John Grisham எழுதி 1993ல் திரைக்கு வந்த Pelican Brief படத்தை நேற்று பார்க்க நேர்ந்தது. Denzil Washington மற்றும் Julia Roberts நடிப்பு வாழ்க்கையில் முழுமையாக மலராத நாட்களில் வெளிவந்துள்ளது.
இரண்டு அமேரிக்க உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொல்லப் படுகின்றனர். இந்த கொலைகளுக்கும் அமேரிக்க வெள்ளை மாளிகைக்கும் தொடர்பிருக்கலாம் என சட்ட கல்லூரி மாணவியான ஜூலியா ராபர்ட்ஸ் சந்தேகித்து ஒரு அறிக்கை தயாரிக்கிறாள். அதனை படிப்பவர்கள் அனைவரும் கொல்லப்படுகின்றனர், இதனை தொடர்ந்து பத்திரிக்கையில் வேலை செய்யும் டென்சிலின் உதவி கொண்டு எப்படி உண்மையை வெளி உலகுக்குக் கொண்டு வருகிறாள் என்பதே கதைச் சுருக்கம்.
படம் 2:15 நேரம். மிகவும் நிதானமாக நகர , பாதி படம் பார்ப்பத்தற்குள் சலிப்புத் தட்டுகிறது. எந்த வித அதிர்ச்சி அளிக்கும் திருப்பங்களோ அல்ல திரில்லர்க்கான சுவாரசியமோ இல்லாத நிலையில் படத்தை சீக்கிரமா முடித்திருக்கலாம் என தோன்ற வைத்த படம்.
