சாமான் நிக்காலோ, சரோசா!

25 07 2008

தோஸ்த்து படா தோஸ்த்து -யுவன் இசைக்கும் நட்புக்கான பாடல்கள் காத்திருந்து கேட்கலாம். பாடலின் முதல் இரு வரிகள் புரியவில்லை. அது என்ன “சவுத்…”?

கோடான கோடி - மத்திய ஆசிய மற்றும் ஆரபு நாட்டின் இசை கலவை. தீ பிடிக்க தீ பிடிக்க பாடலை நினைவூட்டுகிறது. ஆட்டம் போடக்கூடிய பாடல். ரைனாவின் குரல் வசீகரம்.

நிமிர்ந்து நில் – ஓய் ஓய் ஓய் நிமிர்ந்து நில், இந்த பாடல் வகையை யுவன் வல்லவன் மற்றும் தாஸ் படங்களில் செய்துள்ளார். ஆனால் சங்கர் மஹாதேவன் குரல் பாட்டிற்கு ஒரு அழகிய திமிரை தருகிறது. லாகானில் ச்லெ ச்லோ போல பாடலின் வரிகள் தட்டி எழுப்ப வருகிறது.

மாப்பிள்ளைக்கு – கல்யாண வீட்டு பாட்டு. ப்ரேம்ஜி அமரன் ராப் பாடல் பாடிப் பாடி வார்த்தை நழிவுது தழுவுதுனு பாடுராரு. கண்டிப்பா எங்கேயோ கேட்ட பாடல், முக்கியமா காதலர் தினம் ஞாபகம் வருது (டாண்டியா ஆட்டம்). எஸ்.பி.பீ.சரண் குரல் தனியாக தெரிகிறது.

சீக்கி சீக்கி – “அந்த ஆதியும் அந்தமும் பெண்ணிடம்” என்று ஸ்ரீகளின் தாளம். யுவன் மற்றும் யுவதிகள் ஆட்டம் போடலாம். கண்டிப்பா எங்கேயோ கேட்ட பாடல். இப்போதைக்கு கள்வனின் காதலியின் இவன் கட்டில் நாட்டு மன்னன் தான் என்பது உதிக்கிறது.

மை லைஃப் – ஒரு தனி ஆங்கில பாடல் உள்ளது. தான்வி மற்றும் குழுவினர் பாடியுள்ளனர்.

http://www.guruji.com/music?q=Saroja&cat=d0,albumtitle

நல்ல கலவை. முதலில் கொஞ்சிக் கொஞ்சி யாரும் பாடாதது ஆறுதல். அடுத்து புதிய முயற்சிகளை காண முடிகிறது. அது மட்டுமில்லாம் எந்த தயக்கமுமில்லாமல் ஒரு தனிக் குழுவின் பாடலை தன் ஆல்பத்தில் சேர்த்த யுவனுக்கு ஒரு ‘ஓ’. பல நாட்கள் கழித்து யுவன் ஆல்பம், ஒரு நல்ல ஆரம்பம்.





சத்தியம்: ஒரு குற்றபத்திரிக்கை (இசை விமர்சனம்)

23 07 2008

கடவுளே கடவுளே என்னை ஒரு பாரபட்சமற்றவனா ஹெரிஸ் ஜெயராஜின் சத்தியம் பாடல்களை கேட்கவிடு.

கடவுள்: ”நானே ஹெரிஸ திருத்த முடியாமா முழிக்கறேன்”.

நான்: “மன்னிக்கனும் சாமி”.

ஆசைக்குமளவிருக்கு!

சத்தியம் இசை வெளியீடு வழியா பத்து வருடங்களா ஒரே தாளம், ஒரே விதமானா பாடல் வகை (genere), ஒரே விதமான பாடல் வரிகள், ஒரே விதமான பாடகர்கள் என்று நம்மை மலரும் நினைவுகளுக்குள் அழைத்துச் செல்கிறார் ஹெரிஸ். சத்தியத்தின் பட்ஜெட் 27 கோடி என்று சிஃபியில் படித்தேன். பணத்திற்கும் கிரியேட்டிவிட்டிக்கும் சம்மந்தமில்லை என்பது சிவாஜி ஏற்கனவே பாடம் புகட்டியதால் நான் வாயை பொளக்கவில்லை.

