நீல வண்ண மேனி கொண்டவர்கள் நா’விகள். பாண்டோராவில் பண்டாரமாக வாழ்ந்து கொண்டிருப்பவர்கள்.
பூவுலகில் பச்சைகளைப் பொசிக்கிவிட்டு பாண்டோராவிற்கு பயணிக்கிறார்கள் காலனியர்கள். ‘அன்-அப்டேனியம்’ கொண்டு மின்சாரம் தயாரிக்கலாம். அது பாண்டோராவில் தான் கிடைக்கும். நா’விகள் காலனியர்களின் சிலருடன் மற்ற காலனியர்கள் காலை ஒடித்து வீட்டுக்கு அனுப்புவது தான் கதை.
மேட்ரிக்ஸ் , அல்-கோர் மற்றும் மாவோயிஸ்ட் முகாம்களுக்கு கதைக் கடமைப்பட்டுள்ளது.
நுண்ணரசியல்
சென்ற வாரம் படம் பார்த்தவுடன் நண்பர்களிடம் பகிர்ந்து கொண்டது. வெள்ளையர்கள் நினைத்தால் காட்சீலா , அழிந்துப் போன டயனாசோர் , மம்மிக்கள் என எல்லாவற்றையும் உயிர்பிக்க முடிகிறது.
ஆனால் உயிரோடு இருக்கும் இயற்கையைக் காப்பாற்ற முடியவில்லை. அதையெல்லாம் பங்கு சந்தை எனும் தீயவனால் எற்படும் உருவகமாகக் காட்டப்படுகிறது. இவ்வுருவகம் சுய விசாரணைகளைத் தவிர்த்து ஒரு எதிரியை உருவாக்கி அதன் மேல் பழி போட மட்டுமே உதவும்.
நகைச்சுவை
காலனியர்கள் நா’விகளுக்காகப் போராடுவது. அவர்களுக்கு இயற்கையும் இணங்கிவரும். அடிக்கடி ‘உன்னால் முடியும்’ என்று பாடமெடுப்பவர்கள் ஏன் பாதிக்கப் பட்டவர்களிடமிருந்து வருவதில்லை. வருத்தமான காமெடி தான் இது.