வாரணம் ஆயிரம்: ஒரு டாடியின் கதை

20 11 2008

வாரணம் ஆயிரம்

வாரணம் ஆயிரம்

வழக்கமா பசங்களுக்கு அப்பா மேல ஒரு சாப்ட் கார்னர் இருக்கும். அதே வழக்கத்துல அந்த சாப்ட் கார்னரை எப்பவுமே வெளிய சொல்ல மாட்டாங்க. இந்த சாப்ட் கார்னரை வெளியே அதுவும் உலகிற்கு சொல்ல முற்பட்டு எடுத்த படம் வாரணம் ஆயிரம்.

கதை

தன் மனைவியை மென்மையாகக் காதலித்தவர், தன் மகனுக்கு என்றும் தன்நம்பிக்கையாக நின்றவர் என்று இருவரித் திருக்குறளாகத் திகழ்கிறார் கிருஷ்ணன். 16 வயதில் விடலை சண்டையை தான் தலையிடாமல் “ஜிம்முக்கு எல்லாம் போர இல்ல” என்று நாசூக்காக பையனிடம் கேட்கிறார். பெண்களுடன் ரோட்டில் நின்று பேச வேண்டாம் வீட்டினுள் அழைத்து பேசு என்கிறார் நாகரீகம் அறிந்தவர். மகனின் கிட்டார் இசைக்கு மயக்குபவர். வசதியில்லை எனினும் பிள்ளையை இன்ஜினியரிங் கல்லூரியில் சேர்க்கிறார் (கடன் பட்டு). பிள்ளை வழக்கம் போல் அடி தடி, காலேஜ் கலாட்டா என்று கல்லூரி வாழ்க்கையை முடிக்கிறான்.

கல்லூரி முடித்தக் கையுடன் மேக்னாவிடம் காதல் வயப்படுகிறான். மேக்னா அமேரிக்க பறக்கிறாள். நீ எங்கிருந்தாலும் உன்னை விடமாட்டேன் என்று தீர்க்மாகிறான் சூர்யா. அதற்கு முன் தந்தையின் கடன், சிறு வீடு என்று தன் கடமைகளை முடிக்கிறான். முடித்த கையுடன் அமெரிக்க கவுன்சலேட் வாசலில் நின்று வில்லியம் வேட்ஸ்வொர்த் வரிகளை சொல்கிறான் “There are miles to go…” சான் பிரான்சிஸ்கோ நகரில் மேக்னாவைத் தேடி கண்டு பிடிக்கிறான். 90 நாட்களில் இரண்டு பாடல்கள் பின்பு அவள் காதலுக்கு இசைகிறாள். விதி வலியது என்பதைப் போல் மேக்னா கொல்லப்படுகிறாள்.

வலியில் டாடியுடன் தொலைப்பேசியில் அழுகிறான். அம்மாவின் சமாதானம் எடுபடவில்லை. சென்னைத் திரும்பும் மகன் மேக்னாவின் பிரிவில் என்ன செய்வதரியாது மது, புகை, போதை என்று சரியத் தொடுங்குகிறான். போதை ஏரியதும் “அஞ்சல” பாட்டுக்கு ஊரே ஆட்டம் போடுகிறது. மகனை சமாளிக்க அவனுடன் பேசி திருத்துகிறார். இந்த வெறுமை, கோவம் எல்லாவற்றையும் பாசிடிவ் எனர்ஜியாக்கு என்கிறார். சூரியாவும் நம் ரஜினி போல ஜம்முவிற்கு வனவாசம் செல்கிறான்.

தன்னுக்குத் தெரிந்த ஒருவரின் மகனை கடத்திவிட்டார்கள் என்று அறிந்து அவருக்கு உதவுகிறான் சூரியா. இதன் மூலம் அந்த பாசிடிவ் எனர்ஜியை அறிந்து விட்டதாக உணர்கிறான் சூர்யா. பின்னர் சென்னைத் திரும்பி இராணுவத்தில் சேர முடிவெடுத்திருப்பதாகவும் சொல்கிறார். மாலினி, சூர்யாவின் அம்மா, வேண்டாம் என்கிறாள். அவன் நெஞ்சுல கை வெச்சி சொல்லிட்டான் அவனத் தடுக்காதே என்கிறார் கிருஷ்ணன்.

சூர்யாவும் ஜன்னல்களைத் தாண்டி வலதும் இடதும் துப்பாக்கியை நீட்டி கமாண்டோ ஆகிவிடுகிறார். இந்நிலையில் மெக்னாவின் நினைவுகளின் தீவிரம் குறைந்து, ப்ரியா மீது ஈர்ப்பு ஏற்படுகிறது. ப்ரியா சூர்யாவின் தங்கையின் தோழி. இருவரும் மணம் புரிகின்றனர்.

