வாஞ்சிநாதன் ஆஷ் துரைக் கொலை செய்ததையும் அதன் பின்னர் வாஞ்சிநாதன் தற்கொலை செய்து கொண்டதையும் நாம் அறிவோம். ஆனால் இப்பொழுது ஆஷ் துரைக் குடும்பம் எங்குள்ளது அவர்களின் இக்கொலைப் பற்றிய எண்ணமென்ன போன்றவற்றை எழுதியுள்ளார் ஆ. இரா. வேங்கடாசலபதி. அதற்கு எதிர்வினையாக ‘காலச்சுவடு’ கடிதங்கள் பகுதியில்
‘ஆஷ் அடிச்சுவட்டில்’ படித்தேன். ஏன் ஆ. இரா. வேங்கடாசலபதிக்கு இந்த வீண்வேலை என்று எனக்குப்பட்டது. 100 வருடம் கடந்த பின் ஆஷ் துரை நல்லவனா, கெட்டவனா, அவன் குடும்பச் சூழல் அறிந்து என்ன பயன் என்று எனக்குப் பட்டது.
பிரஸன்னா நஞ்சுண்டேஸ்வரன்
ஆட்டையாம்பட்டி
ஆஷ் துரை நீங்க நல்லவரா கெட்டவரா ?