தமிழ் சினிமாவின் ‘டி டே’

6 06 2008

 

 

ஜூன் 6 1944, இரண்டாம் உலகப் போரின் டி டே. ஆனால் அதனன பற்றி பேசப்போவதில்லை.

 

தமிழ் சினிமாவின் டி டே ஜூன் 13 2008. தசாவதாரம் வெளியாகும் நாள். தசாவதாரத்தை ‘டி என்று அழைக்க தொடங்கியுள்ளனர்.

 

 

 

 

நம் வாழ்வில் மதங்களின் பங்கு என்ன? மதங்கள் தங்களின் முக்கியத்துவத்தை இழந்து மூட நம்பிக்கைகளின் கூடாரமாகிவிட்டதா? (மகர ஜோதி முதல் ஆணுறை எதிர்ப்பு வரை). இதுவே டியின் கதை சாராம்சம்.

 

10 வேடங்களுக்கு தேவையான பரந்து விரிந்த கதைக்களம். அடியேன் விற்கப்பட்டேன்.

 

ஆனால்…

 

நல்ல கதைக்களம் நல்ல தயாளிப்பாளர்கள் இருந்தும் படத்தை சொதப்புவதில் கமல் கைதேர்ந்தவர். அதுவும் 70 கோடியில் எடுத்திருப்பதால் கண்டிப்பாக மடியில் நெருப்பை கட்டிக்கொண்டிருப்பார் தயாரிப்பாளர்.

 

சில கேள்விகள்:

 

·          ஹிந்தியில் எந்த அளவிற்கு வெற்றி பெரும்?

·          மதவாதிகளின் எதிர்ப்பு படத்தின் ஓட்டத்தை தடுக்குமா?

·          ஆளவந்தான், ஹே ராம் போன்று ‘ஒன் மேன் ஷோவாக இருந்து படம் கவிழுமா?

 

காலம் பதில் சொல்லும், ஆனால் உங்கள் எண்ணம் என்ன?