கிருஷ்ணனின் புகைப் பழக்கம் அவரை தொண்டைப் புற்று நோயாளிக்கிவிடுகிறது. ஒரு வருடம் கெடு. இடையில் பத்திரிக்கையாளரைக் காப்பாற்ற காஷ்மீர் செல்ல வேண்டிய சூழ்நிலையில் சூர்யா. பணியின் வழியில் தந்தையின் மரணத்தின் தகவல் அறிகிறான். வேலையை செவ்வனே முடித்த பின் வீடு திரும்பும் டாடியின் கடைசி நிமிடங்கள் அவருடன் கழிக்க முடியவில்லையே என்று தீராத வலி வாட்டுகிறது!

விமர்சனம்

பலரும் வாரணம் ஆயிரத்தை தவமாய் தவமிருந்து படத்துடன் ஒப்பிடுகிறார்கள். இது முழுக்கத் தவறு. தவமாய் தவமிருந்து மண்ணின் கதை, நம் அண்டை வீட்டில் வாழும் மனிதர்களின் தினசரி ஆவணப்படம் (மிகையுடன்).

வாரணம் ஆயிரத்தில் “திஸ் இஸ் சாவு கூத்து” என்று கூத்தாடும் பொழுதும் பீட்டர் விடும் கொழம்பிப் போன பையன். அது மட்டுமல்ல பிள்ளை சூர்யா அப்பாவைப் பார்த்து “நீங்க வாலண்டரி ரிட்டையர்மெண்ட் கொடுத்துடுங்க, வீடு நான் கட்டுறேன், சேட்டுக் கடனை நான் அடைக்கிறேன்” என்கிறான். இதனைக் கேட்கும் கிருஷ்ணனுக்கு எந்த பிரச்சனையுமில்லை. இதே போல் ஒரு காட்சி யாரடி நீ மோகினி படத்தில் வரும் அதில் ரகுவரன் தனுஷை அடிப்பார். செல்வராகவன் சிந்தனையும் கௌத்தம் மேனனன் சிந்தனையும் 180 டிகிரி வித்தியாசம் தெரிகிறது.

ஆங்கிலத்திக்கு இடையே தமிழில் பேசிகிறார்கள். இது யாருக்குமே உருத்தலாகத் தெரியவில்லை. டெல்லி, ஜம்மு எல்லாம் போனால் சூர்யா இந்தியில் தான் பேசுகிறார். கடைசியாக தில்லி போலீசுடன் மட்டும் இரண்டு வாக்கியம் முழுக்க ஆங்கிலம் பேசுவார். ஏன் இந்த மொழிக் குழப்பம் ? சீமான் சொல்வது சரியாகிவிடுமோ என்ற பயமாகவுள்ளது.  தமிழை அடிநாக்கிலும், ஆங்கிலத்தை நுனிநாக்கிலும் பழகும் கூட்டம் மிக அதிகமாகிவருகிறது! இந்த படத்திற்கு தமிழக அரசு வரி சலுகை தமிழுக்கே இழுக்கு.

சூர்யா – என்னும் கலைஞரில்லை என்றால் இந்தப் படத்தைப் பார்க்கவே வேண்டாம்.

சிம்ரன் – இருக்கிறார், அழகாக.

சமீரா ரெட்டி – நடிக்கிறார், உயரம் சூர்யாவைவிட அதிகம். காஸ்ட்டிங் கச்சிதம்.

திவ்யா – சுட்டியில்லை. முதிற்சியுண்டு, பேச்சில்.

கௌத்தம் மேனன் – பெர்ஸ்னல் பீலிங்க்ஸ் அதிக இடம் கொடுத்ததால் படத்தை மூன்றாம் மனித பார்வையின்றி எடுத்துள்ளார். படமே பெர்ஸ்னல் என்றால் அதனை மூன்றாம் மனிதர்களுக்குக் காட்ட வேண்டிய அவசியமுமில்லை!

ஹெரிஸ் ஜெயராஜ் – பாடல்கள் இல்லை என்றால் பலரும் இரண்டாம் பாதியில் மக்கள் காணாமல் பொயிருப்பார்கள்.

ஆண்டனி எடிட்டிங் – இரண்டாம் பகுதியில் கத்திரியைத் துலைத்துவிட்டார்.

மெக்கப் – சூப்பர்





யானைகள் ஆயிரம் – பரணி இசைத்த ஹெரிஸ் ஜெயராஜ்

28 09 2008

ஆயிரம் யானைகளைப் போர்களத்தில் கொன்றவன் பரணி, யுவன் இசையில் நந்தா படத்தில் கேட்டது. ஆனால் அதற்கு முன் பரணி புராணம் நடத்திய தமிழாசிரியர் நினைவுக்கு வருகிறார், செய்யுள் நினைவிற்கு வரவில்லை!

