சீமானுக்கு வழக்கறிஞர்கள் தந்த பரிசு

13 03 2009

வழக்கறிஞர் போராட்டம் காரணமாக உடனடி நிவாரண வழக்குகள், ஜாமீன் வழக்குகள் போன்ற வழக்குகளில் கட்சிக்காரர்களே நேரில் ஆஜராகி வாதாடும் போக்கு அதிகரித்து வருகிறது.

இயக்குனர் சீமானின் சகோதரர் ஜேம்ஸ் பீட்டர், நேற்று உயர்நீதிமன்றத்தில் சீமானின் ஜாமீன் மனு குறித்து நேரில் தோன்றி வாதாடினார்.

[தினதந்தி] [செய்தி கிடைத்த இடம் ஒரு குழுமத்தில்]

***

கருத்துரிமையை நிலைநாட்ட நீதிமன்றம் சென்றாலும் அங்கு வாதாட வழக்கறிஞர்கள் கிடைக்க மாட்டார்கள் போல் உள்ளது.





சீமான்: தமிழனத்தின் அக்னி புயலா ?

15 10 2008

அது என்னங்க, இசைப் புயல் கேள்வி பட்டுருக்கோம், ஆனா தமிழனப் புயல்னு ஒரு பட்டம் கொடுத்திருக்காங்க குமுதம்.காம் இணைய தளத்தில் ?

இந்த நேர்காணலில் சீமான் வைக்கும் முக்கிய குற்றச்சாட்டுகள்:

1. இந்திய அரசு இன்றும் இலங்கை அரசுக்கு உதவி செய்கிறது. இதனால் என் சகோதர சகோதரிகள், உடன் பிறப்புக்கள் இலங்கையில் கொல்லப்படுகின்றனர்.

2. இந்திய அரசு மட்டுமல்ல பாகிஸ்தான், இஸ்ரேல் போன்ற நாடுகளும் இலங்கை சிங்கள அரசுக்கு ஒரு இனத்தையே [தமிழனம் என்று படிக்கவும்] அழிக்கும் அளவிற்கு நவீன ஆயுதங்களை வழங்கிவருகிறது.

3. சார்க் மாநாட்டில் இந்தியப் பிரதமர் இலங்கை அரசுக்கு ஆயுதம் கடத்தினார்.

4. மதங்கள் சாக வேண்டும், சாதிகள் சாக வேண்டும் என்று கர்ஜிக்கும் பெரியார் பாசறை, [தமிழ்] இனப் பற்றைப் அடையாள அட்டையாகத் தமிழர்கள் அணியவில்லை என்றால் தமிழனம் தழைக்காது என்கிறார்.

5. கர்நாடகத்திலிருந்து நம்மால் நியாயமானத் தண்ணீர் வாங்க முடியாது ஏன் என்றால் கர்நாடக மக்கள் கன்னடன் என்ற அடையாளத்தை முன் நிறுத்துகிறான். கேரளத்தில் பொது உடைமை பேசும் மார்க்சிஸ்ட் கட்சியும் அதே அடிப்படையில் தமிழர்களுக்கு துரோகம் இழைக்கின்றனர். அதனால் இம்மாநிலங்கள் மீது பொருளாதாரத் தடைக் கொண்டுவர வேண்டும்.

***

Dangers of tamil chauvinism (The Hindu)

திருத்தம்: இந்த விமர்சனத்தை வைத்த ஹிந்து நாளிதழ்களை சிலர் எரித்தும் அவர்கள் அலுவலகங்களைத் தாக்கவும் முற்பட்டுள்ளனர்.

These chauvinistic tendencies are inimical to the interests of India

தமிழகத்தின் இலங்கை அரசியல் – என் பார்வையில்:

தமிழ் மக்களையும் வி.பு வையும் பிரித்து பார்க்க வேண்டியுள்ளது. கட்டுரை எழுதியவர் இந்தியா இலங்கை விவகாரங்களில் கலக்கக் கூடாது என்று சொல்லுவதில் எனக்கு உடன்பாடு உண்டு.

தமிழகக் கட்சிகள் அடையாளமாகவே கோஷம் எழுப்புகின்றனர். இலங்கை ராணுவம் வி.பு. வின் தலைமையகத்தின் 2 கி.மி அருகில் இருக்கும் பொழுது இப்படி போராட்டத்தில் இறங்கியிருப்பது அவர்களின் வி.பு ஆதரவையே காட்டுகிறது.

தமிழ் மக்களுக்காக எத்துனை முறை அரசியல் சமரசத்தை வி.பு அடித்து நொருக்கியது என்பதையும் எண்ணிபாருங்கள்.

இந்தியாவிற்கு காஷ்மீரில் ஒரு நியாயம், இலங்கைக்கு ஈழத்தில் ஒரு நியாயமா ?

1970களிலிருந்து நடைபெற்று வரும் ஈழப்போராட்டம் இப்பொழுது சமரசம் என்கிற நிலைகளைக் கடந்து ”ஒரு உறையில் இரு வாள் இருக்க முடியாது” என்று வந்துவிட்டது.

