2002 ஆம் ஆண்டு தொடங்கி 2008 இல் வெளிவந்த இசை வெளியீடு அதா (ஹிந்தி). இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான். பாடல்கள் பத்து. பத்தும், பத்து விதம். என் மூளைக்கு எட்டின வரைக்கும் யாராலும் ஒவ்வொரு பாடலையும் இவ்வளவு வகை படுத்தி செய்ய முடியுமா என்று தெரியலை.
ஒரு வரி விமர்சனம்
- கும்சும் கும்சும் – சிவாஜியின் சாஹானா
- ஹவா சுன் ஹவா – சொன்னாலும் கேட்பதில்லை, காதல் வைரஸ்
- இஷ்க் அதா (ஆண், பெண்) – வரிகள் ரசனையுடன்
- குல்ஃபிஷா – தீ தீ, திருடா திருடா
- மெஹருபா(பாடல், இசை) – கல்லூரி மாணவனின் இசை, good for a love date
- ஹே தர்த் – கண்ணீரிலே, உயிரே (ஹே அஜ்னபி, தில் சே)
- மிலோ மிலோ வஹா – எவனோ ஒருவன், அலைபாயுதே
- தூ மெரா ஹி மெரா – காதலேனும் தேர்வெழுதி, காதலர் தினம்
அதா - தெளிந்த நீரோடை புரியாத புதினம். காதல் வைரஸ், காதலே சவாசம் என் சுவாச காற்றே போன்று முழு பாடல் தொகுப்பும் சேமிக்க வேண்டிய ஒன்று. என் முதல் மதிப்பீடு இந்த தொகுப்புக்கு இன்னும் வேலை தேவை என்பதே. கடந்த இரண்டு வாரங்களாக கேட்டதில் – பலே என்று பல இடங்கள் சொல்ல வெச்சுருகார் ஏ. ஆர். ரஹ்மான்.
பாடலின் விவரமான விளக்கம் இங்கே!

Sing for the moment