புல்லட் டிரேய்ன் யுகத்தில் மாட்டு வண்டி சவாரி என்பது போல் டி.வி.டி யுகத்தில் வி.ஹ்ச்.எஸ். வீடியோக் கடை நடத்துவது.
அது போல் வீடியோக் கடை நடத்துபவர் ஃப்லெச்சர் (Fletcher) என்னும் முதியவர். அவர் கடையை இடித்துவிட்டு அங்கே ஒரு புதிய கட்டிடம் வர வேண்டும் இல்லையெனில் கட்டிட சட்டதிட்டங்களுக்கு ஏற்ப கட்ட வேண்டும் என அரசாங்கம் தெரிவித்து விட்டு ஆரு வார கெடுவும் தருகிறது.
ஃப்லெச்சர் கடையில் வேலை செய்பவர் மைக் (Mike – Mos Def). ஒரு வீடியோ கெசட்டிற்கு ஒரு டாலர் என்ற விதத்தில் நடந்து வரும் கடையில் ஏன் வேலை செய்கிறோம் என்று தெரியாமல் வேலை செய்கிறார். 100 வருடங்கள் முன் இக்கட்டிடத்தில் ஒரு தலை சிறந்த ஜாஸ் கலைஞர் (Fats Waller) வாழ்ந்தார் என்பதையும் நம்புபவர்.
மைக்கின் நண்பன் ஜெரி (Jerry – Jack Black). ஜெரியின் வீடு ஒரு டிரேய்லர் வண்டி. அடிக்கடி ஜெரி மைக்கிடம் சென்ற ஏதவாது சேட்டை செய்ய துணைத் தேடுவான். அது போல் தான் வாழும் இடத்திலிருக்கும் மன்சார டிராண்ஸ்ஃபார்மர் தன் மூளையைக் குழப்புவதால் அதனை அழிக்க வேண்டும் என்று மைக்கிடம் சொல்கிறான்.
இதற்கு முன் ஜெரியை உள்ளே இனி அனுமதிக்காதே என்று ஃப்லெச்சர் மைக்கிடம் திட்டவட்டமாக சொல்லிவிட்டு அவர் கடையைக் காப்பாற்ற சில முயற்சிகளைச் செய்ய வெளியூருக்கு செல்கிறார்.
ஜெரி மைக்கின் அரைகுறை உதவியுடன் டிராண்ஸ்ஃபார்மரை காலி செய்யும் முயற்சி விபரீதத்தில் முடிகிறது. ஜெரி மீது பலத்த மின்சாரம் பாய்கிறது. அடுத்த நாள் வீடியோ கடைக்கு வந்து மைக்கிடம் நடந்ததைச் சொல்லி கொவப்படுகிறான் ஜெரி. வீடியோக் கடை வாடிக்கையாளரிடமும் வம்பு இழுக்கிறான். வாடிக்கையாளர் அகர வரிசையில் கேசட்டில்லை என்று சுட்டிக்காட்ட ஜெரி வீடியோக்களை வேண்டுமென்றே கலைத்து வைக்கிறான். மைக் நடுவில் புகுந்து ஜெரியை வெளியேத் துறத்துகிறான். வாடிக்கையாளரும் வீடியோ ஒன்றை பெற்று செல்கிறார்.
அடுத்த நாள் அதே வாடிக்கையாளர் வந்து இந்த வீடியோவில் எதுவும் தெரியவில்லை எல்லாம் அழிந்தது போல் இருக்கிறது என்கிறார். சற்று நேரத்தில் அடுத்த வாடிக்கையாளர் அதே போல் சொல்ல மைக்கிற்கு தலை சுற்றுகிறது. உடனே கடையில் உள்ள அத்துனை வீடியோக்களையும் பரிசோதிக்க எல்லாம் அழிந்து போயிருக்கிறது.
இந்நேரத்தில் ஜெரி கடைக்குள் வருகிறான். டி.வி. தான் பிரச்சனையாக இருக்கும் என்று யோசனை சொல்லி டி.வி. அருகே செல்கிறான். டி.வி. சல சலக்கிறது. மைக் அதனைக் கண்டதுடன் ஏன் உன் கைப் பட்டதுடன் டி.வி. வினோதமாக நடக்கிறது என்று கேட்க. தெரியலை என்கிறான் ஜெரி. மறுபடியும் டி.வி. அருகே ஜெரி கை செல்ல டி.வி. சல சலக்க மைக் என்ன நடந்ததென்று உணர்கிறான்.
ஜெரி மீது பாய்ந்த மின்சாரம் அவனை காந்தமாக (Magnet) மாற்றி விட்டது. வி.ஹ்ச்.எஸ் வீடியோக்கள் காந்த சக்தியில் அழிந்து போகக் கூடியவை.
ஏற்கனவே கடை அழியும் நிலையில் இருக்கு , முதலாளி ஃப்லெச்சரின் நம்பிக்கையையும் இழந்துவிட்டோம் என்று தவிக்கிறான் மைக்.
பிறகு அவனுக்கு சிறு பிள்ளைத்தனமாக ஒரு சிந்தனை எழுகிறது. அந்த சிந்தனை மக்களிடம் நல்ல வரவேற்பு பெறுகிறது. இச்சந்தினையை மூலதனமாக வைத்துக் கடையைக் காப்பாற்ற முடியுமா? என்பதே மீதி கதை.
முதல் பகுதி மிக சுவரசியம் என்றே சொல்ல வேண்டும். படத்தின் நகைச்சுவை இயற்கையாக இருப்பது படத்தின் பலம். படத்தின் இறுதி பகுதி சிறு பிள்ளைத் தனமாக இருக்கிறது என்று சொன்னால் அதைத் தான் இயக்குனர் விரும்பியுள்ளார். நம் நண்பர்களுடம் நாம் சிறு வயதில் நடத்திய சூப்பர் ஸ்டார் நாடகங்கள் அல்ல திருடன் போலீஸ் விளையாட்டை நினைவூட்டும்.
இப்படத்திற்கு முன் பார்த்த Step Brother அறுத்தெடுத்ததால் என்னால் இப்படத்தை ரசிக்க முடிந்ததென்று நினைக்கிறேன். Be Kind Rewind ஒரு முறை வாய்விட்டு சிரிக்கலாம்.


Sing for the moment