போர் நிற்க வேண்டுமெனில் ஒன்று இலங்கை அரசு கவிழ்ந்து ஈழத்தைத் விடுதலை செய்ய வேண்டும் இல்லை என்றால் வி.பு கவிழ வேண்டும்.

வி.பு இலங்கைத் தமிழனக்குக்காக போராடும் குழு என்றாலும் அரசியல் ரீதியாக சமரசம் காண முயன்ற பலத் தமிழ் அரசியல் தலைவர்களைக் காவு வாங்கியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அரசியல் சமரசம் காண முன் வராத எந்த குழுவையும் எந்த அரசாங்கமும் அங்கீகரிக்காது. எனவே தான் இலங்கைத் தமிழருக்கு ஆதரவு என்ற போற்வையில் வி.பு விற்கு தமிழக அரசியல்வாதிகள் ஆதரவுத் திரட்டிகின்றனர்.

புலிகள் வீழ்ந்தால் அது இலங்கைத் தமிழருக்குத் தாற்காலிகத் தோல்வியென்று தான் தோன்றுகிறது. எனினும் தமிழர்கள் அங்கு சிங்களர்களால் இனி சிறுமை படுத்தப்படமாட்டார் என்று நம்பலாம். இன்னும் 30 ஆண்டுகளுக்கு போர் செய்ய எந்த அரசுக்கும் இனி சக்தி கிடையாது, போராளிக்கும் நன்மைகள் கிடையாது.





ஒரு மடயனும், ‘தம்பி’ சீமானும்!

21 09 2008

சில நாட்கள் முன்னர் மடயனின் உலக தத்துவங்களை ஒருங்கிணைத்து வெளியிட்ட “நூலுக்கு”, விழா எடுத்தனர். தன்னைத் தானே போற்ற விரும்பாத மடயனை எப்படியோ விழாவிற்கு சம்மதிக்க வைத்துவிட்டார்கள் போலும்.

மடயனின் புத்தக விழாவில் கலந்து கொண்டு நூலை வெளியிட்டார் இயக்குனர் சீமான். சீமான் அந்த புத்தகத்தை படித்தாரா ?

மடயனின் சில பதில்களைத் தவிர்க்க முடியாத காரணத்தால் வெளியிடுகிறேன்.

1. …மணிரத்னம் ஒரு இந்து தீவிரவாதி மற்றும் மதன் ஆபாச எழுத்தாளன்

http://mathimaran.wordpress.com/2008/08/04/article104/

2. …ஏ.ஆர். ரகுமான் மற்றும் அப்துல் கலாம் பார்பனர் கை கூலி

http://mathimaran.wordpress.com/2008/01/08/%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%a9%e0%ae%95%e0%af%8d-%e0%ae%95%e0%af%88-%e0%ae%95%e0%af%82%e0%ae%b2%e0%ae%bf-%e0%ae%8f%e0%ae%86%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0/

3. உடலினை உறுதி செய் என்று பாரதியின் பாடலை உங்கள் தம்பி படத்தில் வைத்தீர்களே. ஆனால் இந்த மடயன், பாரதியை கட்டம் கட்டி அசிங்கபடுத்துகிறானே ? பாரதியை அசிங்கப்படுத்தியதிற்கு மடயனின் முழுபதிவையும் சுட்டியாகத் தர வேண்டும்.

மேற்கூறிய “விடைகளுக்கு” உங்கள் ஆதரவு உண்டா ? சீமான் அவர்களே உங்கள் பதிலென்ன ? பகுத்தறிவின் பகலவனே, சே.குவாராவின் வாரிசே, ராஜீவ் காந்தியைக் கொலை செய்த எல்.டி.டி.இயின் ஆதரவாளரே, தமிழ் பேசாதவன் உறுப்பை அறுக்க பரிந்துரைத்தவரே…பதில் இருந்தால் சொல்லுங்கள்!

உங்கள் இரட்டை நிலைப்பாட்டை (hypocrisy) ஏற்கனவே ஞாநியின் பேட்டியில் அறிந்தேன். மற்றவர்கள் சொல்லித் தரும் வசனங்களை வைத்துக் கொண்டு இந்த “பகுத்தறிவு” மடயனுடன் சேர்ந்து துவேஷத்தை பரப்ப முன் வந்தது வருந்தத்தக்க சூழ்நிலையே. மடயனுடன் சேர்பவர் மடயனாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை, மாங்கா மடயனாகவுமிருக்கலாம்…

பி.கு. இந்த அரை வேக்காட்டு துவேஷம் பரப்பும் மடயனை எவர் எதிர்த்தாலும் அவர்கள் “ஆர்.எஸ்.எஸ்” அல்ல “சாதி வெறியர்கள்” என்று முத்திரைக் குத்தப்பட்டாலும் பரவாயில்லை. அத்தகைய “புகழ்ச்சிக்கு” நான் தகுதியுடையவன் அல்ல என்பதையும் இப்பொழுதே தெரிவித்துக் கொள்கிறேன்.