அதே மடயனும் , புளிச்சமிக்ஸும்

18 01 2009

இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் சமீபத்தில் கோல்டன் குளோப் விருது கிடைத்தது நாம் அறிந்ததே. இதனைப் பயன்படுத்திக் கொண்டு சென்னை புத்தக கண்காட்சியில் தனது நூல்கண்டு சரியாக விற்கவில்லை என்று தெரிந்தவுடன்  தன் பழைய புளிச்ச மாவை எடுத்து புது தலைப்பு வெச்சு ‘ரீமிக்ஸ்’ செய்து , விளம்பரம் தேடிக் கொள்ள பதிவிட்டிள்ளான்.

ஏ.ஆர். ரகுமான் என்பவர் மணிரத்தினமும் கே.பாலசந்தரும் சேர்ந்து ஏற்படுத்திய பார்ப்பன சதி என்று வானத்தில் விட்ட தன் கற்பனைப் பட்டத்திற்கு நூலாகக் கட்டியுள்ளான்.

இதில் வியப்பேதும் இல்லை என்றாலும் , வே.மதிமாறன் என்ற கம்மநாட்டிக்கு என்ற என் பதிவில் இதனைப் பற்றி சில கேள்விகள் கேட்டவுடன் வேட்டியைக் கட்ட மறந்து விட்டதாக மடமாறனின் பக்த கோடிகள் தெரிவித்தனர்.

நான் ரீமிக்ஸ் செய்யாமல் அந்த கேள்விகளை மீண்டும் பதிப்பிக்கிறேன்.

> How do you think a person who hates A.R. Rahman because he is a “kaikooli” of brahmins and miss the point Ilayaraja’s son makes remix in every other album?

> How can you use caste as an argument when Ilayaraja has refused to work with vairamuthu or bharathiraja?

இதில் மொத்த காமடி இந்த நூல்கண்டை வெளியிட்டது தமிழ் உணர்வாளர் சீமான் !

எனக்கு இளையராஜாவையும் பிடிக்கும் ரகுமானின் இசையிலும் மயங்குபவன். தற்போது நடந்த “நான் கடவுள்” இசை வெளியீட்டு விழாவில் மணிரத்தினமும் இளையராஜாவும் ஒரே மேடையில் இருந்தனர். பிண்ணனி இசையில் ராஜாவின் இசையை அடித்துக் கொள்ள ஆளில்லை என்று மணிரத்தினம் கூறியுள்ளார். திருவாசக இசை வெளியீட்டில் இளையராஜாவும் ஏ.ஆர்.ரகுமானும் கலந்துரையாடினார்கள்.

ஏ.ஆர்.ரகுமான் பார்ப்பன சதியின் விளைவு என்று கூறி ராஜாவைத் தான் மாங்கா மடயன் கேவலப்படுத்துகிறான்.





வால்மார்ட் ஒரு அறிமுகம்

10 09 2008

வால்மார்ட் ஒரு அறிமுகம் -

இன்று வால்மார்ட்டின் பெயர் கேட்டால் செவி சாய்க்காதவர்களை விரல் விட்டு எண்ணிவிடலாம். கெப்டலிஸத்தின் (முதலாளித்துவம்) ஒரு பிம்பமாக திகழும் அமேரிக்க நிறுவனம் வால்மார்ட்.

1962ல் சாம் வால்டன் தொடங்கிய இந்த அங்காடி ஐந்தே வருடங்களில் 12 மில்லியன் டாலர்கள் வருமானத்தைத் தொட்டு சாதனைப் படைத்தது. வால்டன் 1992ல் இறக்கும் முன் அமேரிக்க ஜனாதிபதியிடமிருந்து சுதந்திர பதக்கத்தைப் (freedom medal) பெற்றார்.

2002ல் பங்குதாரர்கள் கூட்டத்தில் இன்று நம் கம்பனியின் வருமானத்தை இவ்வாறு விவரிக்கலாம் என்றார் ஒரு வால்மார்ட் அதிகாரி

வால்மார்ட் = ஒரு மைக்ரோசாப்ட் + ஒரு ஐ.பி.எம் + ஒரு எச்.பி + ஒரு சிஸ்கோ

இந்த வார்த்தைகளைக் கூறி முடித்தவுடன் பங்குதாரர்கள் டி-20 உர்ச்சாக வீராங்கனைகள் போல் வால்மார்ட் – வால்மார்ட் என்று மந்திரம் ஓத ஆரம்பித்துவிட்டனர்.

இப்படி அசுர சாதனைப் படைத்த நிறுவனம் உலகில் இல்லவே இல்லை என்று சொல்லும் அளவுக்கு வளர்ந்து கொண்டிருந்தது. ஆனால் 2005ல் அதன் வளர்ச்சி தென் திசையை நோக்கி செல்லத் தொடங்கும் பொழுது “நாங்களும் மனிதர்கள்” என்று நிர்வாகம் கூறியதும் வானத்தில் மிதந்து கொண்டிருந்த வால்மார்ட் பங்குதாரர்களுக்குத் திடீரென தோல் சுட்டது.

