சாவர்யா (ஹிந்தி)

8 08 2008

Saawariya – beloved

சினிமா ஒரு கனவுத் தொழிற்சாலை என்பதை கேட்டிருக்கிறேன். ஆனால் முதல் முறையாக சாவர்யா (ஹிந்தி) படம் பார்த்தவுடன் அசந்து போனேன். படம் ஒரு கனவுலகத்தில் நடக்கிறது என்றே ராணி முகர்ஜியின் (குலாப்ஜி) குரல் நமக்கு நினைவூட்டுகிறது. படத்தின் ஒவ்வொரு காட்சியும் நீல வண்ணத்தில் தொய்ந்துள்ளது. ரவி. கே. சந்திரனின் ஒளிப்பதிவு கண்ணில் ஒத்திக்கொள்ளும் அளவுக்கு அழகின் வடிவம்.

நடு இரவில் ஒரு பாலத்தில் மேல் ஒரு பெண்ணை (சகீனா) கண்ணிருடன் சந்திக்கிரான் ராஜ். தன்னை விட்டு பிரிந்த காதலக்குகாக (இமான்) காத்திருப்பது தெரியவருகிறது. பிரிந்து ஒரு வருடமாகியும் அவனை நம்பி காத்திருப்பளிடம் தன்னுடைய காதலை தயங்கி ஏங்கி சொல்கிறான் ராஜ். வேறு வழியின்று அந்த காதலை ஏற்றுக்கொள்ளும் நேரத்தில் அவளின் காதலன் சொன்னது போல் அந்த பாலத்தில் அவளுக்காக காத்திருக்கிறான். காத்திருந்தவனிடம் செல்வாளா அல்ல புதியவினிடம் தங்குவாளா என்பது கதையின் முடிவு.

வெனிஸ் நகர கண்டோலாக்கள், பாரிஸ் நகர அலங்கார வளைவுகள் என ஐரோப்பிய நாகரீகத்தின் அற்புதங்களை கலைவடிவில் காட்டி அசத்தியுள்ளார் ஆர்ட் டைரக்டர். சொட்ட சொட்ட நனனைய வைக்கும் இந்த படத்தின் இசை. மொண்ட்டி என்ற புதிய இசையமைப்பாளரின் இரண்டு வருட இசையின் உழைப்பை நாம் ரசிக்கலாம், பருகலாம்.

ப்ராட்வே மேடை நாடகத்தை சினிமாவில் காட்டிய அனுபமே எனக்கு ஏற்பட்டது. இதுவே இயக்குனர் சன்ஞை லீலா பன்சாலியின் நோக்கமாகவும் இருந்திருக்கும். ஒரு கனவுலகம் என்று சொல்லும் பொழுது நமக்கு ஏற்படும் கற்பனைக்கு ஏற்ப எல்லாம் அழகு எல்லோரும் அழகு – பார்ப்பதற்கு. ஆனால் இந்த அழகினிடையே உள்ள நெளிவு சுழிவுகளை நமக்கு தெரிந்தோ தெரியாமலோ அழைத்து செல்வது தான் இந்த படத்தின் முதல் வெற்றி.

சாவர்யா, மொனாலிசா ஓவியம் போன்றது. நீஙகள் சிரித்தால் இந்த படமும் சிரிக்கும் நீங்கள் அழுதால் இந்த படமும் அழும். ஒரு இரண்டே கால் மணி நேரம் அன்றாட வாழ்க்கையை மறந்து கனவுலகிற்கு செல்வோம்!

http://saawariyathefilm.com/





அதா – இசை விமர்சனம்

3 06 2008

2002 ஆம் ஆண்டு தொடங்கி 2008 இல் வெளிவந்த இசை வெளியீடு அதா (ஹிந்தி). இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான். பாடல்கள் பத்து. பத்தும், பத்து விதம். என் மூளைக்கு எட்டின வரைக்கும் யாராலும் ஒவ்வொரு பாடலையும் இவ்வளவு வகை படுத்தி செய்ய முடியுமா என்று தெரியலை.

ஒரு வரி விமர்சனம்

  • கும்சும் கும்சும் – சிவாஜியின் சாஹானா
  • ஹவா சுன் ஹவா – சொன்னாலும் கேட்பதில்லை, காதல் வைரஸ்
  • இஷ்க் அதா (ஆண், பெண்) – வரிகள் ரசனையுடன்
  • குல்ஃபிஷா – தீ தீ, திருடா திருடா
  • மெஹருபா(பாடல், இசை) – கல்லூரி மாணவனின் இசை, good for a love date
  • ஹே தர்த் – கண்ணீரிலே, உயிரே (ஹே அஜ்னபி, தில் சே)
  • மிலோ மிலோ வஹா – எவனோ ஒருவன், அலைபாயுதே
  • தூ மெரா ஹி மெரா – காதலேனும் தேர்வெழுதி, காதலர் தினம்

 

அதா - தெளிந்த நீரோடை புரியாத புதினம். காதல் வைரஸ், காதலே சவாசம் என் சுவாச காற்றே போன்று முழு பாடல் தொகுப்பும் சேமிக்க வேண்டிய ஒன்று. என் முதல் மதிப்பீடு இந்த தொகுப்புக்கு இன்னும் வேலை தேவை என்பதே. கடந்த இரண்டு வாரங்களாக கேட்டதில் – பலே என்று பல இடங்கள் சொல்ல வெச்சுருகார் ஏ. ஆர். ரஹ்மான்.

பாடலின் விவரமான விளக்கம் இங்கே!