக்கங்கள் அக்காலம் முதற் கொண்டே வெளிவந்துள்ளன.

இவர்களை மொழித் தாலிபான்கள் எனத் தரக்குறைவாக பட்டம் கட்ட நினைப்பவர்கள் தான் உண்மையில் தங்களைத் தானே சுய பரிசோதனைக்கு உட்படுத்திக்கொள்ள வேண்டும்.

மொழி ஆர்வலர்களின் பங்களிப்பு தமிழ் கணிமை முதல் , இணையத்தில் கட்டற்ற களஞ்சியத்தை நிர்வகித்தல் , உலவியில் தமிழின் முதல் அகராதி தயாரிக்கும் முயற்சி வரை அவர்களின் வாழ் நாளில் கணிசமான நேரத்தை செலவழித்து வருகின்றனர். நவயுகத்தில் கணினி மயமாக்கம் எங்கும் பரவிக்கிடக்கும் இன்றைய நிலையில் இவர்களின் பணிப் போற்றத் தக்கதே.

சிக்கல்

அச்சூடகத்தில் – தமிழ் சிற்றிதழ்களில் தான் தமிழ் மொழிக்கான அடையாளம் இன்றும் இருக்கிறது.

வரும் 10 ஆண்டுகளில் , இன்று பரவலாகப் படிக்கப் படும் தமிழ் இதழ்களால் , இன்று நாம் காணும் தமிழ் மலினமாகி விடும் என்பதே நிதர்சணம். தமிழ் மொழியைப் பற்றி விவாதம் நடத்தும் பொழுதே (விஜய் தொலைக்காட்சியில்) தமிழில் மட்டும் பேச முடியாமல் திணறும் சமுதாயம் இன்று சென்னையில் உள்ளது ! இதனை விட மொழிக்கு என்ன கேவலம் இருக்க முடியும்.(இதே நிலை தெலுங்கிற்கு ஐதிராபாத்திலும் இருப்பதாக என் நண்பர் வருத்தப் பட்டார். )

ஒரு பத்தி தமிழில் படிக்க ‘கடுமையாக’ இருந்தால் ‘தனித்தமிழ்’ இயக்க வாதிகள் மொழியைக் கொல்கிறார்கள் என பதரும் மொழிக் காப்பாளர்கள், அவ்வாக்கியத்தை எப்படி எளிமையாகவும் மென்மையாகவும் மாற்ற முடியும் என்பதை ஏன் சொல்ல முன் வருவதில்லை ? மட்டம் தட்ட மட்டும் முதலில் நிற்பவர்களுக்கு எளிமை படுத்துவதென்றால் ஆங்கிலமாக்குவதா ?

கிரந்தம் தவிர்த்து எழுதுபவர்கள் தாலிபான்கள் எனில் கிரந்தம் கலந்து தான் எழுதுவேன் என்பவர்கள் கற்கால மனிதர்களா ?

கிரந்தமில்லாமல் எழுதலாம் என்கிற இயக்கம் எந்த அரசியல் அடிப்படையிலும் இன்று இணையத்தில் செயலாற்றவில்லை என்பதை என் ஒரு வருட இணைய இயக்கத்தில் காண்கிறேன்.

மொழியில் சீர்நிலையில்லாதது இன்றைய கணினி யுகத்தில் பெரும் சிக்கல்.

பிரச்சனை – பிரச்னை – பிரச்சினை என ஆளாளுக்கு ஒரு சொல்லைத் திரித்தால் எப்படி ஒரு மென்பொருள் சொல் திருத்தியயை உருவாக்க இயலும் ? சிக்கல் என்ற சொல்லினை பயன்படுத்தினால் சாலச் சிறப்புயென்றாலும் அதனை ஒரு அறிவுறுத்தாலாகவே முன் வைக்க விரும்புகிறேன்.  திட்டப்படுத்த முயலவில்லை.

விக்கியின் சில நிர்வாகிகள் குறித்து சில எண்ணங்கள்

கிரந்தமில்லாமல் எழுதுபவர்கள் செய்த ‘தவறு’ ஒன்றே என நினைக்கிறேன். ஒரு பொது தளத்தின் நிர்வாகியாக இருந்து கொண்டு கிரந்தத்தைப் பற்றி பொத்தாம் பொதுவாக பதிவுகள் எழுதியது பலரது மனத்திலும் ஐயத்தை எழுப்பியிருக்கிறது. இதனைக் களையவே இப்பொழுது பல மணித்துளிகள் செலவு செய்கின்றனர் என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மேலும் அவர்கள் ‘தா’ பற்றி யாராவது ஒரு சொல் உதிர்த்தால் அதற்கு விளக்கம் கொடுக்கத் தொடங்கி அதுவே வாய்க்கா வரப்பு விவாதமாகி விடுகிறது. அவதூறுகள் எனத் தெரிந்தால் அதனை புறம் தள்ளுவதே நன்று.

பொது வெளியில் , மேலும் அவதூறுகள் ஏற்படாமல் விக்கியைப் பாதுகாக்க வேண்டியது இவர்களின் தார்மீகப் பொருப்பு என கருதுகிறேன்.

***

குறிப்பு – நான் கிரந்தம் பற்றி முதிர்ச்சியின்றி ஏதாவது முன்னர் சொன்னதை இங்கே கொண்டு வந்து காட்ட வேண்டாம்.