ஃப்யர்பாக்ஸ் இலவசம் தான் – தரத்துடன்!

18 06 2008

உலக சாதனை படைப்போம் என்கின்றனர் மொஸிலா நிருவனத்தினர். ஃப்யர்பாக்ஸ் என்றால் என்ன என்று தெரியாதோர் இங்கே சொடுக்கவும். இலவசம் என்றால் அது தரமற்ற நம்பகத்தன்மையற்ற பொருளாகத்தானிருக்க வேண்டும் என்ற எண்ணத்தை தகர்த்தெரிந்த நிருவணங்களில் ஒன்று மொஸிலா (மற்றொன்று கூகிள்).

 

வெர்ட்பெரஸ் மொழியாக்கம் – இலவச சேவை

 

இலவசம் என்றால் இந்தியர்கள் மட்டுமல்ல ஜப்பானியர்களும் அதை தீண்டுவதில்லை. அதன் முதல் காரணம் தரமின்மையே.

இந்தியர்கள் இலவசமாக செய்யுமொரு சேவை வெர்ட்பெரஸ் மொழியாக்கம். சற்று கடினமானது ஆனால் செயல்படுத்தக்கூடியது. ஒரு உதாரணம் இங்கே

 

 இவ்வளவு எழுத்துப்பிழைகளுடன் நான் தமிழை சென்னை ஆட்டோகளில் தான் பார்த்துள்ளேன். ஏன் இந்த குறை? ஏன் இந்த அலட்சியம்?

வெர்ட்பிரஸ் சமுதாயம் இதனை எவ்வாறு கையாளும்? சில வழிகள்:

 

தமிழில் அதிகம் எழுத்து பிழை செய்பவர்கள் இந்த சேவையின் பக்கம் தலைக்காட்டாதீர்கள். உங்கள் ஆர்வத்திற்கு நன்றி ஆனால் வேண்டாம்.

 

தமிழ் தட்டச்சுக்கு புதியவர்கள், எழுதியதை இரு முறையாவது படித்து பார்க்கவும். சந்தேகமிருந்தால் “Optional Comment” உபயோகப்படுத்தவும்.

 

Error”  என்ற சொல்லுக்கு தவறு மற்றும் பிழை என்று இருவேரு சொற்கள் உள்ளது. மொழி மாற்றத்தில் ஒருமித்த சொற்கள் அழகு சேர்க்கும். என் கருத்து தடங்கள் தடங்கல் என்ற சொல் தான் சரி, தேவையென்றால் விவாதிக்கலாம்.

 பி.கு. என்னால் மேற்கூறிய வரியை http://translate.wordpress.com தளத்தில் கண்டுபிடிக்க முடியவில்லை L