ஓமணப் பெண்ணே…விண்ணைத்தாண்டி வருவாயா ?

ஓமணப் பெண்ணே – பென்னி தயாளின் குரலில் அமைந்த பாடல். நெளிவு சுழிவுகள் குறைவென்றாலும் பாடலின் மெட்டு ஈர்க்கும் விதமாகவே உள்ளது. அலட்டாத வாயசைவில் பென்னி தயாள் ரையிம்ஸ் போல பாட கல்யாணி மேனனின் கீச் குரலில் துக்குடா ஒன்றை இறக்கிவிட்டு போகிறார். ஓமணப் பெண்ணே சுகமே.

அன்பில் அவன் – சொல்லிக் கொள்ளும் வரிகள் இந்த பாடலில் மட்டுமுண்டு எனலாம். ‘சின்மயி’யின் குரலைக் கண்டுபிடிக்க முடியாவிட்டாலும் தேவன் ஏகாம்பரம் தன் குரலை மைக்கில் அறிவிக்கிறார்.

நீ வானவில்லாக
அவள் வண்ணம் ஏழாக
அந்த வானம் வீடாக
மாறாதோ…!

விண்ணைத்தாண்டி வருவாயா – இந்தக் கேள்வியை பாடலாய் கேட்பவர் கார்த்திக். பல விதமாகக் கேட்டுப் பார்க்கிறார். என்ன நடக்கிறது என்று படத்தில் தான் பார்க்க வேண்டும்.

கண்ணுக்குள் கண்ணை – வேகமாக ஓடும் பாட்டு. டெக்னோ இசையும் குரல் மாற்றமும் கண்ணா பிண்ணா என்று வரும் பாடல் வரிகளும் கொண்ட பாடல். நரேஷால் பாடலை பல படுத்த முடியவில்லை.

ஓ’சனா… – வீட்டைக் கடந்த காதலியைக் கண்டு உருகும் பாடலென்று நினைக்கிறேன். பிளாசேவின் உளறல் இதில் அடக்கம். இது போல யாருக்கும் காதலில் உதவி செய்ய பிளாசியின் உதவியை அனுக மாட்டார்கள் என நினைக்கிறேன். பாடலில் சந்தமும் சொற் கோர்வையும் சரியாக அமையவில்லை. விஜய் பிரகாஷும் பல இடங்களில் வார்த்தையை முழுங்கி விடுகிறார்.

மன்னிப்பாயா – குற்ற உணர்வில் விண்ணைத்தாண்டி வராமல் கடலின் மீனாக தரையில் துடிக்கும் பாடல். புரியாத பாடல் அதற்கு ரகுமான் குரல் எந்த மாற்றத்தையும் ஏற்படத்தவில்லை.

அரொமலே – அலைபாயுதேவில் வரும் ‘மாங்கல்யம் தந்துனானே…’வின் மறுபிறவி போல உள்ளது. பாடல் வரி புரியாமல் இருக்க மலையாளத்தில் பாடுவதுடன் ஜாஸ் வகை இசையில் புளுஸ் ஆலாபனையும் நடக்கிறது. ஆராமர காலை நீட்டி ரசிக்கலாம்.

இசை – ‘உலக இசை’. ஒரு முறை மட்டும் கேட்பவர்களுக்கு ஓமணப் பெண்ணே பிடிக்கும். தாமரையின் வரிகள் சந்தங்கள் மறந்து வெறும் சொற் குவியலாக பாடல்களில் கேட்கிறது. அதற்கு உருதுணையாக ரகுமானின் பாடகர்கள் வரிகளை ‘உலக இசை’க் கல்லில் கொத்து பரோட்டா போடுகிறார்.

கேட்கலாம் , சென்ற வருட ஏமாற்றங்களை மறக்க.

+++

http://mrcritic.wordpress.com/category/இசை-விமர்சனம்/

One thought on “ஓமணப் பெண்ணே…விண்ணைத்தாண்டி வருவாயா ?

மறுமொழிகள் இட இயலாது.