குற்றபத்திரிக்கை படித்தாலும் ஹெரிஸ் ஜெயராஜின் இசையைப் போல எல்லாம் கேட்டதுதானே என்று சொல்லபோறீங்க. ஆனா இத தப்பித்தவரி ஹெரிஸ் ஜெயராஜ்  படிக்க நேர்ந்தால் அவருக்கு கேட்கட்டுமேனு எழுதறேன்.

குற்றச்சாட்டு 1

பாம்பே ஜெயஸ்ரீ – ஹெரிஸ், தாங்கல ஹெரிஸ். எஸ். பி. பாலசுப்பரமணியம் இளையராஜாவுக்கு பல பாடல்களைப் பாடினார். இதில் எத்துனைப் பாடல்கள் ஒரே மாதிரி இருக்கு? ஆனா பாம்பே ஜெயஸ்ரீ பாடராங்கனாலே அது என்வோ கொஞ்சிக் கொஞ்சி எதோ பண்ணுறாங்க. பாடல் காதுல விழுந்துடாத மாதிரி பாத்துக்குறீங்க. இப்போ சமீபத்துல ஜீ.வி. பரகாஷ் ஒரு படி மேலே போய் பாம்பே ஜெயஸ்ரீய இரண்டு கட்டைல பாட வெச்சார் (மின்னல்கள் கூத்தாடும்). எல்லாம் உங்க தாக்கம் தான் ஹெரிஸ். பாம்பே ஜெயஸ்ரீ – நீங்க நல்லா பாடினாலும் அலுக்கும் நிலைக்கு தள்ள படுமளவுக்கு பாடியச்சு. வேண்டாம் வலிக்குது…அழுதுடுவேன் (வடிவேலு பாணியில்).

குற்றச்சாட்டு 2

ஒரு குத்து, ஒரு இண்ட்ரோ, இரண்டு கொஞ்சும் பாடல், ஒரு வேற்று மொழி பாட்டு (உளறல்) அப்படினு ஒரு சூத்திரத்தைக் கொண்டு செயல் படுவது – ஹெரிஸ் நீங்க ஏ.அர்.அர் கிட்ட சிறிது காலம் வேலைபார்த்தாக கேள்வி. அவர் எத்துனை வகைகளில் பாடல் இசை அமைக்கிறார். அப்படியிருக்க உங்கள் ஆல்பங்களில் பாடல் வகைகள் நான்கை மட்டுமே பெரும்பாலும் காண முடிகிறது. மின்னலேவில் என்ன செய்தீர்களோ அதே தான் இன்று வரை செய்து வருகிறீர்கள். மாற்றம் வேண்டாமா?

குற்றச்சாட்டு 3

உளறல்கள். உங்கள் பாடல்களிடையில் பல உளறல்களைக் கேட்க முடிகிறது – இதற்கு கெசட்டிலோ சி.டி.யிலோ விளக்கமிருப்பதில்லை. முதலில் என் நண்பன் ‘Strange in the Black’ கேட்டவுடன் சாமியாருங்க எதோ யாகம் பண்ணுறாங்கனு சொல்ல நானும் ஹெரிஸ்க்கு பக்தி முத்தி போச்சுனு நினைத்தேன். இப்ப செல்லமே செல்லமே பாடலில் ஜப்பானிய மொழி, உன்னாலே உன்னாலேவில் வரும் ஜூன் போனால் பாட்டில் ஸ்பானிஸ் மொழியையும் உபயொகப் படுத்தி ஆங்கில கலப்பெல்லாம் ஒன்னுமில்லைனு நம்மளக் கலங்கடிக்கறீங்க. மக்களுக்கு புரிந்தால் சரி.

