வெகுஜன தமிழ் ஊடகங்கள்: நிதர்சன உண்மைகள்

24 06 2008

வெகுஜன தமிழ் ஊடகங்களில் நாம் நிதர்சன உண்மைகளை காண இயலுமா?

Tamil Media and Social Commentry

ஒரு வருடத்துக்கு முன் சுரேஷ் குமார் வெளியிட்ட பாட்காஸ்ட் ஒன்றை இன்று கேட்டேன்.

பாட்காஸ்ட்டை கேட்க்க முடியாதவர்கள் அதன் சாராம்சத்தை கீழே படிக்கலாம். ஆனால் சுரேஷின் எடுத்துக்காட்டுகளை கேட்கும் பொழுது அதன் தாக்கம் சற்று அதிகம்.

சாராம்சம்:

  • கூளகும்பிடு போடும் பழக்கம் அரசியல் மேடைகளைத் தாண்டி இந்த வெகுஜன ஊடகங்களில் (டி.வி. மற்றும் வானொலிகளில்) வந்தது வருந்தத்தக்க விஷயம்
  • சில சாதாரண புத்தகங்கள், பத்திரிக்கைகளில் எழுதும் நிதற்சன உண்மைகள் காகிதங்களிலேயே மடிந்து விடுகின்றன. அந்த ஆசிரியர்களும் அங்கேயே தங்கி விடுகின்றனர்
  • தமிழ் ஊடகங்களில் விஜய் டி.வி. சமுதாய விமர்சனம் மற்றும் கூளகும்பிடு கலாசரத்தை தவிர்க்க முயற்சி செய்கிறது
  • நிதற்சன உண்மைகள் வெகுஜன ஊடகங்களில் வேண்டுமென்றால் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் நபர்கள் அரசியல் சாராமல் பொதுத்துவத்துடன் இருப்பது அவசியம்
  • தமிழில் பல லட்ச பதிவர்களிருந்தும் டி.வி. வானொலிகள் அதிகம் கண்டுகொள்வதில்லை. பதிவுகள் அவ்வளவு மொசமா என்றால் ஆம் என்றும் சொல்ல முடியும் இல்லையென்றும் சொல்ல முடியும்
  • Non-mainstream media வினை இந்தியர்கள் வெகுஜன பொருளாகவே பயன்படுத்துகின்றனர். பருப்புருண்டை செய்வது, சைக்கிள் டயருக்கு காற்றடிப்பது எப்படி என்று பதிவுகள். Youtubeல் ரம்பாவின் தொடை, ரஜினியுடன் கிங்காங் ஆட்டம் இதுவே பரபலம். இப்படி இருப்பின் யார் Non-mainstream mediaவினை மதிப்பர்
  • இது நாளை மாறும் விஷயமல்ல. ஆனால் இந்த கண்ணோட்டத்தில் செல்லும் kumudam.com – ற்கு வாழ்த்துக்கள்