இன்று மித்தலின் இந்திய நிறுவனமான பாரதியுடன் இணைந்து இந்தியாவில் நூற்றுக்கும் அதிகமான அங்காடிகளை 2009ல் தொடங்கவுள்ளது வால்மார்ட். ஏற்கனவே மக்கள் வாழ்வில் சமநிலை கொண்டுவர போராடிக் கொண்டிருக்கும் இந்தியாவில் வால்மார்ட் கால் வைத்தால் என்னவாகும். ரிலையன்ஸ் ஃப்ரெஷ் போன்ற நம் நாட்டு நிறுவனங்களுக்கே பல இடங்களில் தீவிர எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வால்மார்ட்டின் தாய் நாடான அமேரிக்காவில் சுனாமி போல் பல மாம் அண்ட் பாப் என்று அழைக்கப்படும் குப்பன் சுப்பன் கடைகள் அடித்து நொருக்கப்பட்டன – போட்டி என்ற பெயரில்.ஒரு நிறுவனத்தின் கையில் இத்துனை பலம் தகுமா?

தன் ஆல்வேஸ் லோ பிரைசஸ் என்ற தாரக மந்திரத்தால் பொது மக்கள் பயனடைகின்றனர் என்பது நிதர்சன உண்மை என்றாலும் மலிவு விலைக்கு பலியான ஆலைத் தொழிலாளர்கள் எண்ணிக்கையும் கனிசமானது.உலகமயமாக்கம் என்ற போர்வையில் பல நீலக் காலர் வேலைகள் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டது. இதற்கு பில் கிளிண்டன் அரசு அட்ஷதைப் போட்டு ஆசீர்வதித்தது.

இப்பொழுது வால்மார்ட் சீன உறவு என்பது முறண்பாடான படுக்கை பங்காளிகள் போல். அமேரிக்க அரசாங்கத்துக்கு கம்யூனிசம் என்றாலே ஆகாது. உலகிற்கு மனித உரிமைகளைப் போதிக்கும் அமேரிக்கர்களுக்கு பணியில் அடிப்படை வசதிகள் இன்றி, இரவு பகலாக ஒரு கூண்டுப் புறாவைப் போல் சீனர்கள் தயாரிக்கும் விலைக் குறைந்த பொருட்கள் தேவைப்படுகிறது. இப்படி ஒரு “சித்தாந்ததிற்கு” வித்திட்டது வால்மார்ட் என்கிற நிறுவனமே.

தன் நாட்டில் தன் தொழிலில் வெற்றி பெற – ஏன் அசுர வெற்றி பெற தன் நாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கைத் தரத்தை துடைத்தெரிந்தது வால்மார்ட் என்றும் பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. இதில் முக்கியமானது வால்மார்ட் பங்கு கொண்ட Anti-dumping கேஸ் (சீனாவில் தயாரித்த டி.விகள் போட்டியை அழிக்கும் அளவிற்கு மிக மலிவான விலையில் இறக்குமதி செய்யப்படுவதாக நடந்த கேஸ்). இதில் வால்மார்ட் சீனர்களுக்கு ஆதரவாக வாதிட்டது.

வால்மார்ட்டின் வெளிநாட்டு முதலீடுகள் பல தோல்வியில் முடிவடைந்தது என்பதையும் உணர வேண்டும். இந்தோநேஷியாவில் 90களில் அரசியல் சிறத்தன்மை இல்லை என்று ஒதிங்கிக்கொண்டது. ஜெர்மனியில் மெட்ரோ என்ற நிறுவனத்துடன் போட்டிப் போட இனி இயலாது என்று தன் கடைகளை விற்றது. தென் கொரியாவிலும் அதே கதி.

தொழிலாளர்களுக்கான காப்பீடு இன்மை, குறைந்த சலுகைகள், தொழில் நிமித்த நிறைவின்மை, செக்கு மாடு போல வேலை செய்ய வேண்டிய மணித்துளிகள், சட்டத்துக்கு புறம்பான மெக்சிக்கன் தொழிலாளர்கள் என்று பல குறைபாடுகள், ஓட்டைகள் வால்மார்ட் சக்கரத்தில் மாட்டிக் கொண்ட அசிங்கங்கள்.

இருப்பினும் உலகிற்கு வால்மார்ட் மிகத் திறனாக செயல்படுதல் (super efficiency), பொருட்களில் பார்கோட் கொண்டு இன்வெண்ட்ரி மேனேஜ்மெண்ட் நிறப்புதல், அசுர வேகத்தில் பல ஊர்களில் கடைகளைத் திறப்பது என்று பல யுக்திகளின் முன்னோடியாகவும் திகழ்ந்தது.

வர்த்தகர்கள் (Vendors) என்ன விற்க போகிறோம், என்ன விலைக்கு விற்கலாம் என்று சொல்லிவந்த காலம் மாறி இனி இந்த பொருளை இந்த விலைக்கு விற்க முடிந்தால் நாங்கள் வாங்குவோம் இல்லையெனில் வேறு நிறுவனம் என்று சப்ளை டிமாண்ட் சமன்பாட்டையே மாற்றி எழுதிய நிறுவனம் வால்மார்ட்.

ஒரு அரை நூற்றாண்டுக்கு முதலாளித்துவ வணிக உலகின் முகவரியாகத் திகழுந்த வால்மார்ட் இன்று இணைய நிறுவனங்களிடம் பலத்த போட்டியை எதிர் கொண்டிருக்கிறது. இசைக் குறுந்தகடுகள் விற்பனையில் முதலிடத்தில் பல பத்தாண்டுகளாகக் கோலோச்சிய வால்மார்ட் இன்று ஆப்பிளின் ஐ-டியூன்ஸிடம் தோற்றது. அமேசான் தரும் குறைந்த விலை புத்தகங்கள் வால்மார்ட் பங்குதாரர்களைக் கவலைக் கொள்ளச் செய்துள்ளது. வால்டன் கண்ட இந்த சாம்ராஜ்ஜியம் இனி எங்கே செல்லும் ?