ராவணன் – எங்கேயோ கேட்ட குரல் ?

தளபதி படம் பார்த்து தலவலி வந்த நாளை என்னால் மறக்கவே முடியாது. ஆனால் தளபதியில் இளையராஜாவின் இசையும் மறக்கவே முடியாது – அற்புதம். அனைத்து பாடல்களுமே அட்டகாசம் என்றுதான் சொல்ல வேண்டும். கர்ணனின் வாழ்க்கையை படம் பிடித்து காட்டும் அவை.

சமீபத்தில் ராவணன் இசைத் தொகுப்பைக் கேட்டேன். எந்த விதத் தாக்கமும் ஏற்படுத்தவில்லை. யார் என்ன சொன்னால் என்ன என்று மீண்டும் மீண்டும் இரைச்சலில் பாடல் வரிகளை மூழ்கடித்துக் கொண்டிருக்கிறார் இசையமைப்பாளர் ரகுமான்.

கோடு போட்டா

கொன்னுப் போடு

வேலி போட்டா

வெட்டிப் போடு

பாடல் வரிகள் பரவாயில்லை.

கவிஞர் வைரமுத்துவும் ‘எலும்பு – பல் பொடி’ என எழுதியிருக்கிறார்.

மேலும் பல பாடல்களில் எங்கோ கேட்ட இசை ஒலிக்கிறது.

பாடல் தொகுப்பு சோபிக்கவில்லை என்பது எனது எண்ணமும் ஏமாற்றமும்.

குறிப்பு: சில தகவல் பிழைகள் திருத்தப்பட்டுள்ளன.

2 thoughts on “ராவணன் – எங்கேயோ கேட்ட குரல் ?

மறுமொழிகள் இட இயலாது.