
நாம் உயிருடன் வாழும் பொழுது சாவு வரப்போவதில்லை
சராசரியாக ஒரு நாளில் மூன்று வெடிகுண்டு எச்சரிக்கை இஸ்ரேலில் அறிவிக்கப்படுகிறது. ஒவ்வொரு நாளும் மக்கள் நடமாடும் சந்தைகள், உணவகங்கள், சமயக் கூடங்கள் என்று எங்கும் தோட்டாக்களோ அல்ல மனித வெடி குண்டுகளோத் தாக்கத் தயாராக இருக்கும் நாடு, இஸ்ரேல். இஸ்ரேல் மீது இவ்வளவு காழ்ப்பும், தீவிரமும் ஏன் என்பது பெரிய வரலாறு, பிறகு வாய்ப்புக் கிடைக்கும் பொழுது எழுதுகிறேன். ஆனால் பாலஸ்தீனியர்கள் இந்த இஸ்ரேலுக்கு எதிராக நடுத்தும் தாக்குதலை தன் பிறவியின் மிக முக்கியமான கடமையாக செய்து வருகின்றனர். இதற்கு இஸ்ரேல் தன் இராணுவம் கொண்டு ஒரு யூதனை இழந்தால் 10 பேர் அடுத்தவன் வீட்டில் அடிக்கின்ற அளவிற்கு வந்து விட்டனர். பள்ளிகள், குழந்தைகள், பெண்கள் என்று எவராய் இருப்பினும் தாக்குதல் செய்யத் தயங்குவதில்லை இஸ்ரேல்! மனதில் ஈரம் காய்ந்து விட்டது இஸ்ரேல் மக்களுக்கு!
***
மன்மோகன் சிங் பதிவியேற்ற பின்னர், குறைந்தது 23 மூன்று முறை இந்தியா மீது தாக்குதல் நடந்துள்ளது (காஷ்மீரைத் தவிர்த்து). ஜுலை 26 2006, 200 பேரை பலி வாங்கியது பம்பாயின் ரயில் வண்டி தொடர் குண்டு வெடிப்புகள். இதுவரை எவரும் பிடிபடவில்லை. பிரதமர் வருத்தம் தெரிவித்தார். நாடு அஞ்சலி செலுத்தியது. மும்பை மக்கள் தங்கள் வேலைப் பார்க்க சென்றுவிட்டனர்.
பின்னர் ஜெய்பூரில் 52 பேரை தொடர் குண்டு வெடிப்பில் பலி கொடுத்தனர், அகமதாபாத், சூரத் மற்றும் பெங்களூரில் 80 பேரை பலி கொடுத்தனர் இந்தியர்கள். இறந்தவர்கள் அனைவரும் அப்பாவி இந்தியர்கள். தினம் காலை தேதியைக் கிழிக்கும் போழுது எப்போ எங்கே குண்டு வெடிக்குமோ என்பது அனைவரின் பின் மூளையில் பதியத் தொடங்கியும் எல்லோரும் அவரவர் வேலையைப் பார்க்கச் சென்று விட்டனர்.
“என்னடா இது, நாம் என்ன பண்ணாலும் இவங்களுக்கு சொரணையே இல்லையே” என்று தீவிரவாதிகளே எண்ணும் அளவுக்கு வந்தது நிலை. பின்னர், மீண்டும் மும்பையில் புது யுக்தியை கொண்டு பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விட்டுள்ளனர் எதிரிகள்.
பயம், மரண பயம். இதனை விட ஒரு மனிதனை அச்சத்தின் விளிம்பில் தள்ளவே முடியாது. குண்டுகள் வைத்து ஒட்டு மொத்தமாக அழிப்பதால் ஏற்படும் அதிர்ச்சியை விட உலகமே வேடிக்கைப் பார்க்க ஒவ்வொரு அப்பாவியைக் கொல்வதில் இருக்கும் பயங்கரம் இந்தியர்கள் நெஞ்சை பற்றிக் கொள்ள வேண்டும் என்ற திட்டம் இந்த வாரம் முப்பையில் நடந்தேரியது. 200க்கும் மேற்பட்ட இந்தியர்கள், அமேரிக்கர்கள் மற்றும் ஐரோப்பியர்கள் உயிரிழந்துள்ளனர். மீண்டும் அஞ்சலி, பாகிஸ்தானுக்கு எச்சரிக்கை, நஷ்டயீடு என்று நின்று விடுவோமா இல்லை யூதனாக மாறி இந்த கோழைகளுக்கு பாடம் கற்பிப்போமா?
Sing for the moment