குலுக்கல் முறையில் அறிவியல் சொற்களை தேர்ந்தெடுத்து(?) , ‘பாதசாரி’களுக்குப் புரியும் அளவுக்கு எழுதினா போதும் சார்! எந்திரன் பாடல்கள் தயார். சரி அப்படியாவது எதாவது உபயோகமான சிந்தனை விதைக்கப்படுகிறதா…ஹூஹூம்!
பா.விஜய்க்கு சுக்குமிளகில் சூப் கொடுக்க வேண்டியது தான். ‘கண்ணும் கண்ணும் நோக்கியா’ கணக்காக வரும் கிலிமஞ்சாரோ என்ன சொல்லவறீங்க ‘ஆதிவாசிங்களா’ ? ‘ஆளளவுக்கு ஆலிவ் பழம்’ சாப்பிட சகிக்காது என்பது என் எண்ணம். எதுகை மோனைக்கு இருக்கும் முக்கியத்துவம் சொற்களுக்கும் பாடல் வரிகளின் ஓட்டத்திற்கும் சுத்தமாக இல்லை. சொல் விளையாட்டு என வைத்துக் கொள்வோம்.
இரும்பிலே ஓர் இருதயம் பாடலில் பயங்கரமான உச்சரிப்பால் வரும் விபரீதத்தைப் பாருங்கள்
இரும்பிலே ஓர் இருதயம் முளைக்குதோ
இரும்பிலே ஓர் இருதயம் முலைக்குதோ
பூஜ்ஜியம் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
பூச்சியின் ஒன்றோடு
பூவாசம் இன்றோடு
I’m a super girl
உன் காதல் rapper girl
I’m a super girl
உன் காதல் rubber girl
யோகியின் ‘பூம் பூம் ரோபோ டா’ மண்டைக்குள் அறைகிறது. நீங்காது. ‘மலஅண்ணாமல’ என்ற தொடரைப் போல. பாடலின் மீதி மறந்துவிடும்.
அரிமா , மலைப் பாம்பு என்று விஞ்ஞானியை வர்ணனை செய்வதும் எந்திரனை ‘புதிய மனிதா’ என்பதும் குழப்பமான பாடல் ஆசிரியர்களின் மனநிலையா இல்லை புகழ்ந்தே ஆகவேண்டுமென்ற நிர்பந்தமா ? அஃறிணை, எஃகு , இரும்பு, சிலிக்கான், நியூட்டன், எய்ன்ஸ்டைன் போன்ற சொற்கள் சுழற்சி முறையில் பாடலுக்கு பாடல் வருவது அயர்ச்சி. காதலனில் உடம்புக்குள் நாடிகள் எத்தனை என்று கேட்பது போல் காந்தக் கண்ணுக்குள் எத்தனை எலக்டிரான் என்று கேட்பது அபத்தமாக இருக்கிறது.
எண்ணிப்பார்க்க வேண்டிய ‘அழகியல்’ வர்ணனைகள் – பா.விஜயின் 100 கிராம் இடை கொண்ட பெண் என்ன ஆவாள்? Osteoporosis நோயின் தீவிரத்தை அழகாகவே சொல்லியருக்கிறார். வைரமுத்துவாது 50 கிலோ தாஜ்மாஹால் என்று வர்ணித்துத் தப்பிக் கொண்டார். மோதிரம் ஒட்டியானம் ஆனக்கதை. காதல் அனுக்களிள் ஓடுகிற தண்ணீரில் ஆக்சிஜன் தான் அதிகமாம்! H2O….ஓஓஓ!
எழுதிய வரிகளை இப்படிப் போட்டால் ஒரு பாட்டு அப்படி போட்டால் ஒரு பாட்டு என்று முடிவுடன் தான் பாடல் வரிகள் எழுதப்பட்டதாகத் தெரிகிறது.
இசையில் மெட்டுக்களுக்கு விடுமுறை கொடுத்துவிட்டார் இசையமைப்பாளர். இசை கேட்பவருடன் எந்த அணுக்கமும் ஏற்படுத்தா இசை. இதனால் தான் ‘எந்திரா எந்திரா’ என்று கத்துகிறார்களோ ?
சில முறை கேட்கக் கூடிய ஒரே பாடல் ‘இரும்பிலே ஓர் இருதயம்’. ஹலோ டாக்டர் ஹார்ட் வீக்காச்சே!!
***
எந்திரனில் மிஸ்ஸிங் வாலி , யுவன் சங்கர் ராஜா.
The lyrical quality of tamil music has gone down over the years without question. This is the age of music/instumentation dominating lyrics so no point blathering over that! Lyrics is probably the last point of contention when it comes to Tamil music reviews these days.
Even Vaali would have come up with similar albeit slightly better quality may be!
Karthik, I cannot entirely agree. ARR has been unknowingly(?) instrumental in this ‘lyrical’ phenomenon. Vaali would have done it with taste.