கடவுளே கடவுளே ஹெரிஸ் கிட்டேந்து அந்த கம்ப்யூட்டர் திருட்டுப் போனா என்னவாகும்? ஆதித்தியன் சார் நீங்க அமரன் மூலமா அறிமுகமாகி அசத்தலான ஒரு ஆல்பம் கொடுத்தீங்க. ஆனா அதுக்கப்புரம் தான் தெரியவந்தது சவுண்டு இன்ஞினியர் வெற இசையமைப்பாளர் வெற என்று. இப்ப நீங்க ஜாலியா முண்டாசு கட்டிக்கிட்டு ஜெயா டீவில சமைக்கறீங்க. சார் அப்படியே நம்ம ஹெரிஸையும் கூப்பிட்டு சமையாலாவது சொந்தமா சுவையா செய்ய சொல்லிக் கொடுத்தா நல்லாயிருக்கும்.

ஹெரிஸ் கொஞ்சம் அந்த ஸ்டூடியோவ விட்டு வெளிய வந்து மக்கள் எத கேட்க விரும்பராங்கனு பாருங்க. உங்களுக்கே உங்க பாடல்கள் போரடிக்கலையா? இதுக்கு மேலே நான் ஒவ்வொரு பாட்டை வேறு விமர்சனம் செய்யனுமா? சத்தியமா வேண்டாம்.





சக்கரகட்டி இனிக்கல: இசை விமர்சனம்

15 07 2008

சென்ற மூன்று மாதங்களில், சக்கரகட்டி, ஏ.அர். ரஹமானின் மூன்றாவது பாடல் ஆல்பம். வழக்கமா எ.அர்.அர் வருஷத்துக்கு நாலு இந்திய படங்களுக்கு இசையமைத்தால் பெரிய விஷயம். இப்ப எ.அர்.அர் பொட்டு தாக்குரார். இசைய விமர்சனம் செய்ய சற்று தயங்கினேன். இதற்கு முக்கிய காரணம் ஏ.அர்.அர் இசையமைத்தாலே அதற்கு ஈடு இணையில்லை என்று எண்ணும் ‘ரசிகர் கூட்டம்’. அப்படி பயந்தா வேலைக்கு ஆகுமா என்ன? சரி நேரா விமர்சனத்தில குதிப்போம்.

சாந்தனுவின் முதல் படம் சக்கரகட்டி. சாந்தனு நடிகர் பாக்கியராஜின் மகன்.

1. டாக்ஸி டாக்ஸி – சாந்தனுவின் அறிமுகப் உச்சக்கட்ட பாடல் என்று நினைக்கிறேன். ஆனா ஏன் டாக்ஸி டாக்ஸினு பாடுறாங்கனு புரியலை. பளாசீ, பென்னி தயால் மற்றும் ஜாவத் அலி பாடியுள்ளனர். நல்ல தாளம் இருக்கு. கண்டிப்பா ஆடலுக்காக இசைக்க பட்ட பாடல். பாடல் வரிகள நேரா குப்பைல பொடலாம். என்ன பாடுராங்கனு அவங்களுக்கு புரியல நமக்கு தமிழ்ல பாடலாமேனு தொனுது! நா. முத்துகுமார தூக்கத்துல எழுப்பி பாட்டெழுத சொன்னதால வாய்க்கு வந்தத ஒளறி வெச்சுருக்கார். “ஆசம் டாக்ஸி”னு அப்பப்ப ஒரு பெண் குரல். எதுக்கு இந்த எக்ஸ்டரா வேலைனு தெரியலை. பளாஸியின் ராப் எல்லாம் புளிச்சி போச்சு.

2. மருதாணி விழியில் ஏன்? – அட என்ன அர்த்தம். கண்ல மருதாணி அப்படியே மூக்குல சக்கரகட்டியிருந்தா? இந்த பாடல் சிவாஜியில் வரும் வாஜி வாஜி வாசமிருக்கு. மதுஸ்ரீ தன் வழக்கம் போல தமிழ முழுங்கறாங்க. (எ. கா.) பாலையும் ‘கல்’லாய் பார்க்கிறாய்.

3. ஐ மிஸ் யூ டா – பாட்டு ஒரு சலனம் நிறைந்த குரல் பாட தொடங்குகிறது (சின்மையீ). சுத்தமா எந்த வகையிலும் (genre) இந்த பாடல சேர்க்க முடியாது. உடனே இது தான் ஏ.அர்.அர் பலம்னு சப்ப கட்டுகட்டாதீங்க. நிசமாவே பொரடிக்கும் பாடல் தான், தூக்கம் வருது.