சரி வாங்க போர்களத்தில் குதிப்போம்.

அடியே கொல்லுதே – கேட்டாச்சு பார்த்தாச்சு – மஞ்சள் நிலவே பாடலை சட்டென்று நினைவுக்குக் கொண்டுவருகிறது. அதே இண்டர்லுயூட்ஸ்.

நெஞ்சுக்குள் பெய்திடும் – ஹரிஹரன் – கொஞ்சல்கள் – கோர்வையற்ற வரிகள்

என் வீட்டைப் பார்
என்னைப் பிடிக்கும்
ஓ ஷாந்தி

*ஏத்தி ஏத்தி – கண்டிப்பாக எங்கேயொ கேட்டப் பாடல் – ஷங்கர் படத்தின் உளரல் பாடல்கள் வரிசையில் இதை சேர்க்கலாம்.

*முந்தினம் பார்த்தேன் – சூரியாவின் “அலகான” குரல் தொடக்கம். நரேஷ் பாடும் தமிழ் பாடல்கள் அனைத்தும் கார்த்திக்கை நினைவூட்டுகிறது. 12பி -முத்தம் முத்தம் பாடல் சாயல் ஸாகஸ்சபோன் இசைக்கும் பொழுது தெரிகிறது. பெண் குரல் மிகவும் கீச் – பிராஷாந்த் பெண் குரலில் பாடியதால் பிரஷாந்தினி என்று பெயர் வைத்தனரோ ?

*ஒ ஷாந்தி – மாலினி போல் ஷாந்தியும் ஒரு கதாபாத்திரத்தின் பெயராக இருந்தாலும் ஆச்சரியமில்லை. உயிரை ஏந்தி சென்றாய் என்று வரும் வரிகள் இதனை உறுதி செய்கிறது.

இந்த பாட்டு காப்பி என்று சொல்பவற்களுக்கு பதில் – ஆமாங்கோ ஆமாங்கோ ஆனா மூலம் தான் கண்டுபிடிக்க முடியாது! ஏன்னா பல மேற்கத்திய பாடல்கள் இது போலவே உள்ளது!

*அவ என்ன என்ன – முதல் ஹெரிஸ் ஜெயராஜ் டப்பாங்கூத்து என்று சொல்லலாம். கார்த்திக்கின் குரல் இதனை டப்பாங்கூத்திலிருந்து கல்லூரி கானா போல் செய்துவிடுகிறது.

துணியால் கண்ணையும் கட்டி
கையக் காத்துல நீட்டி
தேடுற அவள
தனியா எங்கே போனாளோ ?

டப்பாங்கூத்துக்கு நடுவில் ஓப்ரா பாணியில் “ஓ ஓ” என்று பாடுவது தான் புயூஷனோ ?

*அனல் மேலே பனி துளி

பாம்பே ஜெயஸ்ரீயினை சுதா ரகுநாதன் வைத்து ரீப்பிலேஸ் செய்துள்ளார் பரணி இசையமைப்பாளர். நம் சத்தியம் இசைக்கு வைத்த முதல் குற்றச்சாட்டிற்கு செவி சாய்த்து விட்டாரோ ஹெரிஸ்!

குன்னக்குடி வைத்தியநாதன் போல் வயலின் கிங் கிங் என்று இசைக்கிறது. நல்ல பாடகர்களை அழைத்து இரண்டு கட்டையில் பாடவைப்பது தான் ஹெரிஸின் அசாத்தியத் திறமைக்கு எடுத்துக்காட்டு என்று நினைக்கிறேன். தான் மட்டுமில்லாது மற்ற நல்ல கலைஞர்களையும் “இவ்வளவு தானா” என்று கேட்குமளவுக்கு பாட வைக்கிறார்.

பாட்டுக்கு நடுவில் தூக்கம் வந்தால் அதற்கு சுதா ரகுநாதனின் தாலாட்டே காரணம் மற்றும் எந்த ஏற்றக் குறைவுமில்லாது இசையும் துணை போகிறது!

இந்த முறை ஹெரிஸின் பாடல்களிலிருந்தே காப்பி அடிக்கிறார் என்பதே ஆறுதல்! ஆனால் படமே forrest gump என்ற ஹாலிவுட் ஆஸ்கர் வென்ற படத்தின் தழுவல் எனும் பொழுது இதெல்லாம் எம்மாத்திறம் ?

அஞ்சல பாட்டத் தவிற மற்ற பாடல்கள் எனக்கு போதுமடா சாமினு இருக்கு. நீங்க என்ன நினைக்கிறீங்க!