நீயா நானா – சந்தோஷ் சுப்ரமணியம்

19 05 2008

இன்று பார்த்த படம் சந்தோஷ் சுப்ரமணியம். நேற்று பார்த்தது நீயா நானா. இரண்டிலும் பேசபட்ட விஷயம் கிட்டதெட்ட ஒரே விஷயம் – பெற்ரோர்கள் பிள்ளைகளிடையே இருக்கும் பனித்தினரயை பற்றி!

ச.சு ‘பொம்மரைலு’ என்ற தெலுங்கு படத்தின் நகல். ரீமேக் ராஜாவின் நான்காவது படம்( ஜெயம், குமரன் …, சம்திங்க் சம்திங்க்…). நான்கு படங்களுமே தெலுங்கில் மிக பிரபலமான படங்கள். தம்பி ரவியின் ஆபத்பாண்டவன். மற்ற ரீமேக் டைரக்டர்கள் போல மூல கதையில் கை வைக்க மாட்டார். எனவே படங்கள் தமிழில் ஹிட். ஆனா எனக்கு எரிச்சலா இருக்கே ஏன்?

சில கேள்விகள்:

  • சொந்த சரக்கு தலையில கிடையாதா?
  • என்ன தான் வியாபாரத்தில வெற்றி பெற்றாலும், மனசோரமா ஒரு சொகம் இருக்கா?

‘ஜெயம்’ ரவியின் நான்காவது வெற்றி படம். தணுஷ்க்கு வெற்றிமாறன் அமஞ்ச மாதிரி சீக்கிரம் யாராவது ஜெயம் ரவிக்கு கிடைக்க வேண்டும். இல்லையென்றால் ‘ஜெயம் ரவி’ என்று ஒரு படம் வரும், அதில் அண்ணன் ரீமேக் ராஜா, அப்பா எடிட்டர் மோகன் தலைகள் தான் உருளும். நடனம் என்னவோ உடற்பயிற்சி வாகில் தான் இருக்கு.

என்னதான் கலைமேக்ஸ் ரவிக்கு சொந்தம்னாலும் இறக்கம் எனக்கு வரலை. “இத்தன நாளா ஏண்டா சொல்லலை” என்று அப்பா கேட்கும் பொழுது அத விளக்க சொல்லும் காரணம் நொண்டி சாக்காகவே தோணுது.

நம்ம ஊரு பசங்களுக்கு பெண்ணிடம் பேசவும் தயக்கம், அப்பாவிடம் பேசவும் தயக்கம் – தாண்டி வாங்கப்பா…

ஜெனிலியா – நீர்க்குமிழி, பட்டாம்பூச்சி, பரவா மின்சாரம், வெள்ளேந்தி இதை எல்லாம் சேர்த்தால் வரும் ஒரு கதாபாத்திரம். இந்த படத்தின் அஸ்திவாரம். எங்க அம்மா இந்த படம் பாத்திருந்தா ‘ஏண்டா அந்த பொன்னு கிருக்கு மாதிரி சிரிச்சிக்கிட்டே இருக்கா?’ என்ற கேள்வி வரும். இவ்வகை பெண்கள் படத்தில் பார்க்க ஜாலி, அதோடு சரி…இல்லனா அவர்கள் கணவர்களுக்கு சாரி :)

இசை ஓ.கே. – தேவி ஸ்ரீ ப்ரசாத் மெலடிகள் வித்தியாச படுத்த வேண்டும். படத்தின் முக்கிய பின்னனி இசை ஒரு ஹிந்தி பாடலை ஞாபக படுத்துகிறது.

ப்ரகாஷ்ராஜ் – வழக்கம் போல கலக்கல். கொஞ்சம் ரவிக்கு உதவியிருக்கலாம்!

படத்தின் முடிசூடா மன்னன் – திரைக்கதை!

மறக்காம மறைக்காம உங்க பெற்ரோரிடம் பேசிடுங்க…