4. எலே – பாட்டின் மெட்டு நல்லாயிருக்கு. ஸ்காட்லேண்டு/ஐயர்லாண்டு நாட்டுகளின் பாரம்பரிய இசையின் வயலின்களை கேட்கலாம். மௌத்தார்கன் பாட்டினை மெருகேற்றுகிறது. வழக்கம் போல நா. முத்துகுமார் சொதப்பல் வரிகள். நரேஷ் ஐயர் மற்றும் கிருஷ் இந்த பாடலை பாடியுள்ளனர் ஆனால் எனக்கு கார்த்திக்கின் குரலே கேட்கிறது.

5. சின்னம்மா சிலக்கமா – இந்த பாடல் மீனாக்ஷி (meenaxi) என்ற ஹிந்தி படத்திலிருந்த அப்படியே எடுக்கப்பட்டுள்ளது. இதுவும் ரஹ்மான் இசையமைத்த படம் தான். நடனமாடக் கூடிய பாடல்.

6. நான் எப்போது பெண்ணானேன்? – இந்த பாடல் மீனாக்ஷி என்ற ஹிந்தி படத்திலிருந்த அப்படியே எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் என் மனத்திற்கு மிக நெருங்கிய பாடல் இது (ஹிந்தியில்). ஒரு நலிணம் காண முடியும். ரீனா பரத்வாஜ் குரல் இந்த பாடலின் அழகை கூட்டுகிறது. ஹிந்தியிலும் இவரே பாடியுள்ளார்.

ஏ.ஆர்.அர் வெளியிட்ட மற்ற இரு சமீபத்து ஆல்பங்களை விட இதில் பாடல்கள் மிகவும் சுமார். ‘எலே’ தவிர எந்த பாடலிலும் புதுமையில்லை. பாடல் வரிகளுக்கு பாடலாசிரியருக்கே அர்த்தம் தெரியுமானு தெரியலை. உதயா, வரலாறு போல் மறக்க வேண்டிய வெளியீடு. கடைக்கு போய் “தாம் தூம்” மற்றும் “சக்கரகட்டி” இருந்தா நான் தாம் தூம் வாங்குவேன்.





அதா – இசை விமர்சனம்

3 06 2008

2002 ஆம் ஆண்டு தொடங்கி 2008 இல் வெளிவந்த இசை வெளியீடு அதா (ஹிந்தி). இசையமைப்பாளர்: ஏ. ஆர். ரஹ்மான். பாடல்கள் பத்து. பத்தும், பத்து விதம். என் மூளைக்கு எட்டின வரைக்கும் யாராலும் ஒவ்வொரு பாடலையும் இவ்வளவு வகை படுத்தி செய்ய முடியுமா என்று தெரியலை.

ஒரு வரி விமர்சனம்

  • கும்சும் கும்சும் – சிவாஜியின் சாஹானா
  • ஹவா சுன் ஹவா – சொன்னாலும் கேட்பதில்லை, காதல் வைரஸ்
  • இஷ்க் அதா (ஆண், பெண்) – வரிகள் ரசனையுடன்
  • குல்ஃபிஷா – தீ தீ, திருடா திருடா
  • மெஹருபா(பாடல், இசை) – கல்லூரி மாணவனின் இசை, good for a love date
  • ஹே தர்த் – கண்ணீரிலே, உயிரே (ஹே அஜ்னபி, தில் சே)
  • மிலோ மிலோ வஹா – எவனோ ஒருவன், அலைபாயுதே
  • தூ மெரா ஹி மெரா – காதலேனும் தேர்வெழுதி, காதலர் தினம்

 

அதா - தெளிந்த நீரோடை புரியாத புதினம். காதல் வைரஸ், காதலே சவாசம் என் சுவாச காற்றே போன்று முழு பாடல் தொகுப்பும் சேமிக்க வேண்டிய ஒன்று. என் முதல் மதிப்பீடு இந்த தொகுப்புக்கு இன்னும் வேலை தேவை என்பதே. கடந்த இரண்டு வாரங்களாக கேட்டதில் – பலே என்று பல இடங்கள் சொல்ல வெச்சுருகார் ஏ. ஆர். ரஹ்மான்.

பாடலின் விவரமான விளக்கம் இங்கே!