லிபரான் கமிஷன் – அரசியல் துருப்புச் சீட்டு

இந்திய அரசியலில் லிபரான் கமிஷன் அறிக்கை என்ற துருப்புச் சீட்டு மத்தியில் உள்ள காங்கிரஸ் அரசை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2008 பொதுத் தேர்தலில் நொண்டிக் குதிரையான பா.ஜ.க வை இனி எழுந்திட விடாமல் மட்டையடியாக அடிக்கிறது லிபரான் கமிஷன் அறிக்கை.

17 வருடங்கள் முன்னால் இடிக்கப் பட்ட பாபர் மசூதிக்கு இன்று மருந்து தடவ , விரோதி யாரெனக் கைக்காட்டுகிறது லிபரான் கமிஷன்.

அத்வானி , முரளி மனோகர் ஜோஷி போன்றரை நேரடியாகவும் வாஜ்பாயி அவர்களை மறைமுகமாகவும் கைக்காட்டுகிறது.

இவ்வறிக்கை பி.வி. நரசிம்ம ராவ் அவர்களை ஏதோ தவறுதலாகக் கணக்குப் போட்டவர் போலக் குறிப்பிட்டுள்ளது.

வி.ஹி.ப மற்றும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புகளை நேரடிக் குற்றவாளிகளாகவும் அறிவிக்கிறது. மசூதியை இடிக்கக் கொண்டு வரப்பட்ட கயிறு , கடப்பாறை , கம்புகள் , ஆயுதங்களைச் சுட்டிக்காட்டி இவ்வமைப்புக்களை குற்றம் சாட்டுகிறது அறிக்கை.

‘ராமர் கோயில் கட்டுவோம்’ என வருடாந்திர அறிக்கைகளும் நின்று போன நிலையில் உட்கட்சிப் பூசல் , தலைமைத் தள்ளாட்டம் , வகுப்புவாதம் வளர்க்கும் கொள்கை என்று தள்ளாடி வரும் பா.ஜ.கவின் கதையை முடிக்க லிபரான் அறிக்கை உதவிடுமா ?